Home » கலாசாரத்துக்குப் போதாத காலம்
நம் குரல்

கலாசாரத்துக்குப் போதாத காலம்

ஆளுநர் ஆர்.என். ரவி

இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே சமயம் ஒரு தேசமாக இதைக் கட்டியெழுப்பிக் காப்பதிலும் சமரசமற்று இருப்பதுதான் இதில் முக்கியமானது.

சுதந்தரத்துக்குப் பிறகு சமஸ்தான ஒருங்கிணைப்பு நடைபெற்றது. அது அவசியமானது. பாகிஸ்தான் பிரிந்து சென்றபின் எஞ்சிய நிலப்பரப்பு ஐந்நூற்று இருபத்தாறு சமஸ்தானங்களாகக் குறுநில மன்னர்களால் ஆளப்படுவது என்பது நவீன காலத்துக்கு ஏற்புடையதாக இருக்க முடியாது. ஒரே பெரிய ஜனநாயக தேசமாக இந்தியாவைக் கட்டமைக்க மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கை அது.

நிர்வாக வசதி கருதி மாநிலங்களாக ஒரு தேசம் பிரிக்கப்படுவது உலகெங்கும் உள்ள நடைமுறையே. இந்தியாவைப் பொறுத்தவரை, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்று 1920லேயே (நாக்பூர் காங்கிரஸ்) பேசப்பட்டிருக்கிறது. பிறகு சில கமிஷன்கள் அமைக்கப்பட்டன. (தார் கமிஷன், ஜேவிபி கமிஷன்) வாதப் பிரதிவாதங்கள், ஆதரவு-எதிர்ப்பு நிலைபாடுகள் அனைத்தையும் கடந்து, மொழிவழி மாகாணப் பிரிவினை நாட்டு நலனுக்கு நல்லதல்ல என்று முடிவுக்கு வந்தார்கள். 1950ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு வடிவம் பெற்றபோது மொழிவழி மாகாண ஏற்பாடு அதில் இல்லை.

இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், சிறிய அளவில் கலவரங்கள் என எல்லாம் இருந்தன. தெலுங்கு பேசும் மக்களுக்கான மாநிலமாக ஆந்திரம் உருவாக வேண்டும் என்று பொட்டி ஶ்ரீராமுலு போராடி, உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். வன்முறை பெரிய அளவில் பரவத் தொடங்கியது அதன்பிறகுதான். அவற்றின் தொடர்ச்சியாகவே 1953ம் ஆண்டு, முதல் மொழிவாரி மாகாணமாக ஆந்திரத்தை அறிவித்தது இந்திய அரசு.

பிறகு ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஃபஸல் அலி, கே.எம். பணிக்கர், குன்ஸ்ரு ஆகியோரை உள்ளடக்கிய மாநில மறுசீரமைப்பு ஆணையம் ஒன்று நிறுவப்பட்டது. அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மேலும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு (1956) மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பதிநான்கு மொழிவாரி மாநிலங்களும் ஆறு யூனியன் பிரதேசங்களுமாக வகுக்கப்பட்டது அப்போதுதான்.

இத்தனை விரிவாக இதனை இப்போது சொல்ல ஒரு காரணம் உண்டு. சமீபத்தில் தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி, மாநிலங்களுக்கென்று தனிப்பட்ட கலாசார அடையாளங்கள் ஏதுமில்லை என்று ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • ஆளுநருக்கு மாநில கலாச்சாம் மொழிகளின் மீது கோபமில்லை ????ஆனால் வரும் தேர்தலில் பாஜவிற்கு தோல்வி பயத்தை உண்டாக்கும் மாநில கட்சிகளின் மீது தான் பயம் !!!அதன் வெளிப்பாடு தான் இது

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!