Home » இந்தியா

Tag - இந்தியா

இந்தியா

லைக், ஷேர், சப்ஸ்கிரைப்

மத்திய அரசு, படைப்பாற்றல் பொருளாதாரத்துக்காக 8300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் இதை அறிவித்தார். இந்தியாவில் படைப்பாற்றல் துறைக்கென ஒரு தொழில்நுட்பக் கழகம் (IICT) தொடங்கப்பட இருக்கிறது. மும்பையில் 391 கோடி செலவில் உருவாகும்...

Read More
இந்தியா

இந்தியாவில் ஸ்டார்லிங்க்: யாருக்கு லாபம்?

டெஸ்லா மூலமாகத் தரைவழியாக இந்திய வணிகத்தில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் மூலம் வான்வழியாகத் தரையிறங்குகிறார். இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பெரிய நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட...

Read More
இந்தியா

புத்தர் படும் பாடு

புத்தர் ஞானம் பெற்ற இடமாகக் கருதப்படும் மகாபோதி கோயில் பௌத்தர்களுடையதுதானா அல்லது இந்துக்களுக்குச் சொந்தமா என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. இதற்கான சில அடிப்படைச் சட்டங்களை மாற்ற வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக பௌத்தத் துறவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புத்தகயாவும், மகாபோதியும் பௌத்தர்களுக்கு...

Read More
இந்தியா

முதல்ல இருந்து எண்ணுங்க!

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான கருத்துகள் இந்தியாவை வடக்கு, தெற்கு எனப் பிரித்துப் பொதுவெளியில் மிகப்பெரிய விவாதங்கள் நடப்பதற்கான காரணமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென இந்திய...

Read More
இந்தியா

துவாரகை: ஆழ்கடல் சொர்க்க வாசலா?

குஜராத் மாநிலம், துவாரகா கடற்பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நீருக்கடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆழ்கடல் அகழாழ்வு மையம் (Underwater Archaeology Wing) எண்பதுகளில் இருந்தே இந்தப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இப்போது சமீபத்தில் இதற்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள்...

Read More
இந்தியா

தூய்மையும் கயமையும்: ஒரு ‘புனித’ப் பிரச்னை

கங்கை நீர் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் வல்லமை கொண்டது என்று ஓர் ஆய்வு முடிவினை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது. உலகின் ஒரே நன்னீர் நதி கங்கை மட்டும்தான் என்றும் ஓர் ஆய்வுக்குழுவைக்கொண்டு உறுதி செய்திருக்கிறது. இது உண்மைதானா? அறிவியல் என்ன சொல்கிறது? இந்தியாவில் பிறந்த ஹிந்துக்கள்...

Read More
இந்தியா

தலை(வி)நகரம்

இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. மொத்தம் உள்ள எழுபது தொகுதிகளில் நாற்பத்தெட்டு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே டெல்லி சட்டசபைத் தேர்தலில் வென்றது. தேர்தல் வெற்றிக்குப் பிறகே ரேகா குப்தாவை முதல்வராக...

Read More
இந்தியா

மோடியின் அமெரிக்கப் பயணம்: உண்மையில் நடந்தது என்ன?

மிகப் பெரிய மக்களாட்சியின் தலைவர் தானாகவே விரும்பிக் கேட்டுக்கொண்டு அமெரிக்க அதிபரைச் சந்திக்க வந்து சென்றார். இதைத்தான் வெற்றிகரமான பயணமாக நமது ஊடகங்கள் கொண்டாடுகின்றன. அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மோடிக்கு அழைப்பிதழ் இல்லை. அனைத்துத் தூதரகங்களுக்கும் அமெரிக்க மரபின்படி அனுப்பப்பட்டது...

Read More
இந்தியா

ஞானேஷ்குமாராகிய நான்…

இந்தியாவின் இருபத்தாறாவது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார் ஞானேஷ்குமார். ஆறு ஆண்டுகளுக்கு, தேர்தல் ஆணையத்தின் முகமாக இவர் இருக்கப்போகிறார். இதற்குமுன் இவர் இரண்டு தேர்தல் ஆணையர்களுள் ஒருவராக இருந்தார். இவரது பதவியேற்பினால் காலியான ஒரு தேர்தல் ஆணையரின் இடத்துக்கு விவேக் ஜோஷி...

Read More
இந்தியா

அணை கட்டும் போர்

பிரம்மபுத்திரா நதியில், பெரிய அணை ஒன்றைக் கட்டுகிறது சீனா. இதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது இந்தியா. தன்னாட்சி பெற்ற திபெத் பகுதியில் உருவாகும் இந்த நீர் மின்சாரம் தயாரிக்கும் அணைத் திட்டம் உலகிலேயே மிகப்பெரியது. இதைப் பற்றி இந்தியாவுக்கு இருக்கும் கவலை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!