சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பது கிறிஸ்துவுக்கு முன்பிருந்தே புழங்கும் ஒரு சொற்றொடர். ஜூலியஸ் சீஸர் ரோம் சாம்ரஜ்யத்தின் தலைமை போதகராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம். அவர் குடியிருந்த அரசாங்க வீட்டில், அவர் மனைவி போம்பியா ஒரு விருந்து வைக்கிறார். அந்த விருந்தில்...
Tag - இதழ் 1
1. தேசம் காத்தல் செய் குண்டு விழப் போகிறது என்பது தெரியும். முதல் குண்டு ஏதாவது ஒரு கடலோர நகரத்தின் மீது விழும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அடாவடித்தனத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்த முடிவெடுத்துவிட்டார்கள் என்றால் தலைநகரின் மீதே முதல் குண்டைப் போட்டு ஆரம்பித்து வைக்கலாம். அதிபர்...
1 முடிவு யாரு. புதுசா வந்திருக்கற LDC. நம்ம ஆபீஸா. ஓ அது நீங்கதானா. நான் யாரோ வெளியாள்னு நினைச்சிட்டேன். ஜிப்பால வேற இருக்கீங்களா… கிளார்க்காட்டமே இல்லே. ஆர்ட்டிஸ்ட் மாதிரி இருக்கீங்க என்று அவர் ஆங்கிலத்தில் சொன்னது மிகவும் அழகாக இருந்தது. இலக்கிய விருது ஏதோ கிடைத்ததைப் போல உச்சி முடி...
சிரியா தொடங்கி இலங்கை வரை எவ்வளவோ நாடுகளில் என்னென்னவோ சிக்கல்கள், போராட்டங்கள், யுத்தங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எந்த வகையில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு அனைத்தையும்விடப் பெரும் பிரச்னை ஆகிறது? ரஷ்ய-உக்ரைன் போர் ஆரம்பித்தது முதல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வெளியாகும்...
சௌபாக்கியா வெட் கிரைண்டர் ஆதிகேசவன் வென்ற கதை. ‘வீட்டின் வெட் கிரைண்டர் அடிக்கடி பழுதாகி விடும். அதை நானும் என் தந்தையுமே சரி செய்து ஓட்டுவோம். அந்நாளில் கிரைண்டர் ரிப்பேர் என்பது பெரும் பாடு. அதில் சலித்துப் போய், நாம் இதே வெட் கிரைண்டரை நல்ல தரத்தில் உற்பத்தி செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது...
வண்ணக் காகிதங்களில் லட்சக் கணக்கான தொகையை அச்சிட்டுச் சுண்டி இழுக்கும் கலாசாரம்தான் இல்லாமல் போனதே தவிர, ஆன்லைன் லாட்டரிகள் அமோகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆதியில் கே.ஏ.எஸ். சேகர் இருந்தார். பிறகு மார்ட்டின் இருந்தார். பின்னும் பல பெரும் புள்ளிகள் லாட்டரி உலகின் முடி சூடா மன்னர்களாக உலா வந்து...
ஓஷோவை அறியும் கலை – 01 மத்திய பிரதேசத்தின் குச்சுவாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் சூட்டிய பெயர் சந்திரமோகன் ஜெயின். தத்துவத்தில் பி.ஏ. பட்டம் பெற்று கம்யூனிசம், தேசபக்தி, ராணுவம் என ஈடுபாடு கொண்டு எதிலும் மனம் லயிக்காமல்...
வடிவேலு மூலம் பிரபலமான இடம். இன்று வரை தமிழ் கூறும் நல்லுலகம் இதை ஒரு கற்பனைச் சந்தாகவே எண்ணிக்கொண்டிருக்கிறது. இல்லை. உண்மையிலேயே துபாய் குறுக்குச் சந்து ஒன்று உள்ளது. ஆனால் சற்று வேறு மாதிரியான சந்து. துபாயிலேயே பல்லாண்டுக் காலமாக வசித்துக்கொண்டிருந்தாலும் நசீமா அங்கே இதுவரை சென்றதில்லை. மிகச்...
வெற்றி தோல்வியா பெரிது? வித விதமாகச் செய்து பார்ப்பதுதான் பெரிது. ஒட்டகப் பாலில் டீ போட நினைத்து சாக்லேட் செய்து முடித்த கதையை விவரிக்கிறார் சிவசங்கரி வசந்த். ‘ஒட்டகப் பால்ல டீ போடுடா, ஒட்டகப் பால்ல டீ போடுடானு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்’ என்ற வடிவேலுவின் அந்த கிளாசிக் காமெடி...
நம்ப முடியாத அளவுக்கு உக்ரைனுக்கு அள்ளிக் கொடுக்கிறது அமெரிக்கா. காரணமில்லாமல் எதையும் செய்யாத தேசம், இப்போது இதை ஏன் செய்கிறது? நாற்பது பில்லியன் டாலர். அவசர கால நிதி உதவியாக உக்ரைனுக்குத் தருவதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்திருக்கிறது. இது அமெரிக்கர்கள் யாருமே எதிர்பாராதது. காரணம் கோவிட்...