Home » Home 03-08-2022

வணக்கம்

இந்த இதழின் சிறப்புப் பகுதி, கல்யாண மார்க்கெட்.

இன்றைய தலைமுறைப் பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? எது குறைவதால் அவர்கள் பையன்களை நிராகரிக்கிறார்கள்? அதே போல, திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதன் அடிப்படைக் காரணம் எது? ஜாதகம், கிரகம், தோஷம் என்பதெல்லாம் இன்று ஒன்றுமே இல்லை. அதற்கெல்லாம் வெகு அப்பால் சென்றுவிட்டன நவீன வாழ்க்கை கற்பிக்கும் காரணங்கள்.

இந்தச் சிறப்புப் பகுதிக்காக மெட்ராஸ் பேப்பர் நிருபர்கள் ஏராளமானவர்களுடன் பேசினார்கள். ஒவ்வொருவரின் திருமணப் பிரச்னையின் அடிப்படைக் காரணங்களைக் கேட்டறிந்தார்கள். பெயர், அடையாளங்கள் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் திருமணத்துக்குக் காத்திருக்கும் ஆண்களும் பெண்களும் நம்மிடம் பேசிய அனைத்தையும் தொகுத்து இந்த இதழில் தந்திருக்கிறோம்.

அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களைக் கணிசமாக அதிகரித்திருப்பது இந்த வாரம் உலகெங்கும் பேசப்படும் முக்கிய விவகாரம். இது நல்லதா? கெட்டதா? உலக அளவில் - குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் பத்மா அர்விந்தின் கட்டுரை, நுட்பமும் தீவிரமும் மிகுந்ததொரு பொருளாதார நடவடிக்கையை மிக எளிமையாக விளக்குகிறது.

அமெரிக்க உளவுத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் அல் காயிதாவின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி குறித்து பா. ராகவனும் இலங்கையின் அதிகார வர்க்கம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட வேண்டிய அவசியத்தைக் குறித்து ஸஃபார் அஹமதும் எழுதியிருக்கிறார்கள்.

கடந்த வாரம், நிகோஸ் அன்றோலாகிஸ் என்கிற கிரேக்க அரசியல்வாதியின் போனுக்கு அனுப்பப்பட்ட Predator என்னும் உளவு மென்பொருள் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் கதி கலக்கிய சம்பவத்தைச் சுட்டி, சாமானியர்கள் உள்பட அனைவரும் இந்த உளவு மென்பொருள்களிடம் இருந்து தப்பித்தாக வேண்டிய இருப்பியல் நெருக்கடியை விவரிக்கிறார் ஜெயரூபலிங்கம்.

வாரம்தோறும் இடம்பெறும் ஒவ்வொரு கட்டுரையும் உங்கள் ரசனைக்கு விருந்தாக அமைய வேண்டும் என்று பார்த்துப் பார்த்து நாங்கள் இதழைத் தயாரிக்கிறோம். மிக விரைவில் மேலும் மகிழ்ச்சி தரத்தக்க சில புதிய அம்சங்கள் மெட்ராஸ் பேப்பர் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கவிருக்கின்றன.

உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றுதான். தரமான வாசிப்பில் இருந்து விலகிச் செல்லும் இந்தத் தலைமுறைக்கு எண்பது, தொண்ணூறுகளின் பொற்கால வாசிப்பு ருசியை மீள் அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் மெட்ராஸ் பேப்பரை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அவர்களை நமது சந்தாதாரர்களாக்குங்கள்.

இது வெறும் இதழல்ல; ஓர் இயக்கம் என்பதை உங்களைத் தவிர வேறு யாரால் உரக்கச் சொல்ல முடியும்?

சிறப்புப் பகுதி: கல்யாண மார்க்கெட்

உள்ளங்கை உலகம்

உலகம்

‘ஏஞ்சல்’: ஒரு டபுள் ஏஜெண்ட்டின் கதை

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு உக்கிரமடைந்து வருகிறது. அமெரிக்கா தொடங்கி, அநேகமாக அனைத்து மேலை நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று, ரஷ்யாவின்...

உலகம் வாழ்க்கை

ஒட்டகம் மேய்த்தால் என்ன கிடைக்கும்?

