Home » Home 13-07-22

வணக்கம்

மக்கள் புரட்சி என்றால் இப்படி இருக்க வேண்டும்.

சிறிதளவு வன்முறைகூட இல்லாமல், அகற்ற விரும்பிய அதிபரை அகற்றிக் காட்டியிருக்கிறார்கள் இலங்கை மக்கள். இனி வரப் போவது யார், என்ன செய்வார், எத்தகைய மாயம் நிகழும், அல்லது அப்படி ஏதாவது நிகழத்தான் செய்யுமா என்பதெல்லாம் பிறகு. இலங்கை மக்களின் இந்த அமைதிப் புரட்சி உலகுக்குச் சொல்லித் தரும் பாடம் இங்கே முக்கியமானது.

ஒருங்கிணைந்த நோக்கம், ஒருங்கிணைந்த செயல்பாடு இருக்குமானால் அமைதியான முறையிலேயே எந்த மலையையும் புரட்டலாம். எப்பேர்ப்பட்ட அராஜக ஆட்சியாளர்களையும் விரட்டி அடிக்கலாம்.

கவனியுங்கள். இது கட்சிகள் முன்னெடுத்த போராட்டமல்ல. இயக்கங்கள் நடத்திய புரட்சியல்ல. மக்கள் தீர்மானித்தது. தன்னியல்பாக அவர்களேதான் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்தார்கள். அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிறகு அவர்களோடு தம்மை இணைத்துக் கொண்டார்கள். இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவும் பதவி விலகிய அதிகாரபூர்வச் செய்தி இனி வரும்.

இது நிகழ்வதற்கு முன் நடந்த மொத்தச் சம்பவங்களையும் இந்த இதழில் ஸஃபார் அஹ்மத் காட்சிப்படுத்தியிருக்கிறார். கொழும்பு காலி முகத் திடலில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டத்துடன் பயணம் செய்து ஒன்பதாம் தேதி புரட்சி வெற்றி கண்ட கணம் வரை உடன் இருந்து பார்த்து எழுதியிருக்கிறார்.

இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவுக்குப் பதவி போகிறதென்றால் இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் பதவி விலகியிருக்கிறார். பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவிக்கும் தேசத்தை மீட்க முடியாமல் தடுமாறிய ஜான்சன், மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்ததன் பின்னணியில் வேறு பல காரணங்களும் உள்ளன. அவற்றை விளக்கும் ந. ஜெயரூபலிங்கத்தின் கட்டுரையும், ஹாங்காங் இணைப்பின் இருபத்தைந்தாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை நிகழ்த்திய கையோடு சீனா மீண்டும் தைவானுடன் மல்லுக்கட்ட ஆயத்தமாவதன் வரலாற்றுப் பின்னணியை விவரிக்கும் பூவராகன் கட்டுரையும் இந்த இதழில் முக்கியமானவை.

சிறப்புப் பகுதி, முன்பே அறிவித்தது போல ‘டிவி சீரியல்களும் தமிழ்ப் பெண்களும்’. சுவாரசியம் மிக்க மூன்று கட்டுரைகள் இப்பகுதியில் இடம் பெறுகின்றன. கூடவே சிவசங்கரி வசந்தின் நகைச்சுவைக் கட்டுரை ‘டம்மி பீஸ் மார்க்கெட்’.

சிறப்புப் பகுதி சீரியல்கள் என்பதால் ‘வரலாறு முக்கியம்’ பகுதியில் தாலியைத் தொட்டிருக்கிறார் முருகு தமிழ் அறிவன். தாலி இல்லாமல் தமிழர் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் தாலி இல்லாத சீரியல் ஏது?

கமெண்ட்ஸ் பகுதியில் இருந்த சில பிரச்னைகள் இப்போது முற்றிலும் தீர்க்கப்பட்டுவிட்டன. இனி நீங்கள் உங்கள் கருத்துகளை அந்தந்தக் கட்டுரையின் இறுதியிலேயே தெரிவிக்கலாம். மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழும் பெறுகிற கவனமும் வரவேற்பும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதழை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களையும் சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இது உங்கள் பத்திரிகை.

சிறப்புப் பகுதி: தமிழ் சீரியல்களும் தமிழ்ப் பெண்களும்

உலகெலாம்

சிந்திக்கலாம்

 • தொடரும்

  தல புராணம் தொடரும்

  ‘தல’ புராணம் – 9

  பொதி சுமக்கும் மனிதர் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஆஸ்டின் நகரத்தில் ராஜேஷ் எனும் இந்திய இளைஞன் சோர்வுடன் தனது அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தான். அவனது சோர்வுக்கான காரணம் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து முடித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. ஆனாலும்...

  Read More
  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை – 35

  35. புதுக் கட்சி லக்னௌவில் பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சி.ஆர்.தாஸ், காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தின் நடைமுறை குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சி.ஆர்.தாசின் கருத்துக்களை ஆதரித்தார். மோதிலால் நேருவோ, காந்திஜி தலைமையேற்று...

  Read More
  தொடரும் நாவல்

  ஆபீஸ் – 34

  34 வம்பு வண்ணதாசன் பேச்சைக் கேட்டுத் திரும்பிவந்திருக்கக் கூடாதோ என்று தோன்றிற்று. போபோ போய் வேலையைப் பார் என்பதைப்போல விரட்டாதகுறையாய் அனுப்பிவைத்த ஏசி மீது எரிச்சலாய் வந்தது. இந்த ஆபீஸ் அந்த ஆபீஸ் அந்த ஏசி இந்த அதிகாரி என்று எவனும் வேறில்லை. எண்ணத்தில் செயல்பாட்டில் அதிகாரத்தில் எல்லாம் ஒன்றுதான்...

  Read More
  உயிருக்கு நேர் தொடரும்

   உயிருக்கு நேர் – 9

  உ.வே.சாமிநாதய்யர்   1800’களின் மத்தி வரை தமிழ்நாட்டின் தமிழிலக்கியங்கள் என்று அறியப்பட்ட நூல்கள் அனைத்தும் சுவடிகள் வடிவில்தான் இருந்தன. சுவடிகள் பனையோலையின் மூலம் உருவாக்கப்பட்டன. சுவடிகளை உருவாக்கப் பனையோலைகளை எடுத்து, ஒரே அகலமுள்ள ஓலைகளை முதலில் தேருவார்கள்; பின்னர் அவற்றை வெந்நீரில்...

  Read More
  கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

  கடவுளுக்குப் பிடித்த தொழில் – 9

  நரம்புச் சிதைவு ஸ்டெம் செல்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மீளுருவாக்கம் செய்யும் மருத்துவ முறைகள், அதுவும் அரசினால் அனுமதிக்கப்பட்ட ஒரு சில சிகிச்சை முறைகள் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளன. பெரும்பான்மையானவை ஆய்வு நிலையிலேயே உள்ளன. clinical trials எனப்படும் இத்தகைய சுமார் 5000 ஆய்வுகள்...

  Read More
  error: Content is protected !!