பளபளக்கும் ஜரிகை வேலைப்பாட்டுடன் மாணிக்கக் கற்கள் பதித்த வெல்வட் ஆடைகளை அணிந்த எழுபத்தைந்து யானைகளின் மாபெரும் பவனி, ‘எசல பெரஹரா’ இந்த மாதம் ஆரம்பமாகிறது. கண்டி மாநகரில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறும் பௌத்த திருவிழா இது. இந்த வருடம் 1712-ஆவது தடவையாக நடைபெறுகிறது...
Tag - இலங்கை
உலக சரித்திரத்தில் இப்படியும் நடக்குமா என்று அசரவைக்கும் சம்பவம் ஒன்று கடந்த வாரம் வடகொரியாவில் பதிவாகி இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.வடகொரியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார் இருபத்து மூன்று வயதான ட்ராவிஸ் கிங் என்ற அமெரிக்க ராணுவ வீரர். தகவல் தொழில் நுட்பத்தில், அறிவியலில், விண்வெளி...
ஒரு தாதிப் பெண் பசியோடு மருத்துவமனையின் சிற்றுண்டிச்சாலைப் பக்கம் போகிறாள். சாக்லேட் ஃபிங்கர்ஸ் ஒரு பெட்டி வாங்கிப் பிரித்து, அவசர அவசரமாகச் சாப்பிடத் தொடங்குகிறாள். திடீரென்று கல்லுப் போல ஏதோ கனக்கிறது. கவனித்துப் பார்த்தால் சாக்லேட்டில் மனித விரல் துண்டு! அதிர்ச்சி, அருவருப்பு எல்லாம் சேர உதறித்...
உயர்ரக உணவுப் பண்டங்களைப் பரிமாறும் உலகின் உன்னதமான விருந்துபசாரங்களில், கம்பீரமாகக் கோப்பைகளில் மின்னும் பொருள் சிலோன் டீ. ஜப்பானின் வக்யு பீஃப், ஸ்கொட்லாந்தின் வைன், லண்டனின் ஜின் மற்றும் இந்தியாவின் சிக்கன் டிக்காவுடன் சரிசமமாகத் தோள் கொடுத்து இலங்கையின் நாமத்தை சர்வதேசத்தில் மணக்க வைக்கும்...
ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நிறைந்தது. ஐந்து முறை பிரதமராகி ஒரு முறையேனும் தன் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்யாமல் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கே சவால்விட்ட ரணில், ஜனாதிபதியாவார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு யாராவது சொல்லி இருந்தால் உலகம் சிரித்திருக்கும்...
நல்ல மயில்நீல நிறத்தில் முகமும், ஐந்தடி உயரத்தில் தீக்கோழி போன்ற கட்டுடலும் கொண்ட மூன்று பறவைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது தாய்லாந்து அரசு. இருபது வருடங்களுக்கு முன் பரிசாகக் கொடுத்த முதுராஜா என்கிற கொம்பன் யானையை ஜூலை மாத ஆரம்பத்தில் மீளப் பெற்றுக் கொண்டதற்குப் பிரதியாகச் செய்த ஏற்பாடு...
கடந்த வாரம் பலஸ்தீன் அதிபர் அல்லது அத்தாரிட்டியின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் சீனாவுக்கு விஜயம் செய்த போது, தம் சரித்திரத்தைவிடப் பழைமையான ஒரு உலகப் பிரச்னையில் மத்தியஸ்தம் வகிக்க விரும்புவதாக அறிவித்திருந்தது சீனா. ஆம். இஸ்ரேல் – பலஸ்தீன் தகராறில் சமாதான சகவாழ்வு விரும்பி என்ற குல்லாவைச் சீனா...
ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு பத்தொன்பது கிலோ மீட்டர். இரு மருங்கிலும் சவுக்கு மரம் மறைத்திருந்தது. ஆனாலும் கொஞ்சம் தூரத்திலேயே நாம் கடலுக்குள் செல்கிறோம் என்ற உணர்வு ஏறபட்டுவிட்டது. அந்த மயான அமைதியை எங்கிருந்தோ கிழிக்கும் காற்றின் சத்தத்தால். ஜடாயு தீர்த்தத்தைத் தாண்டியதும் நீங்கள்...
கொழும்புச் சீமைக்கும் சிங்காரச் சென்னைக்கும் இடையில் தூரம் என்னவோ அறூநூற்றைம்பது கிலோ மீற்றர்கள்தான். ஆனால் இடை நடுவில் ஆர்ப்பரிக்கும் கடலைத் தாண்டிப் போக வேண்டியிருப்பதால் பயணம் எப்போதுமே காஸ்ட்லியானது. இத்தனை காலமும் இந்த இரு புள்ளிகளுக்குமிடையில் கள்ளத்தோணி தவிர்த்து, ஆகாய மார்க்கம் ஒன்றில்...
29 ஆறுமுக நாவலர் (18.12.1822 – 05.12.1879) ஈழத்தின் தமிழறிஞர்களுக்கான அடையாளங்களுள் முக்கியமானவர்; தமிழ்மொழியின் இலக்கியங்களுக்கு உரை, பதிப்பு என இரு விதங்களில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்த முன்னோடி. தமிழ்ச் சுவடிப் பதிப்பின், தமிழ் உரைநடையின் வேந்தர் என்று புகழ்முகம் பெற்றவர். வசனநடை...