Home » Home 10-05-2023

வணக்கம்

தி கேரளா ஸ்டோரி படத்தின் நாயகி பெரும்பாலான காட்சிகளில் காதுக்கு மேலே ஒரு முழம் பூவை வைத்துக்கொண்டு வருகிறார். அவர் அப்பாவி அல்லது மதராஸி அல்லது இந்து என்பதற்கான குறியீடாக இருக்கலாம். படத்தைப் பார்த்தால் அந்தப் பூ பார்வையாளர்கள் காதுக்கு இடம் மாறிவிடும். இந்தப் படம் முஸ்லீம்களுக்கு எதிராக இருக்கிறது என்பது மிகத் தட்டையான புரிதல். ஒட்டுமொத்த தென்னிந்தியப் பெண்களை மிக மட்டமாக சித்தரிக்கிறது படம். தமிழ்ப்படங்களில் வரும் லூசுப் பெண் ஹீரோயின் கேரக்டர்கள் எல்லாம் இவர்களிடம் போட்டிக்கே வரமுடியாது. வேற லெவல் முட்டாள்கள் இவர்கள்.

நர்சிங் கல்லூரியில் பயில வருகிறார்கள் மூன்று பெண்கள். இரண்டு பேர் இந்துக்கள். ஒரு பெண் கிறித்துவர். இவர்களுடன் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் நான்காவாது பெண் முஸ்லீம். இந்த முஸ்லீம் பெண் பெரிய தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர். குண்டு வைக்கும் தீவிரவாதிகள் இல்லை இவர்கள். வயசுப் பையன்களை வேலைக்கு வைத்து பெண்களைக் காதலிக்க வைத்து மதமாற்றும் தீவிரவாதிகள். முஸ்லீம் பெண் தொழுவார், ஓட்டலுக்குத் தோழிகளுடன் சென்று சாப்பிடுவார். ஆனால் மற்ற மூன்று பெண்களும் முஸ்லீம் பெண்ணின் உறவுக்காரப் பையன்களுடன் டிஸ்கோவில் நடனமாடுவது, குடிப்பது, மால்களில் சுற்றுவது என்று இருப்பார்கள். ஒருநாள் சில பொறுக்கிகள் இந்தப் பெண்களின் டாப்ஸ் கையைக் கிழித்து சிலீவ்லெஸ் ஆக்கி அவமானப்படுத்திவிடுகிறார்கள். இந்தப் பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்த நிலை வராது என்பார் முஸ்லீம் தோழி. ஹிஜாப் அணிந்தால் பள்ளிக்கே போக முடியாது என்ற நிலையில் இந்த இந்துப் பெண்கள் மாலுக்குச் சுதந்திரமாகச் செல்வதற்காக அதை மாட்டிக்கொள்கிறார்கள்.

ஹிஜாபுடன் சுதந்திரமாக முஸ்லீம் பையன்களுடன் ஊர் சுற்றுகிறார்கள். உடலுறவு கொள்கிறார்கள். அதனால் கர்ப்பமாகிறாள் நாயகி. காதலால் அல்ல, கர்ப்பமானதால் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். அநேகமாக புர்கா மாட்டினால் கர்ப்பத்தை மறைக்கலாம் என்பது ஐடியாவாக இருக்கும். அதற்கு ஒரு நைட்டி வாங்கி இருக்கலாம். ஆனால் இந்தப் பெண் மதம் மாறி கல்யாணம் செய்துகொள்கிறாள். இதற்கெல்லாம் லவ் ஜிகாத் எனும் பெயரே செல்லாது. சேர்த்துவைக்கிறேன் என்று சொல்லும் அப்பாவி இந்து அம்மாவுடன் போகாமல் அந்தப் பையனுடன் ஆஃப்கனிஸ்தான் போகிறாள்.

இன்னொரு இந்துப் பெண்ணின் அப்பா கம்யூனிஸ்ட். அதனால் கையில் பெரிய புத்தகத்துடன் இருப்பார். இந்தப் பெண்ணின் நிர்வாணப புகைப்படம் வெளியானதால் தற்கொலை செய்து கொள்கிறாள். கிறித்துவப் பெண், முஸ்லீம் பையன்களால் ரேப் செய்யப்படுகிறாள். மற்ற இரு பெண்களையும் எச்சரிக்கை செய்யாமல் அந்த கெட்டவர்களிடம் விட்டுவிட்டு கிளம்பி வீட்டுக்குப் போய்விடுகிறார். ஆஃப்கன் சென்றவள் அங்கு குழந்தை பெற்று பலரால் ரேப் செய்யப்பட்டு தப்பித்து போலீஸிடம் பிடிபட்டு சிறை செல்கிறாள். அத்துடன் படம் முடிகிறது.

வீட்டை விட்டு வெளியில் வந்தால் ஆபத்து என பயமுறுத்தி, பெண்களை வீட்டில் அடைக்கப் பார்க்கிறார்கள். கூடவே பெண்களை வளர்க்கத் தெரியாத பெற்றோர்களாக இந்துக்கள் அனைவரையும் அசிங்கப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

(மூன்று பேரை முப்பத்திரண்டாயிரம் பேர் ஆக்குவது எப்படி? - தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் முழு விமரிசனத்தை மேலே படிக்கக் கீழே செல்லவும்.)

நம்மைச் சுற்றி

உலகைச் சுற்றி

உலகம்

அடையாளங்களை அழித்தொழிப்போம்!

ஜல்லிக்கட்டுப் போராட்டம் – அன்றைய சூழலில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதா? உண்மையில் தமிழனின் கலாசார அடையாளத்தை மீட்டெடுக்க உருவெடுத்தது...

சமூகம்

ஒரு பேரழிவின் மிச்சங்கள்

அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக்...

ஆளுமை

லிண்டா யாக்கரினோ: புதிய தலைவியும் பெரிய சவால்களும்

ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார்...

உலகம்

இம்சை அரசனின் பிரம்மாஸ்திரம்

நாட்டின் அனைத்து ஆண்களும், பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 28 சிகை அலங்காரங்களில் ஒன்றைத் தவிர வேறொன்றை கிராஃபிக்ஸில்கூட நினைத்தும் பார்க்கக்கூடாது...

உலகம்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களும் புதிய வெற்றிக் களிப்புகளும்

துருக்கி அதிபர் ரஜப் தையிப் எர்டோகனுக்கு சங்கு சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதாகவே மே 14-ம் தேதி நடந்த அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு...

சுற்றுலா

இசுறுமுனியா

இலங்கையை பௌத்தத் தூபிகளின் தேசமெனச் சொல்வார்கள். இந்தத் தீவின் எப்பகுதிக்குச் சென்றாலும் வானளாவிய தூபிகள் வியாபித்திருக்கும். இந்தத் தூபிகளின் தீவில்...

நுட்ப பஜார்

  • தொடரும்

    error: Content is protected !!