Home » Home 31-05-23

வணக்கம்

இந்தப் பத்திரிகை வெளிவரத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நாளை ஆண்டு விழா.

தமிழில் எளிமையாகவும் தரமாகவும் பல்வேறு துறைகள் சார்ந்து ஆழமாகவும் எழுதத் தெரிந்த ஒரு புதிய தலைமுறைக்கான களமாகத் தொடங்கப்பட்டதுதான் மெட்ராஸ் பேப்பர். தமிழ் வார இதழ்களுக்கே உரிய கல்யாண குணங்கள் ஏதுமின்றி, ஒரு மாறுபட்ட அனுபவத்தை வாசகர்களுக்கு வழங்க நினைத்தோம். நினைத்ததைச் சரியாகவே செய்துகொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அளிக்கும் வரவேற்பின் மூலம் அறிகிறோம்.

இந்த ஐம்பத்து மூன்று வாரங்களில் சுமார் நாற்பது புதிய எழுத்தாளர்களை மெட்ராஸ் பேப்பர் தமிழுக்குத் தந்திருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள், இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள், பதினேழு உலகச் சிறுகதைகள், சற்றும் சமரசமற்ற உயர் தரத்தில் ஒரு நாவல் -

தவிர, நமது எழுத்தாளர்கள் பன்னிரண்டு பேரின் பதிமூன்று புத்தகங்கள் இந்த ஆண்டில் வெளியாகியிருக்கின்றன. எழுதக் கற்றுக்கொண்டு, ஓராண்டு முழுதும் எழுதி எழுதிப் பழகி, பிறகு பத்திரிகைக் கட்டுரைகள் எழுதத் தொடங்கி, அதில் தேர்ச்சி பெற்றுப் புத்தகமும் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய தமிழ் பதிப்புச் சூழலில் சந்தேகமின்றி சாதனை. நல்ல எழுத்தை எப்போதும் கொண்டாடுவோம்.

நிற்க. நாளை (ஜூன் 1, 2023) மாலை இந்திய நேரம் 7 மணிக்கு மெட்ராஸ் பேப்பரின் ஆண்டு விழாக் கொண்டாட்டம் zoom வழியே நடக்கிறது. நூறு பேர் இதில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலும். பிறரும் நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க ஸ்ருதி டிவி யூட்யூப் நேரலை செய்கிறது. நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்துகொண்டு, நமது பத்திரிகையின் எழுத்தாளர்கள் / செய்தியாளர்களுடன் கலந்துரையாட விரும்புவோர் 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்து zoom link பெறலாம்.

இந்நிகழ்ச்சியில் ‘கல்கி’ சீதா ரவி, ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே. அசோகன் இருவரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். ‘நேர்காணல் செய்யும் கலை’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ். சந்திரமௌலியும் ‘எழுத்தில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யாவும் சிறப்புரை ஆற்றுகிறார்கள். மெட்ராஸ் பேப்பர் இதுவரை செய்தவை குறித்து ஆசிரியரும் தொழில்நுட்ப ஆலோசகரும் உரையாற்றுவார்கள். பிறகு, ‘இனி என்ன செய்யலாம்?’ என்ற தலைப்பில் மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் குழுவினருடன் வாசகர்கள் நேரடியாகக் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகை தந்து உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அளிக்கலாம்.

மெட்ராஸ் பேப்பரின் வாசகர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம்.

நாளை மாலை விழாவில் சந்திப்போம்.

 • நம்மைச் சுற்றி

  நம் குரல்

  ஒரு தீர்ப்பு, ஒரு திறப்பு

  வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு...

  இந்தியா

  காலிஸ்தான்: ஒரு பழங்கதையின் புதிய பதிப்பு

  இந்தியாவிற்கும் கனடாவிற்குமான பிரச்னை என்ன என்பது பற்றிக் கடந்த வாரம் பேசியிருந்தோம். காலிஸ்தான் என்ற ஒற்றைச் சொல்தான் அனைத்திற்கும் காரணம்...

  உலகைச் சுற்றி

  உலகம்

  மெல்ல எழும் பூகம்பம்

  இலங்கை ஜனாதிபதி ரணிலும் அவர் பரிவாரங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் தவணைப் பணம் கிடைப்பது பெரும்...

  உலகம்

  பழைய பகையும் புதிய எல்லைகளும்

  தென்கிழக்கு ரஷ்யாவில் ஆரம்பித்து உக்ரைனுக்குக் கிழக்கே போகிறதொரு இரயில் பாதை. ரஷ்யாவின் ரஸ்தோவ், டகன்ரோக் நகரங்களை, உக்ரைனின் மரியுபோல், டோனெஸ்க்...

  உலகம்

  வங்கத்து ராணி நந்தினியா? குந்தவையா?

  வங்காள தேசம் என்கிற பங்களா தேஷ். அளந்து பார்த்தால், நீளவாக்கில் 820 கிலோமீட்டர்கள். அகல வாக்கில் 600 கிலோமீட்டர்கள். அளவில் சிறிய நாடு தான். ஆனால்...

  மேலும் ரசிக்க

 • தொடரும்

  உயிருக்கு நேர் தொடரும்

  உயிருக்கு நேர் – 45

  45 மா.இராசமாணிக்கனார்  (12.03.1907 –  26.05.1967) தொடக்கக்கல்வியைத் தமிழ்மொழியில் படித்தவரில்லை அவர். அறிமுகக்கல்வி தெலுங்கு மொழியில்தான் நிகழ்ந்தது. பிறந்தது தமிழ்க் குடும்பத்தில்தான்; ஆனால் அவரது கல்வி தொடங்கியது தெலுங்கில். முறையாகத் தமிழ் கற்கத் தொடங்கியதே ஒன்பதாவது வயதில்தான். ஆனால்...

  Read More
  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை -71

  71. ஃபெரோஸ் காந்தி மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் போராட்டங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு உள்ளே வெளியே என மாறிமாறி இருந்த போதிலும் நேரு குடும்பத்துப் பெண்மணிகள் தெருவில் இறங்கியது அப்பாவையும், மகனையும் பெருமை கொள்ள வைத்தது. குறிப்பாக, கமலா நேரு தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், பல்வேறு...

  Read More
  இலக்கியம் நாவல்

  ஆபீஸ் – 70

  70 சித்தம் அலைந்தடங்கி ஒரு இடமாய் அமர ஆரம்பித்திருந்த அவனைப்போலவே  அவனுடைய ஆபீஸ் வாழ்வும் அமைதியாகத் தொடங்கியிருந்தது என்று பார்த்தால், ஆபீஸுக்கே வராமல் இருந்த ஆங்கிலோ இந்திய ஏஓ ஓய்வுபெற, கணுக்காலுக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டுகிற பாய்மார்களைப்போல சேலையைக் கட்டியாகவேண்டிய அளவுக்கு உயரமாக இருந்த...

  Read More
  விண்வெளி

  வான் – 3

  “சோவியத் இனி நம்மைத் தினமும் பல தடவை கடந்து போகும். தேவைப்பட்டால் எமது வீடுகளுக்குள் புகுந்து வேவு பார்க்கும். குண்டுகளை விண்வெளியிலிருந்து வீசி அடிக்கும்” ஸ்புட்னிக்-01 போனதுதான் போனது… அமெரிக்காவில் கடுமையான பதற்றம்! அரச அதிகாரிகள் தொடக்கம் சாதாரண பொதுமக்கள் வரை எல்லாத்...

  Read More
  error: Content is protected !!