ஒரு கையெழுத்து பல கோடி மக்களின் தலையெழுத்தை ஒரே வாரத்தில் புரட்டிப் போட்டிருக்கிறது. இப்படி நடக்கும் என்று தெரிந்தே, சிறிது கூட கவலையோ பரிதவிப்போ இல்லாமல் அதைச் செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர். சென்ற வருடத்தில் மட்டும் அமெரிக்கா, தன் பன்னாட்டு நிறுவனத்தின் (USAID) மூலம் $7.2 பில்லியன் பணத்தை...
Tag - வெள்ளை மாளிகை
காலம் என்னவோ எந்தவிதத் தடுப்புகளும் பிரிவுகளும் இல்லாமல் வற்றாத நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம், மாதம் வருடம் என்பதெல்லாம் நமக்காக நாம் ஏற்படுத்திய கணக்குதான். நான் தற்காலம் என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த நொடி கடந்த காலமாகி இருக்கும். நான் எதிர்காலமென நினைத்த நொடியில் நுழைந்துவிட்டிருப்பேன்...
அமெரிக்காவில் பல்லாண்டுகளுக்குப் பிறகு இடது சாரிக் கொள்கையில் பற்றுள்ள, மக்களின் குறைகளைத் தீர்க்கவல்ல பெண் அதிபர் வேட்பாளராகக் களம் காண்கிறார் கமலா ஹாரிஸ். முன்னொருமுறை ஹிலரியும் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார் என்றாலும், ஹிலரியைவிட மக்களுக்கு அதுவும் விளிம்புநிலை மக்களுக்குக்...
வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் தொண்டு நிறுவனத்தின் ஏழு உறுப்பினர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டதற்கு இரண்டு அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்துள்ளது இஸ்ரேல் அரசு. இன்னும் சிலரைக் கண்டித்துள்ளது. பைடன்- நெதன்யாகு. இருவரில் யார் அதிகபட்ச அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதில் போட்டி நிலவுகிறது. அந்த...
சிக்கல்களைத் தீர்ப்பது தினசரி நமது குடும்பத்திலும் அலுவலகத்திலும் படிக்கும் பள்ளியிலும் என எல்லா இடங்களிலும் தேவையான ஒரு திறன். சிக்கல்களைத் தீர்ப்பது பல படிகளைக் கொண்டது. பிரச்சினை அல்லது இக்கட்டான நிலையில் அழுத்தம் அடையாமல் சிந்திப்பது, தரவுகளைக் கொண்டு பல வழிகளைக் கண்டுபிடிப்பது, அதில்...
ஆகஸ்ட் 24, 2023 அன்று எல்லா நாட்டுத் தொலைக்காட்சிகளிலும் இதுவரை காணாத அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் ஒன்று காட்டப்பட்டது. ஜார்ஜியா வழக்கில், முதன்மைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு $200,000 சொந்தப் பிணையில் (Bail bond), வெளியே வந்த அதிபர் டிரம்ப்பின் புகைப்படம்தான் அது..! அமெரிக்க அதிபர்களைப்...
வெள்ளை மாளிகைக்குள் வெள்ளைப்பொடியா? யார் புகைத்திருப்பார்கள் என்பதை விட அது எப்படி உளவுத்துறை மீறி அங்கே வந்திருக்க முடியும் என்பதே மிகப்பெரிய கேள்வியாகச் சென்ற வாரம் இருந்திருக்கிறது. மனிதனுக்குப் போதை தேவையாக இருக்கிறது. தன்னுடைய சோகம், தீர்க்க முடியாத பிரச்னைகளிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க...
இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனின் சந்திப்பு பல எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே ஒருவாறாக நடந்து முடிந்தது. அமெரிக்காவிற்கு, அமெரிக்க அதிபர்களுடைய அழைப்பை ஏற்றுப் பல பாரதப் பிரதமர்கள் இதற்குமுன் வந்து காங்கிரசில் பேசிவிட்டு, வெள்ளை மாளிகையில் விருந்துண்டு சென்றிருக்கிறார்கள். அதிபர்...
அமெரிக்க அரசில், அவ்வப்போது வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்குவது சகஜம். வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்குப் பிடித்த விருந்தை சமைக்கும் அவசரத்தில் அன்றாட சமையலை மறக்கும் மாமியாரைப் போல, இங்கேயும் அவசர அவசரமாக நிதிச்சலுகைகள் மாறும். சென்ற இரு ஆண்டுகள், குறிப்பாக ஓரினச்...
உலகிலேயே அதிக அதிகாரம் கொண்ட அமெரிக்க அதிபர் வாழும் வெள்ளை மாளிகையில், சுக சௌகரியங்களுக்குக் குறைவே இருக்காது. ஆனால் அதிபராக இருப்பவருக்கு அவையெல்லாம் உண்மையிலேயே சுகம்தானா? சொகுசுதானா? பார்க்கலாம். விலை உயர்ந்த விரிப்புகளும் அழகிய ஓவியங்களுமாய், கண்ணைப் பறிக்கும் சாண்டிலியர்களுடன் வெள்ளை மாளிகை...