ஒரு வாரம் இடைவெளி கொடுத்து 110 பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல். பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டவரும். 240 பாலஸ்தீனியர்கள் விடுதலை...
வணக்கம்
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, உலகம் எதிர்பார்த்ததினும் மோசமான எல்லையை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது போலத் தெரிகிறது. உக்ரைனியக் குழந்தைகளை (போர்க்களமாக அறிவிக்கப்பட்டுள்ள எல்லைப் பகுதிகள் சிலவற்றில் வசிப்பவர்கள்) வலுக்கட்டாயமாக ரஷ்ய வீரர்கள் நாடு கடத்தி, தம் தேச எல்லைக்குள் இழுத்துச் சென்று இருக்கிறார்கள். அப்படிக் கட்டாய நாடு கடத்தலுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை பதினாறாயிரத்தைத் தாண்டும் என்று சொல்கிறார்கள்.
இது சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு போர்க்குற்றம். இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிரான கைது உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவிட்டிருப்பது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்.
யாரும் உடனே புதினைக் கைது செய்யப் போவதில்லை; அதற்கெல்லாம் வாய்ப்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் யுத்தம் தொடங்கிய நாள் முதல் இது ஓர் அநியாயப் போர்; அத்துமீறல் என்று கருதும் பெரும்பான்மை மனித குலத்துக்கு ஒரு சிறிய ஆறுதலான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை.
இது ஒரு புறம் இருக்க, பிராந்தியத்தில் பறந்த ஆளில்லா அமெரிக்க ட்ரோன் விமானமொன்றை ரஷ்யா சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இது அபாயம். ஏனெனில், நேற்று வரை அமெரிக்கா உக்ரைனுக்கு உதவி வந்ததே தவிர நேரடியாக ரஷ்யா மீது எந்தத் தாக்குதலும் தொடுக்கவில்லை. ரஷ்யாவும் உக்ரைனிய இலக்குகளை மட்டுமே தாக்கி வந்ததே தவிர, அதன் உதவி நாடுகளைத் தொட்டதில்லை. ஆனால் மார்ச் 14ம் தேதி நடந்த இச்சம்பவம், அமெரிக்காவின் மீது ரஷ்யா நேரடியாகத் தாக்குதல் நடத்த ஆயத்தமாகிவிட்டது போன்ற ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்கவே, ஐரோப்பியக் கண்டம் முழுதும் பதற்றம் எழுந்துள்ளது. இது ஒன்றுமில்லாமல் அடங்கிவிடுமானால் ஊருலகுக்கு நல்லது. சிக்கல் பெரிதானால் விளைவுகள் சிந்திக்கக்கூடியதல்ல. இப்பிரச்னையின் ஆழ அகலங்களை விரிவாக விவரிக்கும் கட்டுரை ஒன்றை இந்த இதழில் வினுலா எழுதியிருக்கிறார்.
இதனைப் போலவே இன்னொரு முக்கியமான கட்டுரை, அமெரிக்காவின் சிலிக்கன் வேலி வங்கி இழுத்து மூடப்பட்டதன் பின்னணி குறித்துப் பேசுகிறது. இலவசக் கொத்தனார் எழுதியிருக்கும் இக்கட்டுரை, நாற்பதாண்டுகால வரலாறுள்ள ஒரு வங்கி எப்படி நான்கே நாள்களில் மூழ்கிப் போகும் என்று தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.
மத்திய அமெரிக்க நாடான ஹண்டுரஸில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழைந்து, அவதிப்படும் லட்சக்கணக்கான சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவரிக்கும் ஆ. பாலமுருகனின் ‘எல்லை தாண்டும் பிள்ளைகள்’, இலங்கைப் பிரச்னையின் இன்றைய பரிமாணத்தை விவரிக்கும் ஸஃபார் அஹ்மதின் ‘மாற்றிப் போட்ட ட்யூனும் மாறாத அவலங்களும்’, அ. பாண்டியராஜனின் ‘தள்ளாடும் கல்வித்துறை; தடுமாறும் மாணவர்கள்’, சிவராமன் கணேசனின் ‘உளவுக்கு வந்த புறா’ என்று இந்த இதழெங்கும் நீங்கள் வாசிப்பதற்கு சுவாரசியமான படைப்புகள் பல உள்ளன.
மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். அது இதழை இன்னமும் மேம்படுத்த உதவும். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரர்களாக்குங்கள். இன்னும் சுவாரசியமான பல கட்டுரைகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
உலகைச் சுற்றி
கடைகளில் உங்களுக்கு மிகவும் தேவையாக இருக்கும் அல்லது பிடித்தமான மிக அதிக விலையுள்ள பொருள், 80 சதவீதத் தள்ளுபடியில் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள...
ஒரு ஸ்டாக்கின் விலை மட்டும் 4.5 கோடி. கேட்கும் போதே தலைசுற்றுகிறதா? அது தான் பெர்க்சயர் ஹாத்வே A (Berkshire Hathway A). அதன் உருவாக்கத்திற்குச்...
