Home » பலுசிஸ்தான்: பல்லுக்குள் சிக்கிய பாக்(கு)
உலகம்

பலுசிஸ்தான்: பல்லுக்குள் சிக்கிய பாக்(கு)

உலகின் நீண்ட காலமாக விடுதலைக்குப் போராடும் பிராந்தியங்களுள் பலுசிஸ்தானும் ஒன்று.  ஒரு வகையில் முன்பு இந்தியாவுக்குக் காஷ்மீர் எப்படியோ, அப்படி பாகிஸ்தானுக்குப் பலுசிஸ்தான். எனினும் இந்தியா, தீர்வை நோக்கிப் பல அடிகள் முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் பத்தாயிரம் அடிகளாவது பின்னோக்கிச் சென்றுள்ளது. இதுதான் முக்கியமான வேறுபாடு.

சில ஆண்டுகளாகத்தான் பலுசிஸ்தானில் நடப்பவை கொஞ்சமாவது வெளியே தெரிகின்றன. அந்த அளவுக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதி. இதை எதிர்த்து அமைதிப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களும் நடக்கின்றன. இணையத் தொழில்நுட்பம் ஆளும் இந்த நூற்றாண்டில் ஒரு கட்டத்திற்கு மேல் இச்செய்திகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. கவனம் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே பெரியளவில் திட்டமிட்ட தாக்குதல்களை ஆயுதக் குழுக்கள் மேற்கொள்கின்றன. ஆகஸ்ட் 26, 27 தேதிகளில் நடந்த தாக்குதல் அத்தகைய ஒன்றே.

பேருந்தில் சென்று கொண்டிருந்தவர்களைக் கீழே இறங்கச் சொல்லி, அடையாள அட்டையை வாங்கி, யார் என்று உறுதிப் படுத்திக் கொண்டு சுட்டுக் கொன்றனர். ராணுவத் தளம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தினர். பி.எல்.ஏ. அமைப்பு (BLA – Balochistan Liberation Army – பலுசிஸ்தான் விடுதலைப்படை). இதற்குப் பொறுப்பேற்றுள்ளது. பி.எல்.ஏ. அமைப்பு கிட்டத்தட்ட 100 பேரைக் கொன்றதாகச் சொல்கிறது. செய்தித்தளங்கள், பாகிஸ்தான் அரசு எல்லாம் 30, 40 என ஆளுக்கொரு எண்ணைச் சொல்கிறார்கள். எண்கள் முக்கியமல்ல. விடுக்கப்பட்ட செய்திதான் முக்கியம். ஆங்கிலத்தில் பேசி சீன அரசுக்கும் சேர்த்து எச்சரிக்கை கொடுத்துள்ளது பி.எல்.ஏ. அமைப்பு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • அரிய தகவல்களை அளித்த கோகிலா மேடம் மற்றும் மெட்ராஸ் பேப்பருக்கு நன்றி!

Click here to post a comment

இந்த இதழில்