‘நான் தோற்கின்ற சூது ஆடுவதில்லை. தேர்தல் வைப்பதே வெல்வதற்குத்தான்’ என்பது மகிந்த ராஜபக்சேவின் பொன்மொழிகளில் ஒன்று. தேர்தல் காலண்டரை அவரளவுக்கு மிகச் சாதுரியமாய்ப் பயன்படுத்தியவர்கள் யாருமில்லை. அவரது கிட்டத்தட்டப் பத்து வருட கால ஆட்சியில் வட மாகாண சபைத் தேர்தலைத் தவிர மற்ற அத்தனைத்...
Tag - மகிந்த ராஜபக்ச
பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் பெரும்பான்மை இனத்தின் அதிபரோ, பிரதமரோ அவ்வினத்தவரால் கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டாடப்படும் போது, சிறுபான்மையினரால் புறக்கணிக்கப்படுவது என்பது அத்தேசம் தோல்வியடைந்ததற்கான அடையாளங்களில் ஒன்று. இலங்கையைச் சிங்கப்பூர் ஆக்கப் போவதாய்ச் சொல்லாத அரசியல்வாதிகள் எவருமில்லை...
முல்லா நஸ்ருதீனின் மாமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட போது எல்லோரும் ஒரே திசையில் தேட, முல்லா எதிர்த்திசையில் தேடினாராம். மக்கள், ‘இதென்ன கோலம்?’ என்று கேட்டதற்கு ‘அவர் வாழும் காலத்தில் உலகப் பொதுப் போக்குக்கு எதிர் நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்தார்’ என்றாரம் முல்லா. அதேபோல்தான் கடந்த இரண்டு...
உலகத்தின் முதலாவது பெண் பிரதமரைத் தேர்ந்தெடுத்த தேர்தல் இலங்கையில் 1960ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. சிலோன் ரேடியோவில் அரசியல் செய்திகளைக் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார். தனிச் சிங்களச் சட்டத்தை அமல்படுத்தப் போய் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பெரும்...
கடந்த வருடம் இதே காலப்பகுதிகளில் கோட்டாபய ராஜபக்சே இலங்கை மக்கள் புரட்சிக்குப் பயந்து ஜனாதிபதி மாளிகையின் பின்கதவு வழியாகக் கொழும்புத் துறைமுகத்திற்கு ஓடி அங்கிருந்து விமானப்படைத் தளத்திற்குப் போய் ஒளிந்திருந்து, மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று சுற்றிவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்து...
இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் புலிகளின் காலத்துக்குப் பிறகு அவர்களுக்குக் குரல் இருக்கிறதா? தமது குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வதற்கும் ராஜதந்திர ரீதியில் சர்வதேசத்தை எதிர்கொள்ளவும் புலிகளுக்கு அரசியல் முகம் ஒன்று தேவைப்பட்டது. விளைவு 2001-ம் ஆண்டு அன்றைய முன்னாள் போராளி...
உலகில் வேறெந்த நாட்டு ஜனாதிபதிக்கும் இவ்வளவு அதிகாரங்கள் இருக்காது. இலங்கை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் எல்லை கடந்தவை. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திரண்டாம் ஆண்டு இலங்கை குடியரசானபோது முதலாவது அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கவர்னர் ஜெனரலாய் இருந்த வில்லியம் கோபல்லாவ என்பவர் ஜனாதிபதியாகிக்...