சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், சில ஆரம்பத் தடுமாற்றங்கள் அந்தப் பாடப்புத்தகங்களில் இருந்தன. சுட்டிக்காட்டப்பட்டதும் உடனடியாக அவை சரி செய்யப்பட்டன. அந்த ஒரு குறுகிய காலச் சம்பவத்தைத் தவிர, தமிழ்நாட்டு அரசின் பாடத் திட்டங்களில் எப்போதும் சிக்கலோ, குறையோ இருந்ததில்லை.
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி, ஒருங்கிணைந்த பாடத்திட்டம், அரசு-தனியார் பள்ளித் தர இடைவெளியைக் குறைத்தல், கற்றல் முறையை எளிதாக்குதல், அனைத்துக்கும் மேலாக, அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் பாடப் புத்தகங்கள் என்பது தமிழ்நாட்டு அரசின் பள்ளிக் கல்விக் கொள்கையின் அடிப்படை.
மற்ற எந்தத் துறையில் என்ன நடந்தாலும், கல்வித் துறையில் மட்டும் தமிழ்நாடு பின்தங்கி நின்றதேயில்லை. பள்ளிக் கல்வித் தேர்ச்சி விகித அடிப்படையில் இந்திய மாநிலங்களை வரிசைப்படுத்தினால் எப்போதும் முதல் ஐந்தாறு இடங்களுக்குள் தமிழ்நாடு இருக்கும். நாடறிந்த இவ்வுண்மை நமது ஆளுநருக்குத் தெரியாதது வருத்தமளிக்கிறது.
பள்ளிக் கல்வியின் அடிப்படைகள் இரண்டு. நமது நிலத்தின் பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு, நிலவியல், மொழி-இலக்கணம் உள்ளிட்ட வேர்க் கல்வியின்மீது மாணவர்களின் எதிர்கால நலன் சார்ந்த அறிவியக்கக் கட்டுமானத்துக்குச் சரியான, வலுவான அடித்தளத்தை அமைப்பது ஒன்று.
செம!