வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு...
வணக்கம்
வழக்கத்தினும் இந்த ஆண்டுக் கோடை ஒரு நவீன கவிதையாகவே காட்சி தருகிறது. வெளியே பத்து நிமிடங்கள் போய்விட்டு வீட்டுக்கு வந்தால் சிறிதுநேரம் ஒன்றுமே புரிவதில்லை. ஆணவமல்லாத ஏதோ ஒன்று கண்ணை மறைக்கிறது. ஐந்து நிமிடங்கள் அமைதியாகப் படுத்து எழுந்தால் சரியாகிவிடும் என்று பார்த்தால், படுக்கத்தான் முடிகிறதே தவிர, எழுந்திருக்க முடிவதில்லை. ஆனால் வெளியே போய்த்தான் தீர வேண்டியிருக்கிறது. வேலை பார்த்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. நமது அன்றாடங்களை எப்படி நம்மால் தவிர்க்க முடியாதோ அப்படித்தான் இயற்கைக்கும்.
இந்தக் கோடையை நேர்த்தியாகச் சமாளித்து வாழ இந்த இதழில் உபயோகமான நூறு டிப்ஸ் தருகிறார் காயத்ரி. ஒய். படித்துப் பயன்படுத்துவதுடன் எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். மீண்டும் அடுத்த கோடைக்கு உதவும்.
கர்நாடகத்தில் சித்தராமய்யாவும் துருக்கியில் எர்டோகனும் கணிப்புகளைப் பொய்யாக்கித் தமது மக்கள் ஆதரவை உறுதி செய்திருப்பதே வாரத்தின் சிறப்புச் செய்திகள். இதில், எர்டோகன் தேர்தலில் வென்ற சூழல் முக்கியமானது. துருக்கித் தேர்தலே என்றாலும் உண்மையில் இது அமெரிக்க-ரஷ்ய பலப்பரீட்சையின் இன்னொரு மறைமுக வடிவம். இந்த இதழ் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல, எண்பதுகளின் பனிப்போர் இப்போது வேறொரு முகம் கொண்டு மீண்டும் அரங்கேறத் தொடங்கியிருப்பது கண்கூடு. துருக்கி தேர்தல் முடிவுகளை முன்வைத்து (என்னதான் மே 28 அன்று இறுதிப் பரீட்சை இருந்தாலும்) ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் கட்டுரை, உலகம் எதிர்கொள்ளவிருக்கும் அடுத்தக்கட்ட அரசியல் நெருக்கடிகளின் களம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.
வினுலா எழுதியுள்ள ‘அடையாளங்களை அழித்தொழிப்போம்’ இன்னொரு மிக முக்கியமான கட்டுரை. தொடக்க காலம் முதலே உக்ரைனின் கலாசார-பண்பாட்டு வேர்களை நாசம் செய்யும் முயற்சியில் ரஷ்யா இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை இக்கட்டுரை துல்லியமாகப் படம்பிடிக்கிறது. ஓர் இனத்தை வேரறுப்பது என்பதன் முதல்படி, அதன் பண்பாட்டு அடையாளங்களை அப்புறப்படுத்துவதேயாகும். காலம் காலமாக ரஷ்யா இதனை ஒரு செயல்திட்டமாகவே முன்வைத்து இயங்கி வருவதைத் தோலுரிக்கும் இக்கட்டுரையை நீங்கள் உலகின் பல ஏகாதிபத்திய-கோலோச்சு சக்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மிக நிச்சயமாக, இக்காலக்கட்டத்தின் மாபெரும் அச்சுறுத்தல் அமெரிக்காவோ வட கொரியாவோ அல்ல; ரஷ்யாதான் என்பது புலப்படும்.
