வயது முதிர்வு, உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ்(80) கடந்த ஞாயிறன்று காலமானார். “உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது. கஷ்டப்படவும் இல்லை கஷ்டம் கொடுக்கவும் இல்லை” என்று அவரது மருமகன் சதீஷ் நாராயணன் சொன்னார். “சனியன்று இரவு கூட வழக்கம்போலப் பேசிக்கொண்டிருந்தார். கடந்த இரண்டு...
Tag - ஆளுமை
சேலத்தைச் சேர்ந்த அவ்விளைஞருக்கு எழுதுவதில் ஆசை இருந்தாலும் அப்போதவரை ஒரு சிறுகதைகூட எழுதியதில்லை. கலைமகள் அறிவித்திருந்த நாவல் போட்டி விளம்பரத்தைப் பார்த்தவர் தன் சுற்றுப்புறத்தில் தினம் காணும் சௌராஷ்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பின்புலமாக வைத்து நாவலொன்றை எழுதி அனுப்பினார். அது முதல் பரிசு...
தொழிலதிபர் ரத்தன் டாடா இறந்து போன செய்தி பெரும்பான்மை இந்திய மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. வழக்கமாக ஒரு நிறுவனத்தைச் சார்ந்த பெரிய தலைவர் இறந்தால் அந்நிறுவனத்தின் பங்குகள் விலை வீழ்ச்சியடையும். ஆனால் டாடா நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன. டாடா இறந்த பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் பலர்...
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தின் முதல்நாள். அமெரிக்க அதிபர் பைடன் தன் கடைசி உரையை நிகழ்த்தினார். தன் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மூலமும் தனிப்பட்ட முறையிலும் உலகிற்குச் செய்தவற்றை, செய்யப்போகிற காரியங்களைச் சொல்லி மகத்தான அந்த உரையை முடித்தார். அமைதியும்...
கடந்த சில வருடங்களாகவே, சீதாராம் யெச்சூரியும் ராகுலும் அடிக்கடி இணைந்தே காணப்பட்டனர். ராகுல், அவரின் அறைக்குச் சென்று நெடுநேரம் பேசுவது, எப்போதும் உடனிருப்பது அவர்களது அன்றாடம் ஆனது. ஒரு கட்டத்தில் இரண்டு கட்சிகளுமே இது குறித்து முணுமுணுக்க ஆரம்பித்தன. ‘யெச்சூரிக்கு அவர் கட்சியில் கூட இத்தனை...
திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து முடித்தவர் ஏ.ஜி.நூரனி. எழுபதுகளில் குஷ்வந்த் சிங், செய்தியாளர் வேலை செய்த பெண் ஒருவரை அறிமுகப்படுத்த நினைத்தாராம். நூரனிக்கும் இந்த யோசனை பிடித்துத்தான் இருந்தது. ஓபராய் ஓட்டல் லாபியில் சந்திக்க முடிவானது. நூரனி சொல்லப்பட்ட நேரத்திற்குச் சரியாகச் சென்றுவிட்டார்...
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மறக்க முடியாத விஷயம் ஒன்று உண்டென்றால் அது செவ்வக வடிவிலான மஞ்சள்நிறப் பெட்டி தான். அந்தத் தகரப்பெட்டியில் உள்ள பொருட்கள் சில. காம்பஸ், கவராயம் எனச் சொல்லப்படும் டிவைடர், கோணங்களை அளக்க உதவும் பிளாஸ்டிக் அளவீடுகள் (கோணமானி) இரண்டு. இது தவிர...
தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனின் அறுபத்தெட்டு வருட அரசியல் வாழ்வு, ஜுன் 30-ஆம் தேதி ,அவரது தொண்ணூற்றியொரு வயதில் முடிவுக்கு வந்தது. எட்டு ஜனாதிபதிகளால் தொடர்ச்சியாய் ஏமாற்றப்பட்ட சம்பந்தன், அடுத்த இரண்டு மாதங்களில் தேர்வாக இருக்கும்...
கடந்த வாரம் சென்னை கீழ்க்கட்டளை, போரூர், மேடவாக்கம் பகுதிகளில் மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டரை லட்சங்களை அதற்கு உபயமாக அளித்தவர்கள், தமிழ் யுடியூபர்கள். காரணம் இல்லாமல் இல்லை. ஜேம்ஸ் ஸ்டீபன். ஜிம்மி டொனல்டுசன் என்னும் பெயர் கொண்ட மிஸ்டர்...
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்தது இன்றைய கிருஷ்ணா மாவட்டம். அந்த மாவட்டத்தில் உள்ள பெதபருபுடி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த அச்சிறுவன் சாதாரணமாகப் பிறந்து, வாழ்ந்து, செல்வதற்காகத் தான் பிறக்கவில்லை என்பதை உணர்ந்திருந்தான். சிறு வயதிலேயே ஊறுகாய்ப் போத்தல்களை வீடு வீடாகச்...