துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க...
வணக்கம்
சரியாக ஒரு மாதம் முன்பு நாம் எதை எண்ணி, எதற்கு அச்சப்பட்டு எச்சரித்தோமோ அதை இன்று அரசே செய்ய ஆரம்பித்துவிட்டது. இந்தியா முழுதும் கோவிட் தொற்றுப் பரவலின் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர்களும் சுகாதாரத் துறை அலுவலர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் காயத்ரி. ஒய்யின் ‘மீண்டும் மீண்டும் கோவிட்’ கட்டுரை இந்தப் புதிய ரக (ஆர்க்டூரஸ்) கோவிட் குறித்த விரிவான தகவல்களை அளிக்கிறது.
சென்ற வாரம் சர்வதேச மீடியாவில் உக்ரைன் போர்ச் செய்திகளைக் காட்டிலும் அதிக அளவு பேசப்பட்ட விவகாரம், சீனாவுக்கு இலங்கை அனுப்பவிருக்கிற குரங்குகள். இலங்கையில் குரங்குகள் அதிகம் என்பது எளிய புள்ளி விவரத் தகவல். சீனா அந்தக் குரங்குகளை வாங்கி என்ன செய்யப் போகிறது என்பதுதான் விவகாரமே. மிருகக் காட்சி சாலைகளில் விடப் போவதாகச் சொல்கிறார்கள். கொன்று தின்றாலுமே நாம் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் கோவிடே சீனாவின் ‘உற்பத்தி’ என்கிற கான்ஸ்பிரஸி தியரி உலகெங்கும் உலவும் வேளையில் இக்குரங்குகளை அவர்கள் ஆய்வு நோக்கில் தருவிப்பார்களென்றால் சிக்கல்தான். ஏனெனில் சீனாவில் என்ன நடக்கிறது என்பது பொதுவாகவே ஒரு குத்துமதிப்புத் தகவல்தான். உண்மை என்றுமே முழுதாக அங்கிருந்து வந்ததில்லை. ரும்மான் எழுதியிருக்கும் ‘குரங்கு பிசினஸ்’ கட்டுரை மேற்படி இரு தேசங்களின் ஒப்பந்தத்தின் பின்னணியை விவரிக்கிறது.
மறுபுறம், இலங்கையைத் தாக்கியிருக்கும் இன்னொரு பூதமான க்ரிப்டோ ஊழல் குறித்து (இல்லாத கரன்ஸி, பொல்லாத விளையாட்டு) ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் கூட்டணிச் சிந்தனைகள் பல தலைவர்களுக்கு மேலோங்கத் தொடங்கியிருக்கின்றன. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இதனைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆளும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை தேசிய அளவில் அமைக்க விரும்பும் அவரது முயற்சி குறித்துப் பாண்டியராஜன் எழுதியிருக்கும் ‘கைகொடுப்போர் எத்தனை பேர்?’ ஊன்றி வாசிக்க வேண்டிய மற்றொரு கட்டுரை.
யூட்யூபில் சமையல் செய்து காட்டி சம்பாதிக்கும் இல்லத்தரசிகளைக் குறித்து நந்தினி கந்தசாமி எழுதியிருக்கும் கட்டுரை, சென்னை தீவுத் திடலில் உருவாகியிருக்கும் டிரைவ் இன் உணவகம் குறித்து ஶ்ரீதேவி கண்ணன் எழுதியிருக்கும் கட்டுரை, சென்னையில் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் குறித்து கோகிலா எழுதியிருக்கும் கட்டுரை என இந்த இதழில் நீங்கள் ரசித்துப் படிக்க நிறைய உள்ளன.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
திசையெலாம்
ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அதிபர் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதிபர் பைடன், இஸ்ரேல் காஸா போர் குறித்து எடுக்கும் முடிவுகள் அவரின்...
தேர்வுக்கூடத்தி்ல் டீச்சரிடம் பேப்பர்களை ஒப்படைக்கக் கடைசி ஐந்து நிமிடம் என்று மணி அடித்ததும் இன்னும் தீவிரமாக எழுதுவார்கள் சில மாணவர்கள். அப்படி...
ஒரு நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவ வலியும் வந்துவிட்டது. அவசர ஊர்தியையும் அழைத்தாயிற்று. ஆனால் அந்த வண்டி வரக் கூடிய அளவு சீரான பாதை இல்லை...
அறுசுவை
மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி அயோத்தியில் புதிதாகக் கட்டப்படும் ராமர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி...
தென்னகத்தில், வடகிழக்குக் காற்று நிலத்திலிருந்து கடலுக்கு வீசும் போது அதன் ஒரு பகுதி வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தை எடுத்து, மழையைத் தாங்கும்...
“அண்ணா, நான் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டேன் என்று அம்மாவிடம் சொல்லாதே. வருத்தப்படுவார்கள்.” மெல்லிய, சோர்வடைந்த குரலில் புஷ்கர், அண்ணன்...
இவ்வாண்டின் கோடை விடுமுறையில் நியூஜெர்சி மாகாணத்தில் ராபின்ஸ்வில்லியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது ஸ்வாமி நாராயணர் கோயில். 2010ம் ஆண்டில் தொடங்கிய...
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், விளையாட்டு – கேளிக்கை என்பதற்கு அப்பால் நமக்குச் சில செய்திகளை மௌனமாகத் தெரியப்படுத்துகின்றன...
ரசித்து ருசிக்க
அயோத்தியில் சுமார் 1800 கோடி செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இராமர் கோயில் பணிகள், திட்டமிட்டபடி அடுத்த மாதத்துடன் நிறைவடைகின்றன. பிரதமர்...
இவ்வாண்டின் கோடை விடுமுறையில் நியூஜெர்சி மாகாணத்தில் ராபின்ஸ்வில்லியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது ஸ்வாமி நாராயணர் கோயில். 2010ம் ஆண்டில் தொடங்கிய...
தொடரும்
டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள் அனிதா. இருபத்தி மூன்று வயதாகிறது அவளுக்கு. தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் வேலை. வேலை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்ற சராசரி ஐ.டிக்காரர்களின்...
“ஒரு மில்லியன் பூக்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்தப் பெண்ணைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும்”. வாலண்டினா தெரஸ்கோவா என்கிற இளம் பெண், விண்ணுக்குப் போனதைக் கொண்டாடத் தயாராகியது நிகிதா குருசேவின் சோவியத். வான மைதானத்தில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பனிப்போரில் சோவியத் தேசம் மிகுந்த பெருமிதத்தோடு...
79. நேரு, இந்திரா கைது காந்திஜி தன் உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டாலும், இறுதியாக அவர் தனக்கே உரிய கடிவாளத்தைப் போடத் தவறவில்லை. போராட்டத்தில் இறங்கலாம். ஆனால், அதில் வன்முறைகளுக்குத் துளியும் இடமில்லை! நம்முடைய போராட்டம் நூறு சதவிதம் அஹிம்சை வழியில்தான் நடக்க...
07 – போரால் மீண்டெழுந்த சோவியத் நாள்: 22 – ஜூன் – 1941. இடம்: கதின் கிராமம், பெலாரஸ் எட்டு வயது விக்டர் ஆண்ட்ரீவிச், வைக்கோல் களஞ்சியத்தில் அம்மாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கிராமத்திலிருந்த அனைவரும் அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது...
78 எதிர்கொள்ளல் 2 யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான். ‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’ ‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு...