Home » Home 13-09-22

வணக்கம்

நேற்று இருந்து, இன்று இல்லாமல் போய்விட்டவற்றை நினைவுகூரும் விதமான இந்த இதழின் சிறப்புப் பகுதியில் முதலில் மூன்று கட்டுரைகள் வெளியிட நினைத்திருந்தோம். பிறகு அது நான்கானது. அதுவே ஐந்தாகி ஆறுமானது. விஷயம் அதுவல்ல. அறுபது கட்டுரைகள் வெளியிட்டாலும் இந்தக் குறிப்பிட்ட இயல் மட்டும் முழுமையடைய வாய்ப்பே இல்லை என்பதைக் கண்டுகொண்ட தருணம் இருக்கிறது பாருங்கள்! அது, அபாரம்.

சிறு வயது முதல் நாம் மறந்து தொலைத்தது, இழந்து வருந்தியது, விரும்பி விலக்கியது என்று நம் வாழ்விலிருந்து காணாமல் போய்விட்டதையெல்லாம் மீட்டுவிட முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும் என்று எண்ணாதவர் இருக்க முடியாது. ஆனால் எதை நம்மால் அப்படியே மீட்க முடிந்திருக்கிறது? நபர்களின், இடங்களின், பொருள்களின், சம்பவங்களின் வாசனையை நினைவில் மீட்க முடிந்தாலே திருப்தியடைந்துவிடுகிறோம். உண்மையில் கை நழுவிச் சென்றதெல்லாம் காலம் கொள்ளை கொண்டு போனவைதாம்.

இந்த இதழில் ஹரன் பிரசன்னா எழுதியிருக்கும் திருநெல்வேலியின் திரையரங்குகள் குறித்த ஒரு கட்டுரை போதும். தனது பால்யத்தின் வழியாக நம் ஒவ்வொருவரின் பால்யத்துக்குள்ளும் நுழைந்து வெளியேறும் அற்புதத்தை அதில் அவர் நிகழ்த்திக் காட்டியிருப்பதை மிகவும் ரசிப்பீர்கள்.

இருபது வருடங்களுக்கு முந்தைய தமிழ் இணையத்தளங்கள், முப்பது வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்க்கை, நாற்பது வருடங்களுக்கு முந்தைய கேளிக்கை அனுபவங்கள், ஐம்பதாண்டுகளுக்கும் முற்பட்ட வீட்டுப் பயன்பாட்டு உபகரணங்கள் என்று இந்த இதழெங்கும் பழமையின் நறுமணம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

கடந்து சென்ற எதையும் நம்மால் மீட்டெடுக்க முடியப் போவதில்லை. குறைந்தபட்சம் நினைவில் சேமித்து, நீந்திக் களிக்கலாமல்லவா?

சென்ற வாரம் காலமான இங்கிலாந்து ராணி எலிசபெத் குறித்து ஜெயரூபலிங்கமும் ராணியின் ‘ராணிப் பதவி நீக்கிய’ தோற்றத்தைக் குறித்து பாபுராஜ் நெப்போலியனும் இந்த இதழில் எழுதியிருக்கிறார்கள். அமீகரகத்தில் மழையின் பொருட்டு கடைப்பிடிக்கப்படுகிற ‘க்ளவுட் சீட்டிங்’ நுட்பம் பற்றிய நசீமாவின் கட்டுரை மிகவும் முக்கியமானது. அதைப் போலவே கிரிப்டோ கரன்சி வர்த்தகம் தொடர்பான தியாகராஜனின் அறிமுகக் கட்டுரையும் பல திறப்புகளைத் தரவல்லது.

சென்ற வாரம் வெளியான இளையராஜா சிறப்புக் கட்டுரைகள் பெற்ற வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. காலம் என்னவாக மாறினாலும் மக்களின் அடிப்படை விருப்பம், ரசனை, ஆர்வங்கள் அடியோடு மாறிவிடுவதில்லை என்பதை அது புரிய வைத்தது. அது தந்த ஊக்கத்திலேயே இந்த இதழை உருவாக்கியிருக்கிறோம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மேலும் பல சிறப்பான படைப்புகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

 • சிறப்புப் பகுதி: காணாமல் போனவை

  நினைவில் வாழ்தல்

  அறிவியலும் சில அமெரிக்க அத்தைப் பாட்டிகளும்

  வளர்ந்த நாடு என்று இன்று சொன்னாலும் அமெரிக்கா வளர்ந்துகொண்டிருந்த காலம் ஒன்று உண்டல்லவா? அன்று அமெரிக்கர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? சில...

  நினைவில் வாழ்தல்

  நேற்றைய காற்று

  தமிழ் இணையம் செயல்படத் தொடங்கிய காலத்தில் உயிர்ப்புடன் இருந்த பல இணையத்தளங்கள் இன்று இல்லை. அல்லது இருக்குமிடம் தெரியாமல் இருக்கின்றன...

  நினைவில் வாழ்தல்

  ‘காலை சாப்பிட்டேன் நான் இரண்டு இட்லிகளை…’

  1959ம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தனது சிறிய சேவையைத் தொடங்கியது. ஒரு குழந்தை வளர்வதைப்போல் இருபத்து மூன்றாண்டுகள் மெதுவாக வளர்கிறது...

  நினைவில் வாழ்தல்

  தடங்கலுக்கு வருந்தினோம்; மறந்ததற்கு வருந்துவோமா?

