Home » Home-06-07-22

வணக்கம்

இந்த இதழில் இன்னும் இரண்டு புதிய கரங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். ந. ஜெயரூபலிங்கம், ஶ்ரீதேவி கண்ணன். முன்னவரின் சிறுகதையும் அடுத்தவரின் கட்டுரையும் உங்கள் ரசனைக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழில் சிறப்பாகவும் கூர்மை குன்றாமலும் எழுத எங்கெங்கிருந்தோ, எவ்வளவோ பேர் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களைக் கவனப்படுத்தும் பணியை மெட்ராஸ் பேப்பர் தவறாமல் செய்யும்.

சிறப்புப் பகுதி, இம்முறை ஆன்லைன் ஷாப்பிங். இது இல்லாத தமிழர் வாழ்வே இல்லை என்னும் சூழல் உருவாகிவிட்டது. குறிப்பாக நகர்ப்புற-சிறு நகர்ப்புற மக்களின் அன்றாடங்கள் பெரும்பாலும் ஆன்லைனை நம்பி இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் காய்கறி, இறைச்சி, மளிகைப் பொருள்கள் முதல், தேவையான அனைத்துமே ஆன்லைன் வழி வாங்கும் வழக்கம் பெருகி இருக்கிறது. கடைக்குப் போகவும் நேரமில்லாத வாழ்க்கைச் சூழல். இதனைப் புரிந்துகொண்டு, காய்கறிகளை நறுக்கிப் பொட்டலம் கட்டி விற்கும் கடைகளும் பெருகி இருப்பதைக் காண்கிறோம். நறுக்கிய கேரட், துருவிய தேங்காய், அப்படியே எடுத்து அடுப்பில் போட்டு வாட்டிச் சாப்பிடத் தயாரான பதத்தில் சப்பாத்தி, பரோட்டா வகையறாக்கள், ரெடிமேட் வத்தக் குழம்பு என்று பல வீட்டு வாசல்களில் அதிகாலை நேரம் பார்சல்களில் வந்து அமர்ந்திருப்பவை நமக்கு மௌனமாகத் தெரிவிக்கும் உண்மைகள் அநேகம்.

பணிச் சூழல் நம்மை வாழ முடியாமல் ஆக்கிக்கொண்டிருக்கிறதா? அல்லது நாம் வாழத் தெரியாதவர்கள் ஆகிக்கொண்டிருக்கிறோமா? இந்த இதழில், ஆன்லைன் ஷாப்பிங்கின் சாதக பாதகங்களை விளக்கும் கட்டுரைகளோடு, இந்தத் துறை எப்படி இயங்குகிறது என்று உள்ளே இறங்கி ஆராயும் கட்டுரை ஒன்றும் (எப்படி நடக்கிறது இணைய வர்த்தகம்?) இடம் பெற்றுள்ளது.

துபாயில் திறக்கப்பட்டிருக்கும் முகம்மது பின் ராஷித் நூலகம் மற்றும் சென்னையின் அடையாளங்களுள் ஒன்றான தேவநேயப் பாவாணர் நூலகம் - இரண்டினைக் குறித்தும் இந்த இதழில் அடுத்தடுத்து எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இது பரபரப்புக்காகவோ, அவல ஒப்பீட்டுக்காகவோ செய்யப்பட்டதல்ல. நூலக இயக்கம் என்பது ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய புதிய வாசகர்களைச் சத்தமின்றி உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இருக்கும் சொற்ப வாசகர்களையும் தூரத் தள்ளி வைக்கும் விதமாக அது இயங்குமானால் (அல்லது இயங்காதிருக்குமானால்) என்ன பயன்? தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறை விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

இலங்கையின் பொருளாதாரச் சீரழிவு நிலை அதன் உச்சத்தை நோக்கிச் சென்றிருக்கிறது. மொத்த தேசமும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துத் தடுமாறி நிற்கும் சூழலில், இம்மாபெரும் பிரச்னையை ஈழத் தமிழர்கள் எவ்வாறு காண்கிறார்கள்; பொருட்படுத்துகிறார்கள் என்பதை ஆராயும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரையும்; இலங்கையின் கல்வித் துறை வரலாறு காணாத தேக்கத்தைச் சந்தித்திருக்கும் சூழலை விவரிக்கும் நர்மியின் கட்டுரையும்; ஹாங்காங் சீனாவின் வசம் சென்று இருபத்தைந்தாண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு அம்மண்ணின் இன்றைய வளர்ச்சி நிலையை ஆராயும் பூவராகனின் கட்டுரையும் கூர்ந்து வாசிக்கப்பட வேண்டியவை.

