Home » Home 22-03-2023

வணக்கம்

சென்ற வாரம் மகளிர் தினச் சிறப்பிதழுக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. சென்ற இதழின் பல கட்டுரைகளின் சுட்டிகளை யார் யாரோ, யார் யாருக்கோ வாட்சப்பில் அனுப்பி வாசிக்கச் சொல்லிப் பரிந்துரை செய்திருந்தது தற்செயலாகத் தெரிய வந்தது. நமக்கே அப்படிச் சில forward குறுஞ்செய்திகள் வந்தபோது அம்மகிழ்ச்சி, மன நிறைவாக மலர்ந்து அமர்ந்தது. ஒரு பத்திரிகையின் வளர்ச்சி என்பது இத்தகைய வாசகர்களின் எண்ணிக்கை பெருகுவதில்தான் உள்ளது.

இந்த இதழில், கோகிலா எழுதியிருக்கும் ‘ஈழ அகதிகளும் ஓட்டை வாளி உதவிகளும்’ மிக முக்கியமான கட்டுரை. தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத் தமிழர்களின் தீவிரமான பிரச்னைகளைப் பேசுகிற இக்கட்டுரை, அரசு செய்ய வேண்டிய மிகச் சரியான நிவாரணம் எதுவென்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

இஸ்ரேல் என்றால் கலவரம், குண்டு வெடிப்பு, போர் என்று நம் மனத்தில் பதிந்து போயிருக்கும். இப்போதும் அங்கே கலவரம்தான். ஆனால் பல்லாண்டு காலப் பாலஸ்தீனியருடனான பிரச்னையல்ல விஷயம். இஸ்ரேலிய அரசாங்கம் புதிதாகக் கொண்டு வந்திருக்கும் சில நீதித் துறை சார்ந்த சட்டத் திருத்தங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கியிருக்கின்றன. உள்நாட்டில் மட்டும்தானா என்றால் இல்லை. பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேலைத் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. நட்புறவைத் துண்டித்துக்கொள்ளும் எல்லைக்கே சில தேசங்கள் சென்றிருக்கின்றன. மத அடிப்படைவாதிகளின் கைப்பாவையாகிவிட்டது இன்றைய இஸ்ரேலிய அரசு. அதற்கு அவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் விலையும் மிகப் பெரிதே. இஸ்ரேலின் இன்றைய இப்பிரச்னையின் வேர் வரை அலசி ஆராய்கிறது ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் ‘இடியாப்பச் சிக்கலில் இஸ்ரேல்’.

பல்வேறு அரபு தேசங்களில் இன்று பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது? நஸீமா ரஸாக் எழுதியுள்ள ‘ஷேக்கம்மாக்களின் உலகம்’ அடிப்படைவாதம் ஆளும் தேசங்களில் வசிக்கும் நவீனகாலப் பெண்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்கிறது.

நம் நாட்டில் சமீபத்தில் நடந்த சில வட மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. மோடியின் பல நிர்வாகத் தோல்விகள் தேசமெங்கும் பரவலான கண்டனங்களைப் பெற்றாலும் தொடர்ந்து அவர்களால் எப்படித் தேர்தல்களில் மட்டும் வெற்றி காண முடிகிறது? அலசுகிறது பாண்டியராஜனின் கட்டுரை.

பெண்களுக்கான மாதவிடாய்க் கால விடுப்பு ஸ்பெயினில் சட்டபூர்வமாகியிருக்கிறது. வேறு பல நாடுகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான் இது. ஆனால் இந்தியாவில் இன்னும் இல்லை. இங்கே அது நடக்குமானால் அது பெண்களுக்கு சாதகமாக இருக்குமா, சுமையை மேலும் கூட்டுமா என்று வினுலா எழுதியுள்ள கட்டுரை ஆராய்கிறது.

இந்த இதழில் நீங்கள் பொருட்படுத்தி வாசிக்க இன்னும் பல அருமையான கட்டுரைகளும் உள்ளன. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

 • விருந்து

  நம் குரல்

  மழை அரசியல்

  சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...

  இந்தியா

  தேர்தல் முடிவுகள்: இனி என்ன செய்யலாம் காங்கிரஸ்?

  நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை பல்வேறு கால கட்டங்களாக ஐந்து மாநிலங்களுக்குமான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்தது இந்தியத் தேர்தல்...

  மருந்து

  உலகம்

  இடைவேளைக்குப் பிறகு….

