ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் பத்து நாள்களே இருக்கும் நிலையில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடந்து முடிந்துவிட்டது. இவ்வாக்கெடுப்பு நிலையங்களில் இருந்து வரும் செய்திகள், இது தொடர்பாய் வரும் சமூகவலைத்தளப் பதிவுகள் எதுவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சரி, எதிர்க்கட்சித் தலைவர்...
Tag - ரணில் விக்கிரமசிங்க
இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலானது நடக்க இருக்கிறது. வழக்கம் போன்ற ஓர் ஆட்சிமாற்றத் தேர்தலாய் இருந்தால் ஜனாதிபதி ரணிலும் அவரது உயர் குலாமும் இத்தனை இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கமாட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின்னரான எழுபத்தாறு வருட சிஸ்டத்தின் ஆணிவேர்கள் பெயர்த்து எடுக்கப்படப் போகும்...
தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனின் அறுபத்தெட்டு வருட அரசியல் வாழ்வு, ஜுன் 30-ஆம் தேதி ,அவரது தொண்ணூற்றியொரு வயதில் முடிவுக்கு வந்தது. எட்டு ஜனாதிபதிகளால் தொடர்ச்சியாய் ஏமாற்றப்பட்ட சம்பந்தன், அடுத்த இரண்டு மாதங்களில் தேர்வாக இருக்கும்...
கிழக்கு மாகாண புலிகளின் தளபதி கருணா, புலிகளிடமிருந்து பெயர்த்து எடுக்கப்படாமல் இருந்தால் மகிந்த ராஜபக்சேவுக்கு கிழக்கு மாகாண வெற்றி என்றைக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இப்பிரித்தாளும் சூதைச் செய்தவர் 2002 – 2004ம் ஆண்டுகளில் பிரதமராய் இருந்த ரணில். ஆனால் முழுப் பலனும் மகிந்தவிற்கே கிடைத்தது...
முல்லா நஸ்ருதீனின் மாமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட போது எல்லோரும் ஒரே திசையில் தேட, முல்லா எதிர்த்திசையில் தேடினாராம். மக்கள், ‘இதென்ன கோலம்?’ என்று கேட்டதற்கு ‘அவர் வாழும் காலத்தில் உலகப் பொதுப் போக்குக்கு எதிர் நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்தார்’ என்றாரம் முல்லா. அதேபோல்தான் கடந்த இரண்டு...
மகிந்த ராஜபக்சே, சந்திரிக்கா ஆட்சியில் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு மூலையில் போட்டு வைக்கும் வெறும் தும்புத்தடி போலத்தான் இருந்தார். தேர்தல்களில் வெல்ல வெறும் பிரசாரப் பீரங்கியாய் பயன்படுத்தப்படுவார். மற்றையக் காலங்களில் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது. தான் எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி...
‘இனி அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது. பொது வேட்பாளர் சிரிசேனா வென்றுவிட்டார். இதற்கு மேலும் தாக்குப் பிடிப்பதில் பலனில்லை. அறிவித்து விடலாம்தான். எப்படி அறிவிப்பது..? மக்களோ பழங்கால இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போல அத்தனை பரபரப்பாய்த் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்...
கடைசியாக அது நடக்கப் போகிறது. பொருளாதார நெருக்கடிகளால் மூர்ச்சையாகி இருக்கும் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் நிதி ஆதாரத்தின் முதல் கட்டத் தவணையை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வந்திருக்கிறது. அவ்வளவுதான். பலகட்டத் தடைகளைத் தாண்டி, சொந்த மகளின் கல்யாணக் கோலத்தை நடத்துவதைப் போன்ற பிரக்ஞையுடன்...
2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ விசாரிக்க வேண்டுமென்றார்கள். நான் என்ன செய்துவிட்டேன். எதற்காக விசாரணை என்று சுத்தமாய்ப் புரியவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைது...