டொனால்ட் டிரம்ப், தாம் பதவியேற்ற நாள்முதல் தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். ‘முதலில் அமெரிக்கா பிறகுதான் மற்ற நாடுகள்’ என்ற கொள்கையில் தீவிரமாக இருக்கிறார். உலக நாடுகளுக்கு அமெரிக்கா செய்து வந்த உதவிகளை அடுத்த தொண்ணூறு நாள்களுக்கு நிறுத்தியிருக்கிறார். அமெரிக்க...
Tag - உக்ரைன்
“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலியக் கட்டுங்கோ” என்று புரோகிதர் அமெரிக்க அதிபர் பைடனின் காதில் ஓதிவிட்டார் போல. பதவியில் இருக்கப்போகும் கடைசி நாள்களில் உக்ரனைக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார். அதற்குத் தோதாக லெபனானுடன் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலின் பாரத்தைக்...
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தின் முதல்நாள். அமெரிக்க அதிபர் பைடன் தன் கடைசி உரையை நிகழ்த்தினார். தன் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மூலமும் தனிப்பட்ட முறையிலும் உலகிற்குச் செய்தவற்றை, செய்யப்போகிற காரியங்களைச் சொல்லி மகத்தான அந்த உரையை முடித்தார். அமைதியும்...
பலயனீட்சா. வட்ட வடிவில் கிடைமட்டமாக ஒருபுறம் வெட்டிய உக்ரைனிய பிரட் இது. உக்ரைனியர்களைப் போல நடிக்கும் ரஷ்ய வீரர்கள் அல்லது உளவாளிகளைக் கண்டுபிடிக்க, இந்த ஒரு வார்த்தையைத்தான் சொல்லச் சொல்வார்களாம். இதன் கடைசி அசை ரஷ்ய மொழியில் இல்லாததால், ரஷ்யர்களால் இதை ஒருபோதும் சரியாக உச்சரிக்க முடிந்ததில்லை...
சீக்கிரமே இந்த உலகை விட்டுச் சென்றிருந்த சிறுமலர்களுக்கு, அவர்களுக்கு பிடித்தமான பொம்மையை வைத்து அஞ்சலி செலுத்துகிறார். “அப்பாவி குழந்தைகள் தான் போரினால் மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள். மிகுந்த மன வேதனையைத் தரும் உண்மை இது. இனியும் நேரத்தை வீணடிக்காமல், இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெளிவரப்...
“உக்ரைனியர்கள் தங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க உதவிக்காகக் காத்திருப்பது எதிர்காலத்தில் உதவாது. அதனால் ரைன்மெட்டல் குழுமம் அவர்களுக்கென ஒரு ஆயுதத் தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது” என்று சென்ற வருடம் ஒரு பேட்டி அளித்திருந்தார் ஆமின் பாப்பெர்ஜெர், ஜெர்மனியின்...
இத்தாலியில் கடந்த வாரம் நடந்து முடிந்த G7 உச்சி மாநாட்டில் அரங்கேறிய காட்சிகள், ஒரு வழியாக ரஷ்ய அதிபர் புடினையும் வடகொரிய அதிபரையும் சந்திக்க வைத்திருக்கிறது. இந்த மாநாட்டில் G7 அமைப்பு நாடுகள், சட்டத்தை மீறிப் புலம் பெயர்ந்தவர்கள், பருவச்சூழல் போன்றவற்றைப் பற்றிப் பேசினாலும், முதல் நிலை...
“நாங்கள் மீண்டும் உக்ரைனுடன் இணைவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. எங்களைக் காப்பாற்ற இங்கு யாரும் வருவதில்லை” என்கிறார் கெர்சோன் நகரில் வசிக்கும் கலீனா. இரண்டு வருடங்களாக ரஷ்யாவின் பிடியிலிருக்கும் பகுதி இது. உக்ரைனால் மீட்கப்படுவோம் என்ற கனவுகளுக்கு இனி இடமில்லை என்ற நடைமுறை...
உலகத்தில் 64 நாடுகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. சில நாடுகளில் சமீபத்தில் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 50% மேலான மக்கள், ஐநூறு கோடி மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். மக்களாட்சி அமைப்பின் சக்தியை எண்ணி மகிழ்ச்சியடையத் தோன்றுகிறதல்லவா? ஆனால், மக்கள்...
25 – கெட்டவனுக்குக் கெட்டவன் 24-பிப்-2022. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முதல் தாக்குதல் ஆரம்பமானது. பிரம்மாண்ட ஆன்டோனோவ் விமான நிலையத்தின் மீது விழுந்த முதல் குண்டு அல்ல. ஒன்றரை அடிப் பெட்டிபோல இருக்கும் வையசாட் KA-SAT மோடம்கள் மீது நடந்தது. உக்ரைனின் ஆயிரக்கணக்கான இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. தகவல்...