  ஒரு வாரம் இடைவெளி கொடுத்து 110 பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல். பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டவரும். 240 பாலஸ்தீனியர்கள் விடுதலை...

  உலகம்

  கறுப்பு வெள்ளியின் அசல் நிறம்!

  கடைகளில் உங்களுக்கு மிகவும் தேவையாக இருக்கும் அல்லது பிடித்தமான மிக அதிக விலையுள்ள பொருள், 80 சதவீதத் தள்ளுபடியில் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள...

  ஆளுமை

  வாரன் பஃபெட்டின் வலது கை

  ஒரு ஸ்டாக்கின் விலை மட்டும் 4.5 கோடி. கேட்கும் போதே தலைசுற்றுகிறதா? அது தான் பெர்க்சயர் ஹாத்வே A (Berkshire Hathway A). அதன் உருவாக்கத்திற்குச்...

  உலகம்

  டீ பார்ட்டி அரசியல்

  டீ பார்ட்டி கட்சியின் பெயரே, பாஸ்டன் டீ பார்ட்டி என்ற சரித்திர மகத்துவம் வாய்ந்த அரசியல் போராட்டத்தின் பெயரைக் கொண்டது. அநியாயத்தை எதிர்த்து போரிட்ட...

 • தொடரும்

  குடும்பக் கதை தொடரும்

  ஒரு  குடும்பக்  கதை – 80

  80. அத்தையுடன் மனக்கசப்பு இந்திரா காந்தி மற்றும், அவருடைய அத்தை விஜயலட்சுமி பண்டிட் இருவரது அரசியல் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், அவர்கள் இருவரையும் ஐக்கிய மாகாணத்தில் இமயமலைப் பகுதியில்   உள்ள காளி என்ற கோடை வாசஸ்தலத்துக்குப் போய் வசிக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால், இருவரும்...

  Read More
  தொடரும் ப்ரோ

  ப்ரோ – 8

  முறைப்படி 1975-ம் ஆண்டில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். 1972ம் ஆண்டு மாட்சிமை பொருந்திய எலிசபெத் மகராணியை முற்றாய்ப் புறக்கணித்து ஜனநாயகக் குடியரசானதைக் காரணம் காட்டிப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேலும் இரண்டு ஆண்டுகளாக பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்து...

  Read More
  திறக்க முடியாத கோட்டை தொடரும்

  திறக்க முடியாத கோட்டை – 8

  08 – சோவியத்தின் மனமாற்றம் சுதந்திர சோவியத்திற்கு உருக்கொடுத்தார் லெனின். கம்யூனிசமும், சர்வாதிகாரத்துவமும் தான் மூலக்கல். அரசியல் முதற்கொண்டு அதன் எல்லாத் துறைகளின் கட்டமைப்புகளையும் உருவாக்கினார் லெனின். அவற்றை உறுதிப்படுத்தினார் பின்வந்த ஸ்டாலின். இவர்களைப் போன்ற வலிமையான ஆளுமைகள்...

  Read More
  சைபர் க்ரைம் தொடரும்

  கத்தியின்றி ரத்தமின்றி – 2

  இண்டர்வ்யூவிற்கு ஈ.எம்.ஐ அந்த ஈ-மெயிலுக்காகத் தான் காத்துக்கொண்டிருந்தான் அருண். இதோ, வந்துவிட்டது. அவன் ஆசைப்பட்டபடியே, கேம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆகியிருந்தான். அருண் பொறியியல் கல்லூரி மாணவன். இறுதி ஆண்டு இன்னும் சில வாரங்களில் முடியவிருக்கிறது. அகமதாபாத் நகரத்துக்கு வெளியே எங்கோவோர்...

  Read More
  தொடரும் வான்

  வான் – 12

  ஆர்ப்பாட்டமில்லாமல் பணி செய்து கொண்டிருந்தது இந்திய விண்வெளி நிலையம். முதலாவது ராக்கெட் வெற்றிகரமாக வானுயர்ந்து விட்டது. அதாவது, ‘ஏவும் கலை’ கைவந்தாயிற்று. நாஸாவிலிருந்து கொண்டு வந்த ராக்கெட் அது. அடுத்து, விண் ஓடமொன்றைச் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்ற இலக்குடன் எத்தனையோ தடைகளுக்கும் பொருளாதாரச்...

  Read More
  error: Content is protected !!