மெட்ராஸ் பேப்பர் தொடங்கி, இது ஆறாவது இதழ். தொடர்ந்து இதனை ஆதரித்து வரும் வாசகர்களுக்கு நன்றி. சிக்கல் மிகுந்த சர்வதேச விவகாரங்களை எளிய தமிழில் தொடர்ந்து உங்களுக்கு வழங்கும் பணியை இதழ்தோறும் மேம்படுத்திக்கொண்டே இருப்போம். இது நாங்கள் தரும் வாக்குறுதி. இதழ் உங்களுக்குப் பிடிக்குமானால் உங்கள் நண்பர்களுக்கு மெட்ராஸ் பேப்பரைப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள்.

இது நாம் இணைந்து இழுக்க வேண்டிய தேர்.

சிறப்புப் பகுதி: ஆன்லைன் ஷாப்பிங்

ஊரும் உலகமும்

உண்மையும் புனைவும்

வரலாறு முக்கியம்: தமிழர் வர்த்தகம்

தொடரும்

தொடரும் நாவல்

ஆபீஸ் – 17

17 வீடும் பொருளும் டிவி வரப்போகிறது என்பதில் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை. காரணமேயில்லாமல் ஆபீஸில் அங்குமிங்கும் போய்வந்துகொண்டு இருந்தான். சாவித்ரி மேடம் முதல் சிப்பாய் பாபு வரை, செக்‌ஷனில் இருந்த அத்தனைப்பேரும் என்ன விஷயம் என்று கேட்குமளவிற்கு பரபரப்பாக இருந்தான். யாரிடமும் பிடிகொடுத்துப்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 16

16. ஒலியும் ஒளியும் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்றான தெருக்கூத்து பற்றி நாம் அறிவோம். பெரும்பாலானோர் உங்களது சிறுவயதில் திருவிழா சமயத்தில் தெருக்கூத்து பார்த்திருப்பீர்கள். இப்போதும் பல கிராமப் பகுதிகளில் திருவிழா நேரத்தில் தெருக்கூத்து நடத்தப்படுகிறது. தெருக்கூத்துக் கலைஞர்கள் ஒப்பனை...

Read More
ஆன்மிகம்

சித் – 17

17. அது வேறு உலகம் தோற்றமும் முடிவும் இல்லாத சில சித்தர்களைக் கண்டோம். இன்னும் எவ்வளவே பேர் இவ்வரிசையில் இருக்கிறார்கள். அவர்களையும் அறிவதற்கு முன்னால் சித்தர்களின் உலகைப் பற்றிச் சிறிது தெரிந்துகொள்வோம். சித்தர்கள் உலகம் எங்கே இருக்கிறது? அங்கே செல்ல என்ன மாதிரியான வாகனத்தில் செல்ல வேண்டும்? அந்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 17

17. முதல் ‘ஃபீஸ்’ என்னதான் செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், மகனைக் கடல் கடந்து பள்ளிக்கூடப் படிப்புக்கே அனுப்பி வைத்து, அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருந்தாலும், தன் மகனை ஒரு நண்பன் போல நடத்தினாலும், அப்பாக்கள், அப்பாக்கள்தானே? ஜவஹருக்கு வேண்டிய அளவுக்குப் பணம்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 17

17. குளமும் கடலும் “புனித நூல்களை உங்கள் மதம் என்று எண்ணி விடாதீர்கள். அவை சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சொற்கள் மனிதர்களைப் பிரித்து விடுகின்றன. சொற்கள் மனித குலத்தையே பிரித்து வைத்துள்ளன. மனிதர்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள் செங்கற்களால் கட்டப்படவில்லை. சொற்களாலேயே...

Read More
error: Content is protected !!