Home » அந்தக் குழந்தையே இவர்தான்!
ஆன்மிகம்

அந்தக் குழந்தையே இவர்தான்!

வாரணாசியில் அரசு அதிகாரியாக இருந்த அந்த ஆங்கிலேயரின் பெயர் பிராம்லி. அங்குள்ள ஒரு பூங்காவில் தனது மனைவியுடன் மாலை நடைப்பயிற்சியில் இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு சாமியார் நிர்வாணமாகத் திகம்பரத் தோற்றத்தில் அவர்களைக் கடந்து சென்றார். தனது மனைவியுடன் நடந்து வரும்பொழுது இப்படியொரு ஆள் கடப்பது பிராம்லிக்குப் பிடிக்கவில்லை. கோபமாகத் திரும்பிச் செல்ல உத்தரவிட்டார் அவர். அந்தச் சாமியார் அவர் சொன்னதைக் காதிலேயே வாங்காமல் நடக்க ஆரம்பித்தார். தனது கையிலிருந்த சவுக்கால் அவர்மேல் ஓங்கி அடிக்க, அதுவும் அவரை ஒன்றும் செய்தபாடில்லை. ஏனெனில் அடி விழுந்தது அவர் மனைவியின் முதுகில். தழும்பானதும் அந்தப் பெண்ணிற்குத்தான். காவலர்களை அழைத்து அந்தச் சாமியாரை ஓர் அறையில் அடைத்து சாவியைத் தனது வசம் வைத்துக் கொண்டு விட்டார். பின்னர் அவரது வீட்டை நோக்கித் தனது சாரட்டில் செல்ல அதே சாமியார் எதிரில் அவரை நோக்கிப் புன்னகைத்தவாறு கடந்து சென்று மறைந்து விட்டார். அவர் அடைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டு அப்படியே இருந்தது. உள்ளே ஆள் மட்டும் இல்லை.

அடுத்த சம்பவம் நடந்தது, தென்காசி சன்னதி தெருவில். அங்குள்ள சங்கரன்பிள்ளை என்பவரது வீட்டிற்குப் பின்னால் ஒரு சித்தரின் சமாதி இருந்ததாம். தலைமுறைகளாக அதைப் பராமரித்து வழிபட்டு வந்தனர் அந்தக் குடும்பத்தினர். அங்கு வந்த மொட்டையடித்த ஆண்டியார் நேரே சென்று அந்தச் சமாதியில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டாராம். என்ன செய்வதென்றே தெரியாமல் ஊர் மக்கள் அனைவரும் நேரில் வந்து முறையிட்டுக் கேட்டுக் கொண்டனர். பின்னர் அந்தச் சாமியார் சங்கரன் பிள்ளையிடம் அவர்கள் மூதாதையர் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிட்டு இந்தச் சமாதியை அவருக்காகத் தான் அவரது முன்னோர்கள் கட்டி வைத்துப் பராமரித்து வருகின்றனர் என்று விளக்கினார்.

மதுரையை அடுத்த சமயநல்லூர் என்ற ஊரில் நடந்த சம்பவம் இது. 1627 இல் அங்கே வாழ்ந்து வந்தவர்கள் ராமசாமி ஐயர்- திரிபுரசுந்தரி தம்பதியினர். அம்பாள் உபாசகர்களான இந்தத் தம்பதிக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தைப் பேறு இல்லை. வேண்டாத கடவுள் இல்லை. செய்யாத பூஜைகள் இல்லை. மதுரையை ஆண்ட அன்னை மீனாட்சியிடம் நெஞ்சுருக வேண்டினர். தங்களுக்கு இந்தக் குறை நீங்கினால் பிறக்கும் குழந்தையை அம்மனுக்கே சமர்ப்பித்து விடுவதாக வேண்டிக் கொண்டனர். ஊரையே காத்து ரட்சிக்கும் மீனாட்சி இவர்களைக் கைவிடுவாளா? ஒன்றுக்கு இரண்டாக ஆண்குழந்தைகள் பிறந்தன. இரட்டையர்களுக்கு, ராமன், லட்சுமணன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். இரண்டில் எது தெய்வக்குழந்தையெனத் தேர்ந்தெடுப்பது? அவர்கள் கனவில் வந்த அம்மன், காலில் சங்கு சக்கர முத்திரையோடு இருக்கும் குழந்தையே அது என அடையாளம் காட்டினாள். வேண்டிக்கொண்ட படியே அந்தக் குழந்தையைக் கோயிலில் கொண்டு விட்டு வந்தனர். இரவு முழுதும் கோயிலில் இருந்த அந்தக் குழந்தைக்குப் பாலூட்டி வளர்ந்தவள் மீனாட்சி அம்மன். சாமியே வளர்ப்பதால் அந்தச் சிறுவனுக்குக் குழந்தைசாமியெனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். அவனுக்கு உபநயனம் செய்வித்து அம்பாள் கைங்கரியத்தில் ஈடுபடுத்தினர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்