Home » Home-22-06-2022

வணக்கம்

உணவுச் சிறப்பிதழுக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மிகுந்த உற்சாகம் தந்தது. இந்தக் குறிப்பிட்ட இதழ், பல்வேறு தரப்பினைச் சேர்ந்த புதிய வாசகர்களைக் கொண்டு வந்து சேர்த்திருப்பதைக் கவனிக்கிறோம். ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பிதழ் வெளியிடலாம் என்கிற எண்ணம் வலுப்பட்டிருக்கிறது.

ஒரு சிறப்பிதழை அடுத்து வருகிற இதழ் சிறிது சுருதி குன்றி அமைவது பொதுவான பத்திரிகை வழக்கம். மெட்ராஸ் பேப்பரில் அந்த விபத்து நேரக்கூடாது என்று மிகுந்த கவனமுடன் இந்த இதழ் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சிறப்புப் பகுதியாக வெளியாகியிருக்கும் ஓடிடி குறித்த கட்டுரைகளும் சரி; மாணவர்களிடையே பரவத் தொடங்கியிருக்கும் ‘வேப்பிங்’ அபாயம் குறித்த எச்சரிக்கைக் கட்டுரையும் சரி; இலங்கை அரசை எப்போதும் ஆட்டிப்படைக்கும் பவுத்த துறவிகள், ஊரே கொந்தளித்துக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதன் பின்னணி அரசியலை விளக்கும் கட்டுரையும் சரி. தன்னளவில் சரியான முழுமையைக் கொண்டிருக்கின்றன. இந்த இதழில் வெளியாகியிருக்கும் ராம்ஜியின் ‘வித்வான்’ சிறுகதை உங்கள் ரசனைக்கு விருந்து. கதையைப் படிக்கும்போதே அதில் குறிப்பிடப்படுகிற வித்வானின் (நிஜத்) தோற்றம் கண்ணில் வந்து நிற்கும் அதிசயத்தைப் பார்ப்பீர்கள்.

மெட்ராஸ் பேப்பருக்கு சந்தா செலுத்துவதில் இருந்த சில இடர்பாடுகள் பெரும்பாலும் சரி செய்யப்பட்டுவிட்டன. இனி வெளி நாடுகளில் வசிப்பவர்கள் அந்தந்த தேசத்து நாணயம் மூலமாகவே சந்தா செலுத்த முடியும். கூகுள் பே, பேடிஎம், யுபிஐ, நேரடி வங்கிப் பரிமாற்றம் என அனைத்து விதங்களிலும் சந்தா செலுத்த வழி செய்திருக்கிறோம். இங்கே அந்த விவரங்களைக் காணலாம்.

தமிழ் வெகுஜன வாசிப்பில் ஒரு சுவாரசியமான, தரமான மாற்றுத் தரப்பை முன்வைக்கும் மெட்ராஸ் பேப்பரை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள். உலகெங்கும் நடக்கும் பல முக்கியமான அரசியல்-சமூக மாற்றங்களை, யுத்தங்களை, அவற்றின் பின்னணியை, இதர அனைத்துத் துறைகள் சார்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை எளிய தமிழில் உடனுக்குடன் வாசித்து அறிய இதனினும் சரியான ஊடகம் வேறில்லை என்று உரக்கச் சொல்லுங்கள்.

சிறப்புப் பகுதி: ஓடிடி

நம்மைச் சுற்றி

வரலாறு முக்கியம்

தொடரும்

error: Content is protected !!