கமலஹாசனை நவீன நாஸ்ட்ரடாமஸ் என்று அவர் ரசிகர்கள் பிரஸ்தாபிப்பதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவர் தென்காசிக்குக் குடும்பத்துடன் தியானத்திற்குப் போன நேரத்தில்தான், தமிழர்களின் சொற்களஞ்சியத்தில் அந்த வார்த்தை சற்றுக் கூடுதல் அழுத்தத்துடன் வந்து அமர்ந்துகொண்டது. இரு தசாப்தங்கள் முன்புவரையிலும்...
Tag - நகைச்சுவை
சமீப நாட்களாக இக ஒருவிதமான அவஸ்தையில் இருந்ததை அவனது திருமதியானவள் கவனிக்கத் தவறவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று வானத்தை வெறிப்பான். கவனம் எங்கோ உறைந்து நிற்க, “ம்.. என்ன சொன்னே..?” என்று வழக்கத்தைவிட அதிகமாக ‘ழே’யென்று விழிப்பான். அன்றைய தினத்தின் காலையில் அவன் வானத்தை நோக்கி விரல்...
சிலரது படைப்பூக்கம் எப்போது, எப்படி, என்ன விதமாகப் பொங்கும் என்று சொல்லவே முடியாது. இந்த, பால் பொங்குவது – இட்லி மாவு பொங்குவது போலப் பொங்கினால் சமாளித்துவிட முடியும். வேதியல் ஆய்வகத்தில் ப்யூரெட்டிலும் பிப்பெட்டிலும் தவறாக காக்டெய்ல் செய்த அமிலங்கள் பொங்குவது போல காடா நெடியுடன்...
♠ கடுகு இந்தக் கட்டுரையை படித்து முடித்தவுடன் மளமவென்று நகைச்சுவைக் கதை, கட்டுரைகள் எழுதிக் குவிக்கலாம் என்று நீங்கள் எண்ணினால் ஏமாந்துதான் போவீர்கள். காரணம் நகைச்சுவை எழுதுவது சுலபமல்ல. எண்பது சதவிகிதம் எழுத்தாளனுக்கு திறமை இருக்கவேண்டும் இருபது சதவிகிதம்தான் கற்று, கேட்டு, பயின்று, பார்த்து...
♠ ரா.கி.ரங்கராஜன் ‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு ஸ்டவ்கள் எரிந்து கொண்டிருந்த சூடான மேஜைகளை நோக்கி நகர்ந்தார்கள். நானும்தான். என் நண்பர் செல்வராமன், பாலாம்பிகா ஹாலில் தன் மகளின் நடன அரங்கேற்றம் இருப்பதாக...
♠ உ.வே. சாமிநாதையர் திருவாவடுதுறை யாதீனத்து மகா வித்துவானாக இருந்து புகழ்பெற்று விளங்கிய திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றி அறியாத தமிழறிஞர் இரார். பிள்ளையவர்கள் நூற்றுக்கணக்கான மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லியும், பல நூல்களை இயற்றியும் தமிழுலகத்துக்கு ஒப்பற்ற உதவி...
டிவி சீரியல் பார்த்து அழுது கொண்டும், ஓடிடி படங்களைப் பார்த்துக் கொலை காண்டாகியும் கொண்டிருந்த ஒரு தினத்தின் முன்மதியத்தில் எனக்குச் சில அசம்பாவிதத்தின் அறிகுறிகள் தெரிந்தன. காலையிலேயே என் காலிலொரு பல்லி விழுந்து, அல்பாயுசில் மிதிபட்டு இறந்து போனது. இடக்கண் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தது...
♠ கல்கி சம்பாஷணைக் கலையில் ‘விவாதம்’ என்னும் அம்சம் முக்கியமான ஒரு ஸ்தானத்தை வகிக்கிறது என்று சொல்லலாம். உலகிலே வசிக்கும் சுமார் நூற்றி எழுபத்தைந்து கோடி ஜனங்களுக்குள்ளே தினந்தோறும் நடக்கும் பேச்சுகளில் நூற்றுக்கு எழுபத்தைந்து பங்கு ‘விவாதம்’ என்னும் தலைப்பின் கீழ் வரக்கூடியதாகவே இருக்கும். எனவே...
♠ ஜ.ரா. சுந்தரேசன் யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் – நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அவசரம் வேண்டாம். முந்துதல் வேண்டாம். அவரவர் முறை வரும்போது கட்டாயம் பூமி...
♠ சாவி “என்ன உத்தியோகம் சார், இது? பத்து வருசமா நானும் அட்டெண்டராத்தான் இருக்கேன்; நீங்களும் ஹெட்கிளார்க்காகவே இருக்கீங்க. சலிச்சுப் போகல்லே? உத்தியோகத்தை ஒசத்திப் போடச் சொல்லுங்க, சார்!” என்பான் அட்டெண்டர் ஆறுமுகம். “போடா, தூங்குமூஞ்சி! நீ செய்யற வேலைக்குப் பிரமோஷன் வேறே ஒரு கேடா?” என்பார்...