Home » ஓஷோ

Tag - ஓஷோ

தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 23

23. கையளவு கடல் ஜான் ரீட் என்ற எழுத்தாளர் ரஷ்யப் புரட்சியை உருவாக்கிய சம்பவங்களைத் தொகுத்து ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற முக்கியமான நூலை எழுதினார். அதேபோல் அமெரிக்காவிலும் கிரீசிலும் ஓஷோ சிறையில் அடைக்கப்பட்ட நாட்களைக் குறிக்கும் வகையில், ‘உலகைக் குலுக்கிய 12 நாட்கள்’ என்றும்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 22

22. ஞானமும் பணமும் மா ஷீலா எழுதிய சுயசரிதைப் புத்தகத்தில் ஓஷோவைப் புகழ்வது போலும் சில அவதூறுகளை வாரியிறைத்துள்ளார். “ஓஷோ ஒரு திரைக்கதை ஆசிரியர். அவருடைய பாத்திரமாக நடித்த நடிகை நான். மிகவும் கடினமான பாத்திரம் எனக்குத் தரப்பட்டது. ஒரு துளையிட்ட மூங்கிலைப் போல அவர் தனது இசையை இசைக்க நான் என்னை...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 21

21. அவதூறு “மனிதன் இலட்சியங்களால் போதைக்கு ஆட்பட்டிருக்கிறான். ஒவ்வொருவரும் இன்னொருவரைப் போல வாழ விரும்புகின்றனர். தான் என்ன என்பதை மறந்து விடுகின்றனர். போட்டி, பந்தயத்தில் தன்னை அறிந்து கொள்ள மனிதன் தவறிவிடுகிறான். தான் என்னவோ அதைவிட அதிகமாக மாறுவது சாத்தியமற்றது. ஒரு விதையில் இருந்துதான் மரம்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 20

20. கடலை அறியும் வழி பிறப்பை மரணம் ரத்து செய்யக் கூடும். ஆனால் அது வாழ்க்கையை அழித்துவிடாது. வாழ்க்கை பிறப்போ இறப்போ அல்ல. பிறப்புக்கு முன்பு உயிர் இருந்தது. இறப்புக்கு பிறகும் வாழ்க்கை இருக்கும். இதை அறிந்த மனிதனால் மட்டுமே பயமும் துன்பமும் இல்லாமல் இருக்க முடியும். -ஓஷோ ஓஷோ சீரியஸான நபர்களுக்கு...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 19

19. அமன நிலை மீண்டும் குழந்தையாக மாறுவதே தியானம் – ஓஷோ “மனிதன் சிரிக்கத் தெரிந்த மிருகமா..? கடவுளை நான் சிரிப்பு வடிவில் தான் காண்கிறேன். வேறு எந்தத் தியான நிலையிலும் அவனைக் காண விரும்பவில்லை. இருபத்து நான்கு மணி நேரமும் சிரித்த நிலையில் இருப்பவனைதான் நான் கடவுள் என்று கூறுவேன். கடவுள் மனித...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 18

18. ஓஷோவின் தாடி ரகசியம் காஸான், ஜோஸன் ஆகிய இரண்டு ஜென் துறவிகள் பேசியபடி நடந்து போய்க் கொண்டிருந்தனர். அப்போது ஜோஸன் கூறினார், “வாழ்க்கை மற்றும் மரணத்தில் புத்தர் இல்லை என்றால் வாழ்க்கையும் மரணமும் என்னவாக இருக்கும்..?” வாழ்க்கையிலும் மரணத்திலும் புத்தர் இருந்தால், வாழ்க்கை மற்றும் மரணம் பற்றிய...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 17

17. குளமும் கடலும் “புனித நூல்களை உங்கள் மதம் என்று எண்ணி விடாதீர்கள். அவை சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சொற்கள் மனிதர்களைப் பிரித்து விடுகின்றன. சொற்கள் மனித குலத்தையே பிரித்து வைத்துள்ளன. மனிதர்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள் செங்கற்களால் கட்டப்படவில்லை. சொற்களாலேயே...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 16

16. விலகிப் போ! வெற்றி என்பதில் எந்தத் தகுதியும் கிடையாது. உண்மையாகச் சொல்லப் போனால் அது மிகவும் அருவருப்பானது. ஒருவனைத் தோற்கடிப்பது என்பது அர்த்தமில்லாதது. ஆனால் அதைத்தான் மனிதகுலம் விரும்புகிறது. வெற்றி என்பது நம்முடைய பழைய மிருக வாழ்க்கையின் மிச்சம். – ஓஷோ ஓஷோவிடம் ஒரு பெண் தன் மகனை...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 15

15. ஆசான் ஆவது எப்படி? எங்கே உங்கள் வில்லும் அம்புகளும்..? விழியால் ஏழு பறவைகளை ஒரே நேரத்தில் வீழ்த்தமுடியுமா..? முதலில் ஆசானாவது எப்படி என்று அறிந்து வாருங்கள் வித்தை காட்ட. – ஓஷோ ஓஷோவுக்கு ஒரு பழக்கம். படிக்கிற எந்த ஒரு நூலிலும் பலவரிகளை வண்ணப் பேனாக்களால் அடிக்கோடிட்டு வைப்பார். இதனால்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 14

14. ஆம் என்பது ஆன்மா சத்தியத்தை எதற்காகவும் இழக்காதீர்கள். சத்தியத்தைக் காக்க எதையும் இழக்கலாம். – ஓஷோ உண்மை என்பது சத்தியம். சத்தியம் சிவம் சுந்தரம் என்ற மூன்று வார்த்தைத் தாரக மந்திரத்தில் முதல் வார்த்தை சத்தியம். சத்தியம் என்பதை உண்மை என்றும் கூறலாம். ஓஷோ Truth என்று அழைப்பதை நாம் சத்தியம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!