Home » தள்ளிப் போடாதீர்!
நம் குரல்

தள்ளிப் போடாதீர்!

நிர்வாகக் காரணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எளிய மக்களுக்குச் சரியாகப் புரியாமல் போக வாய்ப்புண்டு. அதைப் புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை.

உதாரணமாக, தமிழ்நாட்டின் பல ஊராட்சி அமைப்புகளை நகராட்சி – மாநகராட்சி நிர்வாக அமைப்புகளுடன் இணைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு முயற்சி எடுத்து வருகிறது. அரசுக்கு மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கே இதனால் பல நன்மைகள் விளையும் சாத்தியங்கள் உண்டு. கிராமப்புற வளர்ச்சியை உத்தேசித்துச் செய்யப்படும் இத்தகு ஏற்பாடுகளை மக்களுக்கு முறைப்படிப் புரியவைக்காவிட்டால் சிக்கல்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள முப்பத்தாறு மாவட்டங்களுள் ஒன்பது மாவட்டங்கள் நீங்கலாக இதர பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. தேர்தல் நடந்த மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரி 2025 உடன் முடிவடையவிருப்பதால், இப்போதே திட்டமிட்டு அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டியது கட்டாயமாகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்