தமிழ்நாட்டை அறிவுசார் செயல்பாடுகளில் முன்னணியில் நிறுத்துவது அரசின் கனவாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைப்பதில் தொடங்கி...
வணக்கம்
மெட்ராஸ் பேப்பர் தொடங்கிப் பதினொரு மாதங்கள் நிறைவடைந்து, பன்னிரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறோம். கண்மூடித் திறப்பதற்குள் ஓராண்டு நிறைந்துவிடும். ஒரு புறம் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னொருபுறம், நூற்றாண்டைத் தொட்டுக் கடந்த பத்திரிகைகளை எண்ணிப் பார்த்துப் பணிந்து நிற்கத் தோன்றுகிறது.
பத்திரிகை என்பது விளையாட்டல்ல. சீரான தரம், நீடித்த வாசகர் உறவு, படிப்படியான வளர்ச்சி இருந்தால் போதும் என்று எண்ணித்தான் தொடங்கினோம். கூடுதல் இலக்காக ஒன்றே ஒன்று சேர்ந்தது. தமிழில் புதிதாக எழுத வருவோருக்கு ஒரு பரந்துபட்ட களமாக இந்த இதழ் இருக்க வேண்டும் என்பதே அது. உண்மையில் நமது மகிழ்ச்சியின் ஆதாரப் புள்ளியாக அதுவே ஆகிப் போனது. மெட்ராஸ் பேப்பரில் நீங்கள் வாரம்தோறும் படிக்கும் எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்கள் எழுத்துக்குப் புதியவர்கள். எழுதப் பயிற்சி பெற்று எழுத வந்தவர்கள். தமது ஆர்வத்தாலும் அக்கறையினாலும் இடைவிடாத முயற்சியினாலும் இன்று தேர்ந்த எழுத்தாளர்கள் ஆகியிருக்கிறார்கள்.
பெரும்பாலும் கேளிக்கை சார்ந்த செய்திகளாலும் கட்டுரைகளாலும் துணுக்குகளாலும் தமிழ் வார இதழ்கள் ஒரே முகம் காட்டத் தொடங்கி, அதனாலேயே சரிய ஆரம்பித்த சமயத்தில் ஆழமான சர்வதேசப் பிரச்னைகளையும் சமூகப் பிரச்னைகளையும் தொட்டுப் பேசும் இதழாக மெட்ராஸ் பேப்பர் வெளிவரத் தொடங்கியது. உலகெங்கும் பரவி வசிக்கும் நமது எழுத்தாளர்களும் செய்தியாளர்களும் அந்தந்தப் பிராந்தியத்தின் மக்களை பாதிக்கும் பிரச்னைகளை விரிவாக விளக்கி எழுதினார்கள். தமிழர்கள், இந்தியர்கள், அயல்நாட்டு மக்கள் என்று ஒரு வசதிக்குச் சொல்லிக்கொள்கிறோம். உண்மையில் மனித குலத்தை பாதிக்கும் பிரச்னைகள் என்பவை எப்போதும் எங்கும் பொதுவானவையே அல்லவா?
ஓர் இணையப் பத்திரிகையை சந்தா செலுத்தி வாசிக்கும் வழக்கம் அநேகமாக யாருக்கும் இராது என்று இதனைத் தொடங்கும்போது பலபேர் எச்சரித்தார்கள். அச்சிதழ்களாகப் பல்லாண்டுகளாக வெளி வந்துகொண்டிருக்கும் சிலவற்றின் ஆன்லைன் எடிஷன்களுக்கே அயலகச் சந்தாதாரர்கள் குறைவு என்றும் சொன்னார்கள். இந்த உலகில் ஒரு குண்டூசியைக் கூட நீங்கள் விலையின்றிப் பெற இயலாது என்னும்போது ஒரு பத்திரிகையை அவ்வாறு வாசிக்கத் தருவது கூட்டம் சேர்க்க உதவுமே தவிர, கூர்ந்த வாசகர்களை உருவாக்காது என்று கருதினோம். அதனால்தான் மிகக் குறைந்ததொரு சந்தாவினை நமது இதழுக்கு நிர்ணயித்தோம்.
இதழ் பிடித்துப் போனால் ஒவ்வொரு வாசகரும் தம்மால் இயன்ற அளவுக்குப் புதிய சந்தாதாரர்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று மனப்பூர்வமாக நம்பினோம். அந்நம்பிக்கையே இன்றுவரை எங்களை இலக்கை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது.
