கடைக்குபபோனோம், இருப்பதைப் பார்த்து நமக்குப் பிடித்ததைத் தேர்வு செய்து வாங்கி, வீட்டுக்குக் கொண்டு வந்து சிலகாலம் கழித்துப் பிடிக்கவில்லை என்றால் உடனே விற்றுவிட்டு வேறு பொருள் வாங்கும் மாதிரி இல்லை கார். காரை இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செல்பேசியை மாற்றுவது போல மாற்றுவதும் இல்லை. தினம்...
Tag - செயலிகள்
உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக் கொண்டவை தான். அந்த விண்டோஸில் என்ன புதுமைகள் இந்த ஆண்டு வருகின்றன, எல்லாவற்றிலும் இடம் பெறுகின்ற செயற்கை நுண்ணறிவு இதிலும் வருகிறதா என்பதைத் தெரிந்து...
உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு செயலிகளைத்தான் மொத்த உலகமும் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. உண்மையில் பல லட்சக்கணக்கான செயலிகள் அண்ட வெளியெங்கும் நிறைந்திருக்கின்றன. நாம்...
எந்தத் தகவலும் நமக்கு ஒரேயொரு ‘கிளிக்’ தூரத்தில். மனிதகுல வரலாற்றில் இதுபோன்று வசதியுடன் எந்தவொரு தலைமுறையும் வாழ்ந்ததில்லை. தகவல் நுகர்வுகூட ஒருவகையில் கார்போஹைட்ரேட் போலத் தான். இரண்டையும் தேவைக்கு மிக அதிகமாக நுகர்ந்து கொண்டிருக்கின்றோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மீதான நமது மீச்சார்பு...
நாம் எல்லோருக்கும் கூகுள் என்றவுடன் அவர்களின் தேடுபொறி, யூ-ட்யூப், ஜிமெயில், கூகிள் போட்டோஸ் இவைதான் நினைவில் வரும், இவற்றைத் தாண்டி அவர்களின் சில இலவசச் செயலிகளை நாம் அறிந்து கொண்டால் தினந்தோறும் நம் கணினி/செல்பேசிப் பயன்பாடு எளிதாகும். கூகிள் காண்டாக்ட்ஸ் நம்மில் பலருக்கு இது நடந்திருக்கும்...
நவராத்திரிப் பண்டிகை ஆகட்டும், புதுமனைப் புகுவிழாவாகட்டும்… முன்பெல்லாம் அதற்கான அழைப்பிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்படும். பெரும்பாலும் அஞ்சல் அட்டைகள். இன்று நம்மில் பலருக்கு நம் நெருங்கிய நண்பர்கள், சொந்தங்களின் முகவரியே தெரியாது. எல்லாம் செல்பேசித் தொடர்புதான். அவர்களும் வரும் தபாலைப்...
பூமியில் இன்று ஆண்டவன் இல்லாத சந்து பொந்துகள் சில இருக்கலாம். ஆனால் ஆண்டிராய்ட் இல்லாத இடமே இல்லை. ஆன்ட்ராய்ட் செல்பேசியில் பலரும் பயன்படுத்தும் செயலிகளில் அதிகம் தெரியாத, ஆனால் பயனுள்ள பல வசதிகள் உண்டு. பார்க்கலாம். கூகிள் போட்டோஸ் எனக்குப் படங்கள் எடுப்பது என்றால் உயிர். அதை உடனடியாக நண்பர்களோடு...
பராமரிப்புக் கலையில் முனைவர் பட்டத்துக்கும் மேம்பட்ட ஒன்று உண்டானால் நியாயமாக அதை எனக்குத்தான் தர வேண்டும். நட்போ, உறவுகளோ, கருவிகளோ, அட என்னை நானே பராமரித்துக் கொள்வதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். சல்லி பெற மாட்டேன். அப்பேர்க்கொத்த உத்தமோத்தமன். முன்னொரு காலத்தில் எல்லா இந்தியர்களையும் போல...