Home » காங்கிரஸ்

Tag - காங்கிரஸ்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 131

131. தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் காமராஜ் “கிங் மேக்கர்” என அழைக்கப்பட்டதற்குக் காரணம், அவர் இந்திரா காந்தியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தியதுதான் என்பது சரித்திரம். அதற்கான ஒரு பூர்வாங்க ஏற்பாடுதான் இந்த கே பிளான் என்பது அன்றைய அரசியல் விமர்சகர்கள் கருத்து. நேருவின் சகாக்களான மூத்த காங்கிரஸ்...

Read More
நம் குரல்

இல்லாத கொள்கையும் பொல்லாத கனவுகளும்

புதிது புதிதாக அரசியல் கட்சி தொடங்கப்படுவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. மக்கள் சேவை மட்டுமே நோக்கம் எனில் தொண்டு நிறுவனம் ஆரம்பித்தாலே போதும். ஆண்டுக்கு ஐம்பதாயிரம் மாணவர் படிக்க நிதியளிக்கலாம். அரசு போகாத மலைக் கிராமங்களைத் தேடிப் போய் சாலை அமைக்கலாம். அரசின் பார்வை படாத குக்கிராமங்களில் மருத்துவ...

Read More
இந்தியா

மகாராஷ்டிரத் தேர்தல்: பாஜகவுக்கு விருந்தா? காங்கிரசுக்கு மருந்தா?

மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கான தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடக்கவிருக்கிறது. சுமார் பத்து கோடி வாக்காளர்கள் பங்குபெறும் இந்தத் தேர்தலில் நவம்பர் 23ஆம் தேதி யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். இறுதிக்கட்டக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்யப்போகும் கடைசி...

Read More
உணவு

ஜிலேபியின் தங்கை ஜாங்கிரி

இலேசான புளிப்பும், அளவான தித்திப்பும் முறுக்கு போல நறுக்கெனக் கடிபடும் தன்மையும் கொண்ட பண்டம் ஜிலேபி. மத்தியப் பிரதேசத்தின் காலை உணவில் ஜிலேபிக்கும் இடமுண்டு. தில்லியில் விற்கப்படும் பிரபலமான சாலை உணவு. திருமலை திருப்பதி கோயிலில் ஜிலேபியைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள் எனச் சொன்னாலும் நம்பிவிடுவோம்...

Read More
நம் குரல்

காங்கிரசும் ட்ரெட்மில் ஓட்டமும்

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஹரியானாவில் பாரதிய ஜனதாவும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றுள்ளன. கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றன. அதைப் பொய்யாக்கி பாரதிய ஜனதா வென்றுள்ளது. வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பார்த்தால்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 124

124. ஃபெரோஸ் மரணம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனதும் இந்திரா கட்சியின் காரியக் கமிட்டியில் இருந்து தன் தந்தை நேருவை நீக்கிவிட்டார். இது ஒரு ஸ்டன்ட் என்றால் அது மிகையில்லை. காரணம், காரியக் கமிட்டி உறுப்பினர் என்ற அந்தஸ்த்து இல்லாது போனாலும் நேருவுக்கு, காரியக் கமிட்டிக் கூட்டங்களுக்கு நிரந்தர...

Read More
ஆளுமை

கறார் காஃபூர் பாய்

திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து முடித்தவர் ஏ.ஜி.நூரனி. எழுபதுகளில் குஷ்வந்த் சிங், செய்தியாளர் வேலை செய்த பெண் ஒருவரை அறிமுகப்படுத்த நினைத்தாராம். நூரனிக்கும் இந்த யோசனை பிடித்துத்தான் இருந்தது. ஓபராய் ஓட்டல் லாபியில் சந்திக்க முடிவானது. நூரனி சொல்லப்பட்ட நேரத்திற்குச் சரியாகச் சென்றுவிட்டார்...

Read More
தமிழ்நாடு

அத்திக்கடவு : தலைமுறைகள் கடந்த கனவு

ஒரு திட்டம் அல்லது கணக்கு தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டு அதைத் தொடங்குவது வழக்கம். தமிழக அரசியலைப் பொறுத்த வரை கடந்த அறுபது ஆண்டுகளாக நடந்த தேர்தல்களில் திமுக, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியாகட்டும் அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இந்தத் திட்டத்தைத் தேர்தல்...

Read More
இந்தியா

அக்னிபாத் : எங்கே செல்லும் இந்தப் பாதை?

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசால் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்கள் குறுகிய காலமாக ஒப்பந்த முறையில் பணியில் சேர்வதற்கான திட்டம் இது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள்...

Read More
இந்தியா

கோட்டையில் ஓட்டை

மூன்றாவது முறையாக பிரதமர் ஆகும் வாய்ப்பு மோடிக்குக் கிட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெருங்கட்சியாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் பாருங்கள், தோல்வியடைந்த காங்கிரஸ் தரப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். காலை எட்டு மணிக்கே பட்டாசுச் சரம், சிவப்புக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!