சென்ற இதழில் ‘குரங்கு கையில் ஏகே47’ என்கிற கட்டுரையைப் படித்திருப்பீர்கள். இந்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இஸ்ரேல் படைகள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுட்டு விளையாடுவதற்குத்தான் ரோந்துக்குச் செல்கிறார்கள் என்று நினைக்கும் அளவிற்குத் தாக்குதல்கள் வரைமுறையின்றி நடந்து கொண்டுள்ளன...
Tag - உலகம்
இலங்கையில் ஜனநாயகமும், ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் எந்தளவுக்குச் சிதைந்து போயிருக்கிறதென்றால் ‘மார்ச் 9ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்ற தேர்தல் திணைக்களத்தின் அறிவிப்பைப் பலரும் ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. ‘தேர்தலா, அது நடக்குமா?’ என்று...
தினமும் 20 சிகரெட்டுக்களுக்கு மேல் புகை பிடிப்பதும், 5 பாட்டில்களுக்கு மேல் மது அருந்துவதும் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், நோய்க்கான அறிகுறிகள் தெரியவந்தும், படி ஏறியிறங்கும் போது மூச்சிரைத்தும், புற்றுநோய் என்று ஒரு நாள் மருத்துவர் சொல்லும் போது அதிர்ச்சி வந்து, ‘எனக்கா...
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. இதோ அதோ என்கிறார்களே தவிர போர் முடிவதற்கான அறிகுறியே இல்லை. ஜெயித்துவிடுவோம், ஜெயித்துவிடுவோம் என்று பிரதி உத்திராயண, தட்சிணாயன காலத் தொடக்கங்களில் விளாதிமிர் புதின் அறிவித்துக்கொண்டிருக்கிறார். உக்ரைன் அதிபரோ, ஒவ்வொரு பிரதோஷத்துக்கும்...
‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட அட்டை படபடக்கிறது. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசரம் அவனது உடல்மொழியில் தெரிகிறது. அந்தோ பரிதாபம்! கன்னத்தில் ஓர் அறை விழுந்தது...
பென்கிவிர் வருகையால் இஸ்ரேலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் இனித் தங்களுக்கு விடிவுகாலமே வரப் போவதில்லை என்று துவண்டு போயிருக்கிறார்கள். ‘யார் அந்த பென்கிவிர்?’ என்றொரு கேள்வி உங்கள் மனத்தில் இந்நேரம் எழுந்திருக்கும். அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், வேறொன்றை – இது...
அவரது பெயர் கைஸ் சையத். டியூனிசியாவின் பல்கலைக்கழகங்கள் ஆணையத்தின் இயக்குநர். பல கல்லூரிகளுக்கு விசிட்டிங் பேராசிரியர். 2014-ம் ஆண்டு டியூனிசியா அரசியலமைப்பை எழுதிய சட்டக் குழுவின் முக்கியமான கை. அரபு லீக்கின் மனித உரிமைகள் பிரிவில் முன்னாள் தலைமையதிகாரிகளில் ஒருவர். எல்லாவற்றுக்கும் மேலாக 1995ம்...
உலகவாசிகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி ஒன்று என்றால், சீனர்களுக்கு மட்டும் அது இல்லை. ஏனென்றால் சீனர்களின் ஆண்டு 354 நாட்கள் கொண்டது. நம்மவர்கள் நட்சத்திரப்படி பிறந்ததினம் கொண்டாடுவதைப் போல, சீனர்களுக்குப் புத்தாண்டு தினமானது ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி நடுவில் ஏதோ ஒரு தினம்...
சென்ற வாரம் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் லிபியாவுக்குச் சென்று பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதென்னடா புதிய நல்லுறவு என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் லிபியாவுக்கும் அமெரிக்காவும் ஆதி முதல் ஏழாம் பொருத்தம் என்பது அண்ட...
நமது நாட்டில் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதெல்லாம் மிகவும் எளிதான செயல். நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்ற கட்சி யாரைக் கைகாட்டுகிறதோ அவரே சபாநாயகர். ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை. ஒன்றல்ல இரண்டல்ல. பதினைந்து முறை வாக்களிக்க வேண்டும். விளையாட்டல்ல. உண்மையாகவே. ஏன் 15 முறை வாக்களிப்பு? எதனால் இத்தனை...