இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முதலீடுகளை ஈர்த்ததாக அதானிக்கு எதிராக அமெரிக்காவில் நவம்பர் 20ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. ஆந்திரா, ஒடிஷா, தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மிர், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களைப் பெற சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து மோசடி...
Tag - கோட்டபாய ராஜபக்ச
கடந்த வருடம் இதே காலப்பகுதிகளில் கோட்டாபய ராஜபக்சே இலங்கை மக்கள் புரட்சிக்குப் பயந்து ஜனாதிபதி மாளிகையின் பின்கதவு வழியாகக் கொழும்புத் துறைமுகத்திற்கு ஓடி அங்கிருந்து விமானப்படைத் தளத்திற்குப் போய் ஒளிந்திருந்து, மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று சுற்றிவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்து...
எங்கோ அநாதரவாய்க் கிடந்த அரச வர்த்தமானியொன்றில் இலங்கை வான்படையின் ஏதோ ஒரு தரத்திற்கு ஆட்சேர்ப்பு பற்றிய விளம்பரம் இருந்தது. யாரும் சட்டென்று புரிந்து கொள்ளக் கூடாது என்கிற உன்னத நோக்கத்துடன் விசேடமான தமிழில் நிபந்தனைகள் அச்சேறியிருந்தன. விண்ணப்பதாரி கண்டிப்பாய் இலங்கைப் பிரஜையாய் இருக்க வேண்டும்...
‘சர்வதேச நாடுகள் எல்லாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அச்சத்துடன் பார்க்கின்றன. அவரோடு கவனமாகவே கொடுக்கல் வாங்கல் செய்கின்றன. நமது நாடும் செழிப்புற்று வருகிறது. இன்று உலக அரங்கில் உலாவி வரும் அதிகாராதிபதிகளில் எமது தலைவரும் ஒருவர்.’ என்று ஜனாதிபதி ரணிலின் ஆஸ்தான அல்லக்கைகளில் ஒருவரான...
மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர். ப்ளாஷ் வெளிச்சங்கள் மின்னின. பாவமன்னிப்புப் படலம் ஆரம்பமாகியது. ‘2005ம் ஆண்டு நான் ஒரு சின்னத் தப்பு செய்துவிட்டேன் மக்களே..! சுனாமி நிதியை மோசடி செய்ததாய் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர்...
ஜூலை 9ம் தேதி புரட்சி நடந்தது. அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பற்றிய எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை. என்னதான் ஆனார்? எங்கே போனார்? ஒன்பதாம் தேதி சனிக்கிழமை வரலாறு காணாத மக்கள் வெள்ளம் ஜனாதிபதி மாளிகையின் கேட்டை உடைத்துக் கொண்டு உட்புகும் கணத்திற்குச் சற்று முன்னர் வரை அவர்...
இலங்கையில் நடந்த மக்கள் புரட்சியின் நேரடி வருணனை. கோட்டபாய ராஜபக்ச ‘பதவி விலகுவதாக’ அறிவித்தது அநாவசியமானது; உண்மையில் அவர் மக்களால் நீக்கப்பட்டிருக்கிறார் என்பதைப் புரிய வைக்கிறது இக்கட்டுரை. ‘கோட்டா கோ ஹோம்’ என்று தொண்டை கிழியக் கத்தினது எல்லாம் போதும். இனி முடிவைப் பார்த்துவிடலாம்.’...
இலங்கையின் இன்றைய மோசமான அரசியல்-பொருளாதாரச் சூழல் தமிழர்களை எவ்வகையில் பாதித்திருக்கிறது என்று ஆராய்கிறது இக்கட்டுரை. என் மக்களுக்கு எரிபொருள் வழங்க முடியாது என்று உலகத்தில் பிரகடனப்படுத்திய ஒரே நாடு என்ற சாதனையை இலங்கை கடந்த வாரம் பதித்தது. ‘ஜுலை மாதம் 22ம் தேதி வரை எந்த எரிபொருள் கப்பலும்...