வருடம் 1946. சோவியத்தின் 75% சதவிகித எண்ணெய் தேவைகளை அசர்பைஜான் தான் பூர்த்திசெய்துகொண்டிருந்தது. அப்போது அசர்பைஜான் சோவியத் யூனியனின் அங்கம். அடுத்த...
வணக்கம்
இந்த இதழின் சிறப்புப் பகுதி, தங்கம் பற்றியது. சரித்திர காலம் தொடங்கி, சமகாலத் தங்க வேட்டைகள் வரை இதில் அலசப்படுகிறது. தங்கத்துக்குத் தொடர்பில்லாவிட்டாலும் ராசிக் கற்கள் பற்றிய ருசிகரமான கட்டுரை ஒன்றும் அப்பகுதியுடன் இணைவதன் பொருத்தம், அனைத்தையும் படித்து முடிக்கும்போது புரியும்.
மாணவர்களுக்கு செருப்பு தைத்துத் தரும் இலங்கையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரைக் குறித்து ரும்மான் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. ஆசிரியர்-மாணவர் உறவு இங்கே சட்டபூர்வமாகிக்கொண்டிருக்கும் காலம். பிள்ளைகளைத் திட்டக் கூடாது, அடிக்கக் கூடாது, கண்டிக்கக் கூடாது; வெறுமனே வகுப்புக்கு வந்து பாடம் எடுத்துவிட்டுப் போனால் போதும் என்பது கிட்டத்தட்ட மாநிலம் முழுதும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த சௌகரியத்தில் சில மாணவர்கள் வரம்பு மீறி நடந்துகொள்ளும் செய்திகளும் அடிக்கடி வருகின்றன. கண்ணுக்குத் தெரியாமல் ஒரு தலைமுறையை நாசம் செய்துகொண்டிருக்கிறோம். பலனை அறுவடை செய்யும்போது பாவத்தின் கனம் புரியும்.
அது ஒரு புறம் இருக்க, மேற்படி இலங்கை ஆசிரியர் தனது அன்பான ஒரு கூடுதல் செயல்பாட்டின் மூலம் மொத்த மாணவர் சமுதாயத்தையும் தன்வயப்படுத்தியிருக்கிறார். இப்படி ஒரு ஆசிரியரிடம் நாமும் படிக்க மாட்டோமா என்று இலங்கை எங்கும் வாழும் மாணவர்கள் ஏங்குமளவுக்கு அவரது பெயரும் செயலும் பிரபலமாகியிருக்கிறது.
ஜி20 மாநாடு குறித்து பாண்டியராஜன் எழுதியுள்ளதும் சவூதி அரேபியாவில் நடைபெற்ற சீன-அரேபிய மாநாடு பற்றி நஸீமா எழுதியுள்ளதும் ஒன்றுடன் ஒன்று நேரடித் தொடர்பில்லாவிட்டாலும் உற்று நோக்கினால் சில பொருத்தங்களைக் கொண்டிருப்பதை உணர முடியும். தேசங்களிடையே மாறி வரும் உறவு நிலைகளைப் பொருளாதாரக் காரணங்களே தீர்மானிக்கின்றன. கைகுலுக்கல்களுக்குப் பின்னால் உள்ள கணக்குகள் புரிந்துவிடுமானால் நாம் வாழும் காலம் எத்தனை அபாயகரமானது என்பது விளங்கிவிடும்.
இந்த இதழின் மிகச் சிறந்த அம்சமாக பீட்டர் ஹாக்ஸின் ‘லயோலா என்ற பெரும்பாம்பின் கதை’ சிறுகதையை (ஆங்கில வழி மொழிபெயர்ப்பு: சுகுமாரன்) முன்வைக்கிறோம். படித்து முடிக்க ஐந்து நிமிடங்கள்கூட ஆகாது. ஆனால் ஒரு மாபெரும் அவல சரித்திரம் அக்கதைக்குள் புதைந்திருக்கிறது. இப்படிக்கூட எழுத முடியுமா என்று திகைக்கச் செய்யும் சிறுகதை. கதை குறித்த மாமல்லனின் சிறப்புக் கட்டுரையைக் கையோடு வாசியுங்கள். ஒரு கலைப்படைப்பை எப்படிப் புரிந்துகொள்வது, எப்படி ரசிப்பது என்று அது சொல்லித் தரும்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
அயல்
ஆதிகாலத்தில் குழந்தையைப் பெற்றோமா சமைத்தோமா வேலை முடித்துக் களைத்து வந்த கணவனுக்கு பணிவிடை செய்தோமா என்று மட்டும் பெண்கள் இருந்தபோது உலகம் எவ்வளவு...