துபாயில் ஒட்டகம் மேய்ப்பது தொடர்பான ஜோக்குகளை எவ்வளவோ கேட்டிருப்போம். உண்மையில் ஒட்டகம் மேய்ப்பது என்றால் என்னவென்று தெரியுமா? தெரிந்துகொள்வோம்...

ஆளுமை உலகம்

ஒரு வழியாக மன்னர்

பிறந்ததிலிருந்து ஒரு பதவிக்காகத் தயார் செய்யப்பட்டு எழுபத்து மூன்றாவது வயதில் அந்தப் பதவியை அடைவது என்பது உலக சரித்திரத்தில் ஒரு புதுமையான விஷயமே...

ஆளுமை உலகம்

உலகப் பெரும் புள்ளிகளின் ஒரு நாள் கழிவது எப்படி?

நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து...

நாலு விஷயம்

நம் குரல்

‘சூத்திரர்கள்’ என்பவர்கள் யார்?

தமிழக பாஜகவினருக்கு, மக்களின் அன்றாடப் பிரச்னைகளெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. கி. வீரமணிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில், ஆ. ராசா பேசிய பேச்சுத்தான்...

நுட்பம்

தூக்கிப் போடாதே!

‘புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது’ என்று பாடி ஆடிக்கொண்டே சிம்லாவை வலம் வரும் எம்.ஜி.ஆரின் கையில் இருக்கும் அந்த சிவப்புப் பெட்டியை...

தொடரும்

தொடரும் நாவல்

ஆபீஸ் – 17

17 வீடும் பொருளும் டிவி வரப்போகிறது என்பதில் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை. காரணமேயில்லாமல் ஆபீஸில் அங்குமிங்கும் போய்வந்துகொண்டு இருந்தான். சாவித்ரி மேடம் முதல் சிப்பாய் பாபு வரை, செக்‌ஷனில் இருந்த அத்தனைப்பேரும் என்ன விஷயம் என்று கேட்குமளவிற்கு பரபரப்பாக இருந்தான். யாரிடமும் பிடிகொடுத்துப்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 16

16. ஒலியும் ஒளியும் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்றான தெருக்கூத்து பற்றி நாம் அறிவோம். பெரும்பாலானோர் உங்களது சிறுவயதில் திருவிழா சமயத்தில் தெருக்கூத்து பார்த்திருப்பீர்கள். இப்போதும் பல கிராமப் பகுதிகளில் திருவிழா நேரத்தில் தெருக்கூத்து நடத்தப்படுகிறது. தெருக்கூத்துக் கலைஞர்கள் ஒப்பனை...

Read More
ஆன்மிகம்

சித் – 17

17. அது வேறு உலகம் தோற்றமும் முடிவும் இல்லாத சில சித்தர்களைக் கண்டோம். இன்னும் எவ்வளவே பேர் இவ்வரிசையில் இருக்கிறார்கள். அவர்களையும் அறிவதற்கு முன்னால் சித்தர்களின் உலகைப் பற்றிச் சிறிது தெரிந்துகொள்வோம். சித்தர்கள் உலகம் எங்கே இருக்கிறது? அங்கே செல்ல என்ன மாதிரியான வாகனத்தில் செல்ல வேண்டும்? அந்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 17

17. முதல் ‘ஃபீஸ்’ என்னதான் செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், மகனைக் கடல் கடந்து பள்ளிக்கூடப் படிப்புக்கே அனுப்பி வைத்து, அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருந்தாலும், தன் மகனை ஒரு நண்பன் போல நடத்தினாலும், அப்பாக்கள், அப்பாக்கள்தானே? ஜவஹருக்கு வேண்டிய அளவுக்குப் பணம்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 17

17. குளமும் கடலும் “புனித நூல்களை உங்கள் மதம் என்று எண்ணி விடாதீர்கள். அவை சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சொற்கள் மனிதர்களைப் பிரித்து விடுகின்றன. சொற்கள் மனித குலத்தையே பிரித்து வைத்துள்ளன. மனிதர்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள் செங்கற்களால் கட்டப்படவில்லை. சொற்களாலேயே...

Read More
error: Content is protected !!