இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி கற்கும் மாணவர்களில் அனேகமானோரின் கனவு ஏதாவது ஒரு ஐஐடி காலேஜில் படிக்க வேண்டும் என்பதே. அதற்கான தேர்வுப் பரீட்சைகளுக்குத் தயாராகப் பல வருடங்களாகப் பெற்றோரும் மாணவர்களும் உழைக்கிறார்கள். ஐஐடி எனும் பிராண்ட் இந்தியாவில் மட்டுமல்ல… உலகெங்கும்...
Tag - தொழில்நுட்பம்
இந்தியாவின் இளைஞர் கூட்டம் உயர்கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் மேலை நாடுகளுக்குச் செல்வது தொண்ணூறுகளிலிருந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆங்கில மொழி பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் பெருமளவில் மாணவர்கள் கல்வி கற்கச் சென்றுள்ளனர். சமீபகாலமாக ஆங்கில மொழி...
ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார். இத்தளத்தை மாற்றி அமைக்க லிண்டா யாக்கரினோவுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் எலான் மஸ்க். அவர் கடந்த ஆண்டு...
‘பிங்க் சிலிப்’ (Pink Slip) என்றிரு வார்த்தைகள். வாசிக்க அழகாய்த் தான் உள்ளன. ஆனால் அர்த்தம் கொடுமையானது. பிங்க் சிலிப் கொடுப்பது என்றால் ஒருவரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்புவது. நவயுக இளைஞர்களின் மிகப்பெரிய பயம் திடீர் வேலை இழப்பு. சமீபகாலமாக நாம் அடிக்கடி கேள்விப்படும் விஷயங்களில் முக்கியமான...
பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் இருபத்தியொரு பட்டப்படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும் / படித்து முடித்திருக்கும் அத்தனை மாணவர்களும் பேச்சற்றுப் போயிருக்கிறார்கள். கல்வி...
சராசரி மனிதருக்குத் தொழில்நுட்பம் கூடுதல் வசதி. மாற்றுத் திறனாளிகளுக்குத் தொழில்நுட்பம் மறுவாழ்வு. தகவல் தொழில்நுட்பம் மாற்றுத் திறனாளிகளின் அன்றாட வாழ்வில் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் மகத்தானவை. அடுத்தவரின் கருணையை எதிர்பாராமல் இவர்கள் தற்சார்புடன் வாழத் தகவல் தொழில்நுட்பம் பேருதவி செய்து...
‘சோபியா’ இளஞ்சிவப்பு வர்ணச் சேலை கட்டியிருந்தாள். கல்கத்தா நகரத்துக் கல்லூரி மேடையொன்றில் ஆரத்தி எடுக்கப்பட்டு அமோகமாக வரவேற்கப்படுகிறாள். அவளது முகம் மகழ்ச்சியில் பிரகாசிக்கிறது. கல்லூரியின் மாணவர்களைப் பார்த்து, “உங்களது முகங்களில் நம்பிக்கை தெரிகிறது! நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்”...
கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையைக் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி டெல்லியில் சந்தித்து உரையாடினார், மெட்ராஸ் பேப்பரின் தொழில்நுட்ப ஆலோசகர் செல்வமுரளி. கடந்த வாரம் எங்கெங்கும் பேசப்பட்ட இச்சந்திப்பின் பின்னணியை முரளி நம்மிடம் விவரித்தார். கூகுள் நிறுவனமும், ஒன்றிய அரசின் தகவல்...