“இஸ்ரேலிய மக்களை எல்லாம் முட்டாள்கள் என்று நினைக்கிறார் அதிபர் நெதன்யாகு. ஃபிலடெல்பியா காரிடரில் இஸ்ரேலியப் படையை நிறுத்துவதெல்லாம் பெரிய ஏமாற்று வேலை” என்கிறார் இலாய் அல்பாக், காஸாவில் பிணைக்கைதியாக இருக்கும் லிரி அல்பாகின் தந்தை. காஸாவின் கிழக்கில் அமைந்துள்ள எகிப்துடனான எல்லை தான்...
Tag - காஸா
“ஒரு தலைவன் மடிந்தால் இன்னொரு தலைவன் வருவான்…” ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனியிடம் விடைபெறும்போது, இஸ்மயில் ஹனியா, கடைசியாகச் சொன்னது இதுதான். சில மணி நேரங்களில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அச்சொற்கள் அவருடைய கடைசிச் செய்தியாக மாறிவிட்டன. புதிதாகப் பதவியேற்ற ஈரான் அதிபருக்கு வாழ்த்துச் சொல்ல...
“எவ்வளவு சீக்கிரம் ஆயுத உதவிகள் கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் போர் முடிவுக்கு வரும்.” என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போரின்போது அவர் கூறிய இதையேதான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இன்று அமெரிக்காவிடம் கேட்கிறார். “உங்கள் விரைவான உதவிகள்...
கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி காஸாவில் போர் ஆரம்பித்தது. இன்று வரை சொல்லொணாத் துயரங்கள் அந்த மக்களைச் சூழ்ந்துள்ளன. சூழலைப் புரிந்துகொண்ட சில நாடுகள் தொடர்ந்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றன. அவற்றில் ஐக்கிய எமிரேட்ஸும் அடங்கும். நவம்பர் ஐந்தாம் தேதி, அதாவது போர் ஆரம்பித்த ஒரு...
ரமலான் மாதம் ஆரம்பித்தவுடன், இரவுச் சிறப்புத் தொழுகைக்குப் பள்ளிவாசல் நோக்கி சாரை சாரையாக இஸ்லாமியர்கள் செல்கிறார்கள். ஐந்து வேளைத் தொழுகையோடு இந்தச் சிறப்புத் தொழுகையான ‘தராவீஹ்’ ரமலான் மாதம் முழுக்க இரவுகளில் அனைத்து மசூதிகளிலும் நடக்கும். ஆனால் பாலஸ்தீனத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில்...
காஸா கடற்பகுதியில் அவசரமாக ஒரு கப்பல்துறையை அமைக்கவிருக்கிறது அமெரிக்கா. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அந்தக் கப்பல்துறை மூலமாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் இன்னும் முடிந்தபாடில்லை. ஐந்து...
பாராசூட்டில் பறந்து வந்த உணவுப் பொருள்கள் அடங்கிய பிரம்மாண்டப் பெட்டி காஸா அகதி முகாம் வீடு ஒன்றின் மீது விழுந்ததில் உள்ளிருந்தோர் இறந்தனர். பாராசூட் மெதுவாகத் தரையிறங்கித்தான் கீழே நிற்கும். உணவுப் பெட்டிகளைத் தாங்கி வந்த ஏழெட்டுப் பாராசூட்கள் என்ன காரணத்தினாலோ விரியாமல் போயின. இதனால், உணவுப்...
உதவி ட்ரக்குகளில் உணவு வாங்குவதற்குக் கூடிய பாலஸ்தீனிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொன்றிருக்கிறது இஸ்ரேல் படை. வடக்கு காஸா வரை உதவி ட்ரக்குகள் வருவதில்லை. காஸாவின் உள்ளே உதவிகளைக் கொண்டு சேர்ப்பதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் வாதப் போர் நடத்த வேண்டியிருக்கிறது...
ஹமாஸ் ‘உடனடியாக’ கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டு 1948 நக்பாவுக்குச் சற்றும் குறைவில்லாத இன்னொரு பேரழிவு நிகழ்வதைத் தடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் மஹ்முத் அப்பாஸ். ஹமாஸ் எப்போதுமே அப்பாஸ் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. பெரும்பான்மை பாலஸ்தீனியர்கள் அப்பாஸ் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகப்...
அக்டோபர் ஏழு தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக ஹமாஸ் பதினெட்டுப் பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தங்கள் தரப்பினை முன்வைத்துள்ளது. ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஐந்தாகப் பிரித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளது ஹமாஸ். பற்றுறுதிமிக்க பாலஸ்தீனியர்கள், அரபு முஸ்லிம்...