  என் மகளுடைய பாடப் புத்தகத்தில் புல்லி (கப்பி) பற்றி விளக்குவதற்கு இப்போதும் கிணறு படம் தான் இருக்கிறது. பென்டுலம் (ஊசல்) பற்றி விளக்க அந்தக் காலக்...

  நினைவில் வாழ்தல்

  மூன்று அடையாளங்கள்

  இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு டிரைவ் இன் உட்லண்ட்ஸ் என்றால் தெரியாது. (2008ல் அது மூடப்பட்டு, பிறகு செம்மொழிப் பூங்கா ஆனது.)...

  உலகைச் சுற்றி

  உலகம்

  ஈரானும் ஹிஜாபும்: இருண்ட கால நாட்குறிப்பு

  கடந்த மூன்று வாரங்களாக ஈரான் கொதித்துக் கொண்டிருக்கிறது. இப்போது வரை (திங்கள் பிற்பகல் 02.30) தொண்ணூற்றிரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தலைநகர்...

  உலகம்

  பரலோகம் போகுமா பவுண்ட்ஸ்?

  புதிய பிரிட்டிஷ் பிரதமராக லிஸ் டிரஸ் பதவி ஏற்ற இரண்டாவது நாளே எலிசபெத் ராணி பரலோகம் போய் விட்டார். உலகமே அதிர்ச்சி அடைந்தது. என் பாட்டி உயிரோடு...

  ருசிகரம்

  நுட்பம்

  ஜன்னல் தமிழ்

  முகமது-பின்-துக்ளக் சினிமாவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுல்தான் துக்ளக்காக வரும் சோ, அழகாகத் தமிழ் பேசுவார். திடுக்கிட்டு, “உங்களுக்கு...

  நம் குரல்

  காந்தி ஜெயந்தியும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

  காந்தி ஜெயந்தியன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலமா என்று தமிழகத்தில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. ஏன்? கொஞ்சம் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்...

  தொடரும்

  தொடரும் நாவல்

  ஆபீஸ் – 19

  19 மானக்கேடு ரங்கனுக்கு ஒன்று அவன் அப்பன் துரைராஜுக்கு ஒன்று என – ஐசி பேப்பர்களை எழுதியபடியே – அவனையறியாமல் இடதுகையால் வறட்டு வறட்டென காலை சொறிந்துகொண்டதில், எப்போதும் வேர்வையாய்த் துளிர்க்கிற எக்ஸீமா ரத்தத்துளிகளாய் வெளிப்பட்டது. நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் யானைக்கால் போல பாதம்...

  Read More
  ஆன்மிகம்

  சித் – 19

  19. சம ஆதி சமாதி என்பது சித்தர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட கோவில் என்பது நமக்குத் தெரியும். கடவுளைக் கும்பிடுவதை விட்டு இறந்த உடலைக் கும்பிடுவது சரியா என்று சிலர் வாதம் செய்வதைக் காண முடியும். சமாதி என்பது உடலை அடக்கம் செய்யும் இடம் எனக் கல்லறை போல நினைத்தால் அது...

  Read More
  தொடரும்

  என் கனவை விட்டுச் செல்கிறேன் – 19

  19. அமன நிலை மீண்டும் குழந்தையாக மாறுவதே தியானம் – ஓஷோ “மனிதன் சிரிக்கத் தெரிந்த மிருகமா..? கடவுளை நான் சிரிப்பு வடிவில் தான் காண்கிறேன். வேறு எந்தத் தியான நிலையிலும் அவனைக் காண விரும்பவில்லை. இருபத்து நான்கு மணி நேரமும் சிரித்த நிலையில் இருப்பவனைதான் நான் கடவுள் என்று கூறுவேன். கடவுள் மனித...

  Read More
  வெள்ளித்திரை

  தொண்டர் குலம் – 18

  18. வியாபாரம் அடிக்கப் போவதாக மிரட்டும் ரௌடிகளிடம் நாய் சேகர், “ஏய்… ஏய்… சிட்டி, செங்கல்பட்டு, நார்த்ஆற்காடு, சௌத்ஆற்காடு, FMS வரைக்கும் பாத்தவன் நானு. அருவாக்கம்பு எல்லாம் என்னை டச் பண்ணி டயர்ட் ஆகியிருக்கு” என்று டயலாக் விடுவார். அந்த வசனத்தின் அர்த்தம் சினிமாத்துறையில்...

  Read More
  தொடரும் நாவல்

  ஆபீஸ் – 18

  18 புகை சைக்கிளில் இருந்து இறங்கும்போது, மொட்டை மாடியில் ஆண்ட்டனா இருக்கிறதா என்று அனிச்சையாகத் தலை அண்ணாந்தது. அதற்குள் எப்படி டிவி வந்திருக்கமுடியும் என்று அவனுக்கே அபத்தமாகப் படவே, ஆனாலும் தான் இவ்வளவு பரக்காவெட்டியாக இருக்கக்கூடாது என்று தோன்றியது. 0 வீட்டுக் கதவை வேகமாகத் தட்டினான்...

  Read More
  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை – 18

  18. யுத்த சத்தம் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலேயே இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள், சுதந்திரப் போராட்டம் போன்ற விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். இங்கே வந்த பிறகும் உலக நடப்புகளை உற்றுக் கவனித்து வந்தவர். இந்திய அரசியலின் பக்கம் மட்டும் தன் பார்வையைத் திருப்பாமல்...

  Read More
  error: Content is protected !!