வாசகர்களாகிய உங்களிடம் நாங்கள் அன்போடு வேண்டுவது இதனைத்தான். இதழைக் குறித்த உங்கள் கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். அது நமது பத்திரிகை இன்னும் சிறப்பாக வெளிவர உதவும். உங்களுக்குப் பிடித்த இப்பத்திரிகையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களையும் சந்தாதார்களாக்குங்கள். அது இந்தப் பத்திரிகை நீடித்து வெளிவர உதவும்.
கோப்பைப் புயல்
கூகுள், பேபால், அப்ளைட் மெட்டீரியல்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழகம் இந்த மாதம் பெருமளவில்...
புயலுக்கு அப்பால்
வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துவிட்டார். இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக எது நடந்தாலும் அது இந்தியாவில்...
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் பத்து நாள்களே இருக்கும் நிலையில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடந்து முடிந்துவிட்டது. இவ்வாக்கெடுப்பு...
சட சடவென்று துப்பாக்கிச் சத்தம். மதில் சுவரில் வட்டமாக ஒரு பெரிய துளை, சுற்றிப் புகையும் கதறலும். அந்தத் துளையின் வெளியே வரும் ஒவ்வொருவருக்கும்...
“இஸ்ரேலிய மக்களை எல்லாம் முட்டாள்கள் என்று நினைக்கிறார் அதிபர் நெதன்யாகு. ஃபிலடெல்பியா காரிடரில் இஸ்ரேலியப் படையை நிறுத்துவதெல்லாம் பெரிய...
நுட்ப பஜார்
தொடரும்
121. ஹோ சி மின் முதல் சே குவாரா வரை 1960களின் ஆரம்பத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய ஆப்ரிக்க நாடுகள் ஒரு தளத்தில் ஒன்றிணைந்து 1963ல் ஆப்ரிக்க ஒற்றுமைக்கான அமைப்பினை உருவாக்கின. அந்த சந்தர்ப்பத்தில் புதிய அமைப்பினை வரவேற்கும் வகையில், “ஆப்ரிக்கா விழித்து எழுந்திருப்பது என்பது இருபதாம்...
22. செயற்கை நுண்ணறிவு ஆய்வுகள் செயற்கை நுண்ணறிவுதான் உலகை ஆளவிருக்கும் புதிய கடவுள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதில் கூகுளை சாட் ஜிபிடி (Chat GPT) சற்று முந்திச் சென்றுவிட்டது என்பதில் கூகுள் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சற்று ஏமாற்றம்தான். ஆனால் அது தாமதம்தானே ஒழிய, இன்னும் நிறைவாகச் சாதிக்க...
22. செலவுகள் பலவிதம் ஒரு திருமணத்துக்கு நூறு பேர் வருகிறார்கள் என்றால், அந்தத் திருமணத்தை நடத்துகிறவர்கள் அந்த நூறு பேரையும் ஒரே மாதிரியாகத்தான் கவனிப்பார்களா? கண்டிப்பாக இல்லை. அவர்கள் சிலரை இயல்பாக வரவேற்பார்கள், சிலரை இன்னும் கூடுதல் அக்கறையுடன் பார்த்துக்கொள்வார்கள், வேறு சிலரை விழுந்து...
சத்… சித்… ஆனந்தம். மனித குலம் பிற உயிரினங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? பூவுலகில் பன்னெடுங்காலமாக எண்ணற்ற உயிர்வகைகள் வாழ்ந்து வருகின்றன. ஆயினும் நம்மால் மட்டுமே எப்படி நிலவிற்குச் செல்ல முடிந்தது? இக்கேள்விகளுக்கெல்லாம், பொத்தாம் பொதுவான பதிலொன்றுள்ளது. மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஆறாம்...
22. பாதையும் பயணமும் நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இலங்கையில் எப்போதெல்லாம் தமிழர்கள் மீது சிங்கள அரசு கொடுந்தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுகிறதோ அப்போதெல்லாம் இங்கே ஒரு விமரிசனம் வரும். பவுத்தத்தைப் பின்பற்றும் நாடும் மக்களும் இவ்வளவு ரத்த வெறி பிடித்து அலைவதைக் கவனியுங்கள் என்பார்கள். அல்...
117 நண்பர்கள் எதிர்மறை அபிப்ராயங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் எவர் மனமும் புண்பட்டுவிடாமல் எல்லோருடனும் நயமாகப் பழகுபவன் என்பதால் அநேகமாக சுகுமாரனைப் பற்றி எதிர்மறை அபிப்ராயங்களே இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவனுக்கு எதிர்மறை அபிப்ராயங்களே இல்லை என்கிற மாயத்தோற்றம் நிலவியது. தூரத்தில்...