இலங்கை ஜனாதிபதி ரணிலும் அவர் பரிவாரங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் தவணைப் பணம் கிடைப்பது பெரும்...
வணக்கம்
சரியாக ஒரு மாதத்தில் சென்னை புத்தகக்காட்சி ஆரம்பமாகிறது. சென்னையின் தனிப்பெரும் அடையாளங்களுள் ஒன்றான இத்திருவிழாவில் இந்த முறை நமது மெட்ராஸ் பேப்பர் பத்துக்கும் மேற்பட்ட புதிய புத்தகங்களை வெளியிடுகிறது. ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் இந்தப் புத்தகங்களைப் பதிப்பிக்கிறது. நமக்காக ‘மெட்ராஸ் பேப்பர்’ என்றொரு இம்ப்ரிண்டையே அவர்கள் புதிதாகத் தொடங்கியிருக்கிறார்கள்.
எண்ணிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. BukPet எழுத்துப் பயிற்சி வகுப்புகளுக்கு வந்து, எழுதக் கற்றுக்கொண்டு மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுதி, எழுத்து என்னும் செயல்பாட்டுடன் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் நெருங்கிக் கலந்து, இன்று தனியாகப் புத்தகம் எழுதும் அளவுக்கு ஓர் அணி உருவாகியிருக்கிறது. இவர்கள் யாரும் இதற்கு முன் பெரிதாக எழுதியவர்களல்லர். பத்திரிகைகளில் பயிற்சி பெற்றவர்கள் அல்லர். உலகின் வெவ்வேறு மூலைகளில் வெவ்வேறு தொழில் செய்பவர்கள். வெவ்வேறு வயதினர். எழுத்தார்வம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தவர்கள்.
இந்தப் புதியவர்களின் புத்தகங்களே இந்த ஆண்டின் பேசுபொருளாக இருக்கப் போகிறது என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இவற்றுள் சில மெட்ராஸ் பேப்பரில் தொடர்களாக வந்தவை. நேரடியாக எழுதப்பட்ட புத்தகங்கள் சிலவற்றில் இருந்து மட்டும், சில பகுதிகளை இந்த இதழில் உங்கள் வாசிப்புக்குத் தந்திருக்கிறோம். மற்றவை, அடுத்த வாரம் வரும்.
இந்தப் புத்தகங்களின் வெளியீட்டை ஒரு கொண்டாட்டமாக்க மெட்ராஸ் பேப்பர் வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம். ஜனவரி 11, 2023 புதன் கிழமை அன்று மாலை சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நாம் கூடலாம். மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள்-வாசகர்கள் சந்திப்பாக அந்நிகழ்ச்சி அமைய விரும்புகிறோம். பல்வேறு நாடுகளில் வசிக்கும் நமது எழுத்தாளர்கள் இதற்காகவே அன்று சென்னை வருகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல் தயாரானதும் இங்கே அறிவிக்கிறோம். இது நம் குடும்ப விழா. கூடிக் களிப்போம்.
உலகம் யாவையும்
தென்கிழக்கு ரஷ்யாவில் ஆரம்பித்து உக்ரைனுக்குக் கிழக்கே போகிறதொரு இரயில் பாதை. ரஷ்யாவின் ரஸ்தோவ், டகன்ரோக் நகரங்களை, உக்ரைனின் மரியுபோல், டோனெஸ்க்...
வங்காள தேசம் என்கிற பங்களா தேஷ். அளந்து பார்த்தால், நீளவாக்கில் 820 கிலோமீட்டர்கள். அகல வாக்கில் 600 கிலோமீட்டர்கள். அளவில் சிறிய நாடு தான். ஆனால்...
சிறப்புப் பகுதி: புத்தக முன்னோட்டம்
சிந்திக்கலாம்
வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு...
தொடரும்
45 மா.இராசமாணிக்கனார் (12.03.1907 – 26.05.1967) தொடக்கக்கல்வியைத் தமிழ்மொழியில் படித்தவரில்லை அவர். அறிமுகக்கல்வி தெலுங்கு மொழியில்தான் நிகழ்ந்தது. பிறந்தது தமிழ்க் குடும்பத்தில்தான்; ஆனால் அவரது கல்வி தொடங்கியது தெலுங்கில். முறையாகத் தமிழ் கற்கத் தொடங்கியதே ஒன்பதாவது வயதில்தான். ஆனால்...
71. ஃபெரோஸ் காந்தி மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் போராட்டங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு உள்ளே வெளியே என மாறிமாறி இருந்த போதிலும் நேரு குடும்பத்துப் பெண்மணிகள் தெருவில் இறங்கியது அப்பாவையும், மகனையும் பெருமை கொள்ள வைத்தது. குறிப்பாக, கமலா நேரு தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், பல்வேறு...
70 சித்தம் அலைந்தடங்கி ஒரு இடமாய் அமர ஆரம்பித்திருந்த அவனைப்போலவே அவனுடைய ஆபீஸ் வாழ்வும் அமைதியாகத் தொடங்கியிருந்தது என்று பார்த்தால், ஆபீஸுக்கே வராமல் இருந்த ஆங்கிலோ இந்திய ஏஓ ஓய்வுபெற, கணுக்காலுக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டுகிற பாய்மார்களைப்போல சேலையைக் கட்டியாகவேண்டிய அளவுக்கு உயரமாக இருந்த...