புத்தாண்டு பிறந்தால் தீர்மானமே தேய்ந்து போகுமளவிற்குத் தீர்மானம் எடுப்பதுதான் வழக்கம். சரி… இன்றோடு புத்தாண்டு தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்டது. அப்படித் தீர்மானம் எடுத்தவர்கள் எடுத்த அன்றோடு மறந்துவிட்டார்களா? நினைவில் வைத்து நகர்கிறார்களா? எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்? பல்வேறு...
Tag - ஆண்டறிக்கை
என்னதான் அமெரிக்கா என்றாலும் நான் இருப்பது ஒரு மிகச்சிறிய நகரத்தில்தான். எந்தவொரு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையை நாடவேண்டுமென்றாலும் கண்டிப்பாக இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இல்லையெனில் வான்வழி மருத்துவ ஊர்திதான். உடனே கிடைக்கும். ஆனால் சொத்தை எழுதி வைத்துவிட வேண்டும். வருடத் தொடக்கத்தில்...
புத்தகம் இசை ஆன்மிகம். சிறு வயதிலிருந்து என் விருப்பங்கள் இவ்வளவுதான். கவனம் வேறு பக்கம் சென்றதில்லை. அமைந்த சூழல் அப்படி. என் அப்பா, சிறுவயதில் என்னை யோகிராம் சூரத்குமார் பஜனைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். அவரைக் கற்பது, சொற்பொழிவுகளைக் கேட்பதில் தொடங்கி என்னுடைய 27வது வயது வரை வாழ்க்கை...
டிசம்பர் 31 இரவு வழக்கமாக நண்பர்களுடனும் ஜனவரி 1 காலை குடும்பத்தினர்களுடனும் கொண்டாட்டமாய்ப் புது வருடம் துவங்கும். 2022-ம் வருட தீபாவளிக்கு முதல் நாள் நவம்பர் ஒன்றாம் தேதி குழந்தைகளுக்குப் பட்டாசுகள் வாங்கச் சென்ற போது ஒரு சிறு விபத்தில் கை மணிக்கட்டு எலும்பு உடைந்து விட்டது. விபத்து சிறியது...
2022க்கு ஓர அருஞ்சிறப்பு உண்டு. அது நூறாண்டுகளில் கண்டிராத ஒரு பெருந்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விடுவித்துக் கொண்டதைப் பார்த்தது. இந்தத் தலைமுறையினருக்கு கிடைத்த அரிதான உணர்வு இது. 2020 ஜனவரி வாக்கில் நான் அப்போது செய்து கொண்டிருந்த ஒரு திட்டச் செயலாக்கம் நிறைவை எட்டியது. சுமார் இரண்டாண்டுகள்...
அமெரிக்க அரசில், அவ்வப்போது வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்குவது சகஜம். வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்குப் பிடித்த விருந்தை சமைக்கும் அவசரத்தில் அன்றாட சமையலை மறக்கும் மாமியாரைப் போல, இங்கேயும் அவசர அவசரமாக நிதிச்சலுகைகள் மாறும். சென்ற இரு ஆண்டுகள், குறிப்பாக ஓரினச்...
சொந்தமாக ஒரு வீடு வேண்டும். ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு எழுத்து பழக வேண்டும். இரண்டு கனவுகள் இருந்தன. நெடுங்காலமாக. கனவு காணத் தொடங்கிப் பல வருடங்களுக்குப் பிறகு முதல் கனவு நிறைவேறியது. அதற்கும் நான்காண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு இரண்டாவது கனவும் நிறைவேறுகிறது. நிறைவேறுவதெல்லாம் மகிழ்ச்சிதான்...
வரிசை வரிசையாக நிற்கப் போகிறோம் என்று சத்தியமாக யாருமே எதிர்வுகூறவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பம் எனக்கு அமோகமாகத்தான் இருந்தது. எண்ணற்ற பிரார்த்தனைகளால் சூழப்பட்டிருந்த ஆறு வயது மகன் பூரண சுகம் பெற்று வெளி உலகைத் தரிசித்த நல்வருடம் இது. மஹரகம புற்று நோய் வைத்தியசாலையும் கையுமாக ஓடிக்கொண்டிருந்த...
2007ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தின் ஒரு கடுங்குளிர் நாள். அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் என்னோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு விமானமும் தரையிறங்கியது. பறப்பது, அந்த விமானத்திற்கு எத்தனையாவது முறை என்ற தரவுகள் என்னிடமில்லை. ஆனால் நான் பறந்தது அது தான் முதல் முறை. ஒரு விவசாயக் கூலியின்...
2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ விசாரிக்க வேண்டுமென்றார்கள். நான் என்ன செய்துவிட்டேன். எதற்காக விசாரணை என்று சுத்தமாய்ப் புரியவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைது...