Home » சட்டைமுனி என்கிற வேதியியல் வல்லுநர்
ஆன்மிகம்

சட்டைமுனி என்கிற வேதியியல் வல்லுநர்

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவராகக் கருதப்படும் சட்டைமுனி சித்தர், பிறப்பால் ஒரு தேவதாசியின் மகன் என்கிறார்கள். தனது தாய், தந்தையுடன் பிழைப்புக்காக இலங்கையிலிருந்து தமிழகம் வந்த சட்டைமுனி சித்தர் வயல்வெளிகளில் விவசாயக் கூலியாக வேலைப் பார்த்திருக்கிறார். மழைப் பொய்த்து, விவசாயம் இல்லாத காலங்களில் கோயில் வாசல்களில் யாசகம் பெற்று தனது தாய், தந்தையைக் காப்பாற்றியிருக்கிறார்.

அப்படி இருந்த காலக்கட்டத்தில், ஒரு கோயில் வாசலில் , வடக்கே இருந்து வந்த ஒரு துறவியைப்பார்த்து, அவருடைய தோற்றத்தில் ஈர்க்கப்பட்டு, அவரிடத்தில் தனது நிலைமையினைச் சொல்லி இவர் வருத்தப்பட்டிருக்கிறார். அந்தத் துறவியும் இது விதியென ஏற்றுக்கொள். ஆனால், இந்த நிலை விரைவில் மாறும் என உபதேசம் செய்திருக்கிறார்அவரது வாக்கு அப்படியே பலித்திருக்கிறது. அதன்பின்பு சட்டை முனியின் வாழ்வில் ஏற்றமும், முன்னேற்றமும் தொடர்ந்திருக்கிறது. அவர், அப்படியே இருந்திருந்தால் நமக்கு ஒரு சித்தர் கிடைக்க வாய்ப்பில்லையே. ஒருகட்டத்தில் லௌகீக வாழ்க்கையில் சட்டை முனிக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அந்தச் சமயத்தில் மீண்டும் அந்தத் துறவியே அவருக்கு உதவுகிறார். நீ எல்லாவற்றையும் உதறிவிட்டு துறவியாகச் சம்மதமா எனக்கேட்கிறார். சட்டை முனியும் சம்மதம் தெரிவிக்க, போகர் என்றொரு சித்தர் இருக்கிறார். நீ எப்பாடு பட்டாவது அவரை பிடித்துக்கொள் என உபதேசம் செய்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

    • எழுத்துப் பிழையைச் சுட்டியமைக்கு நன்றி. மாற்றிவிட்டோம். – ஆசிரியர்.

Click here to post a comment

இந்த இதழில்