டீ பார்ட்டி கட்சியின் பெயரே, பாஸ்டன் டீ பார்ட்டி என்ற சரித்திர மகத்துவம் வாய்ந்த அரசியல் போராட்டத்தின் பெயரைக் கொண்டது. அநியாயத்தை எதிர்த்து போரிட்ட...
நம்மைச் சுற்றி
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...
இவ்வாண்டின் கோடை விடுமுறையில் நியூஜெர்சி மாகாணத்தில் ராபின்ஸ்வில்லியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது ஸ்வாமி நாராயணர் கோயில். 2010ம் ஆண்டில் தொடங்கிய...
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், விளையாட்டு – கேளிக்கை என்பதற்கு அப்பால் நமக்குச் சில செய்திகளை மௌனமாகத் தெரியப்படுத்துகின்றன...
நுட்பக் கோட்டை
வாழ்வும் வழிபாடும்
அயோத்தியில் சுமார் 1800 கோடி செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இராமர் கோயில் பணிகள், திட்டமிட்டபடி அடுத்த மாதத்துடன் நிறைவடைகின்றன. பிரதமர்...
இரும்பை ஈர்க்கும் விசை காந்தத்தில் இருப்பதுபோல விநோதமான நபர்களை ஈர்க்கும் ஒருவித ஈர்ப்பு விசை என் கணவரினுள்ளே இருக்கிறது. விநோத குணம் கொண்ட அற்புதப்...
“கும்பகோணம் பக்கத்துல, திருமங்கலக்குடின்னு ஒரு தலம்” என்றார் நண்பர். “என்ன சிறப்பு?” “இறைவன் பிராணனைக் கொடுத்த ஸ்ரீபிராணநாதேஸ்வரர், அம்பாள்...
“அங்க்கிள்…” கூப்பிட்டபடியே வீட்டினுள் புயலாய் ஓடிவந்தாள் விலாசினி- கல்லூரியில் படிக்கும் பக்கத்து வீட்டுப் புயல். சோபாவில் அமர்ந்து புத்தகம்...
இந்துக்கள் கார்த்திகை மாதம் ஐயப்பக் கடவுளுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வது போல கிறிஸ்தவர்கள் மேரி மாதாவுக்கு மாலை அணிந்து விரதமிருந்து...
எங்கள் பக்கத்து வீட்டிற்குச் சென்ற வருடம் புதிதாக ஒரு தமிழ்க் குடும்பம் குடி வந்தது. குடி வருவதற்கு முன்பு வீட்டில் சிறுசிறு வேலைகளைச் செய்து முடிக்க...
தொடரும்
80. அத்தையுடன் மனக்கசப்பு இந்திரா காந்தி மற்றும், அவருடைய அத்தை விஜயலட்சுமி பண்டிட் இருவரது அரசியல் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், அவர்கள் இருவரையும் ஐக்கிய மாகாணத்தில் இமயமலைப் பகுதியில் உள்ள காளி என்ற கோடை வாசஸ்தலத்துக்குப் போய் வசிக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால், இருவரும்...
முறைப்படி 1975-ம் ஆண்டில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். 1972ம் ஆண்டு மாட்சிமை பொருந்திய எலிசபெத் மகராணியை முற்றாய்ப் புறக்கணித்து ஜனநாயகக் குடியரசானதைக் காரணம் காட்டிப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேலும் இரண்டு ஆண்டுகளாக பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்து...
08 – சோவியத்தின் மனமாற்றம் சுதந்திர சோவியத்திற்கு உருக்கொடுத்தார் லெனின். கம்யூனிசமும், சர்வாதிகாரத்துவமும் தான் மூலக்கல். அரசியல் முதற்கொண்டு அதன் எல்லாத் துறைகளின் கட்டமைப்புகளையும் உருவாக்கினார் லெனின். அவற்றை உறுதிப்படுத்தினார் பின்வந்த ஸ்டாலின். இவர்களைப் போன்ற வலிமையான ஆளுமைகள்...
இண்டர்வ்யூவிற்கு ஈ.எம்.ஐ அந்த ஈ-மெயிலுக்காகத் தான் காத்துக்கொண்டிருந்தான் அருண். இதோ, வந்துவிட்டது. அவன் ஆசைப்பட்டபடியே, கேம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆகியிருந்தான். அருண் பொறியியல் கல்லூரி மாணவன். இறுதி ஆண்டு இன்னும் சில வாரங்களில் முடியவிருக்கிறது. அகமதாபாத் நகரத்துக்கு வெளியே எங்கோவோர்...
ஆர்ப்பாட்டமில்லாமல் பணி செய்து கொண்டிருந்தது இந்திய விண்வெளி நிலையம். முதலாவது ராக்கெட் வெற்றிகரமாக வானுயர்ந்து விட்டது. அதாவது, ‘ஏவும் கலை’ கைவந்தாயிற்று. நாஸாவிலிருந்து கொண்டு வந்த ராக்கெட் அது. அடுத்து, விண் ஓடமொன்றைச் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்ற இலக்குடன் எத்தனையோ தடைகளுக்கும் பொருளாதாரச்...