பங்களாதேஷ் இடைக்கால அரசு பதவியேற்று நூறு நாள்கள் கடந்துவிட்டது. எதிர்பார்த்த வேகம் இல்லை எனினும் முன்பை விட இப்போது நிலைமை மோசமாகவில்லை என்கிறார்கள்...
சிறப்புப் பகுதி: என் தங்கமே!
கதம்பம்
சென்னை நகரின் தீராப் பிரச்னைகளுள் முதன்மையானது, வடிகால் வழித் தடங்கள். மழைக்காலங்களில் பெரும்பாலான பகுதிகள் தாற்காலிக நீர்த்தேக்கங்களாகிவிடுவது...
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் கேரளாவின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலும் நடந்து...
தொடரும்
128 பத்து ஷங்கர் ராமன் வீட்டுப் பச்சை நிற இரட்டை மரக்கதவின் மேல்பகுதியில் மெல்லிய இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆளே ஒல்லி என்பதால் இவன் கைகளும் மெலிதானவை; விரல்களும் நீளம். எனவே, இவனே கைவிட்டுத் தாளிடப்பட்டிருக்கும் கதவைத் திறந்துவிடுவான். காலிங் பெல் அடித்தாலும் டிவி...
ப்ராம்ப்ட் எனப்படுவது யாதெனின்… ப்ராம்ப்ட் என்பது வெறுமனே ஒரு கேள்வியல்ல. அது நாம் கொடுக்கும் ஆணை. நாம் விரும்பும் செயலை ஏ.ஐ திருத்தமாகச் செய்து முடிப்பது இந்த ஆணையைப் பொருத்ததே. ஓர் உதாரணம்: கவர்மெண்ட் ஆர்டர்களைப் (GO) பார்த்திருப்பீர்கள். நாளை விடுமுறை என்பது தான் செய்தியாக இருக்கும். ஆனால் நாளை...
iii. ரோம், கிரேக்கம் சமகால விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும் மற்போரின் வகைகள் இரண்டு. ஒன்று ‘ஃப்ரீ ஸ்டைல்’ மற்போர் எனப்படும். இன்னொன்று ‘கிரீக்கோ-ரோமன்’ மற்போர் எனப்படும். கிரீக்கோ-ரோமன் என்னும் பெயரிலிருந்தே இந்த வகை மற்போர் ரோமானிய கிரேக்கப் பகுதிகளிலிருந்து...
3. எல்லோரும் நல்லவரே பொதுவாக அறிவுரை வழங்குவதென்றால் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். சிலர் நாம் கேட்கும் போது வழங்குவர். அப்படியான சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் அறிவுரைகள் நமக்குப் பிடிக்காவிட்டாலும் அவர்கள் மீது நாம் கோபப்படுவதில்லை. கேட்டதற்குக் கிடைத்த பலன் என்று சகித்துக் கொள்வோம். ஆனால் நாம்...
33. கசப்பு மருந்து ஒன்றோ, இரண்டோ, பலவோ, கடனோடு வாழ்வது இன்றைக்குப் பலருக்கு இயல்பாகிவிட்டது. குறைந்தபட்சம் ஒரு வீட்டுக் கடன், அப்புறம் வண்டிக் கடன், கல்விக் கடன், திருமணக் கடன் என்று நீளும் இந்தப் பட்டியலில் சுற்றுலாவுக்கு வாங்கிய கடன், புது மொபைல் ஃபோனுக்கான கடன், வீட்டில் பெரிய பொருட்களை வாங்கிய...
132. நேருவின் மரணம் நேரு அரசியல் ரீதியாக மதச் சார்பற்றவர் என்றும் தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் அறியப்பட்டவர். அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனாலும், நேருவுக்கு நெருங்கிய ஒருவர், நேருவின் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டி பலன் கேட்டார். அந்த ஜோதிடர், “நம்பிக்கைக்குரிய...