Home » எடையின் விலை உயிர்? – ஒலிம்பிக் பயங்கரங்கள்
விளையாட்டு

எடையின் விலை உயிர்? – ஒலிம்பிக் பயங்கரங்கள்

2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான ஐம்பது கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஐம்பது கிலோ எடைப் பிரிவில்`நூறு கிராம்`எடை அதிகமிருந்தார் என்பது காரணம். இந்திய அளவில் இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மல்யுத்த வீரர்கள் அவ்வளவு துல்லியமாக அவர்களுடைய எடையைப் பராமரிக்க வேண்டுமா? எப்படித் தங்களுடைய எடையைக் குறைக்கிறார்கள்? அதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள்? மல்யுத்த வீரர்களுக்கு எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவர்களுடைய விளையாட்டில் ஓர் அங்கமாக இருக்கிறது. இதற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். உடலுக்கு அத்தியாவசியமான உணவுகளையும் தவிர்த்தே எடையைப் பராமரிக்கிறார்கள்.

2021ஆம் ஆண்டு கஜகஸ்தான் தலைநகரம் அல்மாட்டியில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்கள் பெண்கள் என இருபது இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒரு வீராங்கனையான சோனம் மாலிக்கிற்குப் பத்தொன்பதாவது பிறந்தநாள். அவளுடைய நெருங்கிய தோழி அன்ஷு மாலிக் அரைகிலோ கேக் ஏற்பாடு செய்தார். சோனம் மாலிக் பிறந்தநாள் கேக் வெட்டும் போது இந்திய வீரர்கள் எல்லோரும் சுற்றியிருந்தார்கள். வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால் யாரும் கேக் சாப்பிடவில்லை. ஒரு தாளில் புள்ளி வைக்கும் அளவுக்கு சோனம் மாலிக் அந்த கேக்கை எடுத்துக் கொண்டார். அந்த கேக் அப்படியே இருந்தது. அந்த அளவு கட்டுப்பாடு அவசியமான விளையாட்டு மல்யுத்தம்.

ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் பெண்களுக்கு நான்கு வகை உடல் எடைப் பிரிவுகளிலும் ஆண்களுக்கு பன்னிரண்டு வகை எடைப் பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. உடல் எடையைக் குறைப்பது ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் ஒரு பொதுவான நிகழ்வு. போட்டிகள் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே போட்டியாளர்கள் தங்களுடைய உடல் எடையை பராமரிக்கத் தொடங்க வேண்டும். போட்டிக்கு முந்தைய இருபத்து நான்கு மணி நேரங்கள் அவர்களுடைய எடை பராமரிப்பு மிகவும் கடுமையானதாக இருக்கும். ஒவ்வொரு கிராம் எடையையும் பின்தொடர்கிறார்கள். உடல் எடையை அதிகரித்து பின்னர் குறைக்க முயல்கிறார்கள். போட்டி முடிந்த பின்னர் உடலில் இழந்த திரவங்களை மீட்டெடுப்பதற்கும் முறையான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும். ‘எடையை அதிகரிப்பதாலோ குறைப்பதாலோ கட்டுக்குள் வைத்திருப்பதாலோ நீங்கள் பதக்கம் வெல்வீர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. உஸ்கா அலக் டென்ஷன் ஹே (அது இன்னொரு தலைவலி).’ என்கிறார் மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்