வட கொரியா என்றதும் அதன் சமீபத்திய உளவு சாட்டிலைட் முயற்சியைக் குறித்துப் பேசாதிருக்க முடியாது. தென் கொரியாவைக் கண்காணிக்க என்று வட கொரிய அதிபர் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவார். உண்மை அதுவல்ல. தெற்காசியப் பிராந்தியத்தின் நிரந்தரத் தலைவலியாக உருவெடுப்பதை ஒரு செயல்திட்டமாக வைத்துக்கொண்டு இயங்கிவரும் வட கொரியாவின் இந்த உளவு சாட்டிலைட் அமெரிக்காவின் கோபத்தை வலுவாகக் கிளறிவிட்டிருப்பது திண்ணம். இது குறித்த விரிவான கட்டுரை ஒன்றைச் சிவராமன் கணேசன் எழுதியிருக்கிறார்.
ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகியிருக்கும் பெண்மணி குறித்து, அரிசியே பயன்படுத்தாத அண்ணாநகர் உணவகம் குறித்து, நாய் வளர்ப்போர் அதிகரித்திருக்கும் சூழலில் ஒரு நாயை வளர்க்க ஆகும் மொத்த செலவு என்ன என்பது குறித்து, காலாவதியாகப் போகிற இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் துர்மரணம் குறித்து, அனைத்து வெப் பிரவுசர்களிலும் உள்ள இன்காக்னிடோ வசதி ஏன் என்பது குறித்து - எது மிச்சம்?
எல்லா விதமான ருசிகளுக்கும் இடம் தரும் கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியாகியிருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
நம்மைச் சுற்றி
இந்தியாவிற்கும் கனடாவிற்குமான பிரச்னை என்ன என்பது பற்றிக் கடந்த வாரம் பேசியிருந்தோம். காலிஸ்தான் என்ற ஒற்றைச் சொல்தான் அனைத்திற்கும் காரணம்...
1950 கால கட்டம். இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. சிறிது காலம் முன்னர், அதாவது 1943-இல் தான் அதிபயங்கர வங்காளப் பஞ்சம்...
உலகைச் சுற்றி
இலங்கை ஜனாதிபதி ரணிலும் அவர் பரிவாரங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் தவணைப் பணம் கிடைப்பது பெரும்...
தென்கிழக்கு ரஷ்யாவில் ஆரம்பித்து உக்ரைனுக்குக் கிழக்கே போகிறதொரு இரயில் பாதை. ரஷ்யாவின் ரஸ்தோவ், டகன்ரோக் நகரங்களை, உக்ரைனின் மரியுபோல், டோனெஸ்க்...
வங்காள தேசம் என்கிற பங்களா தேஷ். அளந்து பார்த்தால், நீளவாக்கில் 820 கிலோமீட்டர்கள். அகல வாக்கில் 600 கிலோமீட்டர்கள். அளவில் சிறிய நாடு தான். ஆனால்...
ஆயபயன்
தொடரும்
45 மா.இராசமாணிக்கனார் (12.03.1907 – 26.05.1967) தொடக்கக்கல்வியைத் தமிழ்மொழியில் படித்தவரில்லை அவர். அறிமுகக்கல்வி தெலுங்கு மொழியில்தான் நிகழ்ந்தது. பிறந்தது தமிழ்க் குடும்பத்தில்தான்; ஆனால் அவரது கல்வி தொடங்கியது தெலுங்கில். முறையாகத் தமிழ் கற்கத் தொடங்கியதே ஒன்பதாவது வயதில்தான். ஆனால்...
71. ஃபெரோஸ் காந்தி மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் போராட்டங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு உள்ளே வெளியே என மாறிமாறி இருந்த போதிலும் நேரு குடும்பத்துப் பெண்மணிகள் தெருவில் இறங்கியது அப்பாவையும், மகனையும் பெருமை கொள்ள வைத்தது. குறிப்பாக, கமலா நேரு தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், பல்வேறு...
70 சித்தம் அலைந்தடங்கி ஒரு இடமாய் அமர ஆரம்பித்திருந்த அவனைப்போலவே அவனுடைய ஆபீஸ் வாழ்வும் அமைதியாகத் தொடங்கியிருந்தது என்று பார்த்தால், ஆபீஸுக்கே வராமல் இருந்த ஆங்கிலோ இந்திய ஏஓ ஓய்வுபெற, கணுக்காலுக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டுகிற பாய்மார்களைப்போல சேலையைக் கட்டியாகவேண்டிய அளவுக்கு உயரமாக இருந்த...