இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே...
வணக்கம்
How to.
கூகுளில் இதைப் போட்டுத் தேடாத நாளும் இல்லை; நபரும் இல்லை. இது எப்படி, அது எப்படி என்று ஒவ்வொருவருக்கும் எதையாவது சிலவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமோ தேவையோ எப்போதும் இருக்கிறது. OSX Daily என்று ஒரு தொழில்நுட்ப இணைய இதழ் உள்ளது. முற்றிலும் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளைக் குறித்தே அலசும் கட்டுரைகளை வெளியிடுகிற இதழ். இந்தப் பத்திரிகையின் 99 சதவீதக் கட்டுரைத் தலைப்புகள் ‘How to’ என்றே தொடங்கும். மக்களின் தேவை அப்படி. மறுபுறம், யூ ட்யூபில் பார்த்து வெடிகுண்டு செய்யக் கற்றுக்கொண்டவர்களைப் பற்றிக் கூட கேள்விப்படுகிறோம். how to என்று ஆரம்பித்தால் எதையும் கொண்டுவந்து கொட்டும் கற்பக விருட்சமாகிவிட்டது இணையம். குருகுலவாசம் இருந்து பயில்வது, மூத்தோரிடம் பார்த்துக் கற்பது, அனுபவத்தில் அறிவது எல்லாம் பழங்கதை. தேவை என்று தோன்றிய கணத்தில் கையில் இருக்க வேண்டும். அதுவும் அதிக சிரமமின்றி எளிதாக உள்வாங்கும் விதமாக.
நல்லது. இது இத்தலைமுறையின் கல்யாண குணம். ஒன்றும் செய்ய முடியாது.
இந்த இதழில் வெளியாகியுள்ள How to ரகக் கட்டுரைகளை வாசித்துப் பாருங்கள். அவை பேசும் துறை சார்ந்து அதிகபட்ச எளிமையையும் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு இவை எழுதப்பட்டுள்ளன. ஷான் கருப்புசாமி, நாவல் எழுதுவதற்குத் தயாராவது எப்படி என்று விவரிக்கிறார். மறுபுறம் சரவணகார்த்திகேயன் ஓர் அழகியை ரசிப்பது எப்படி என்று கற்றுத் தருகிறார். இரண்டும் இரு வேறு எல்லைகள் என்று தோன்றினால் நீங்கள் வேறு தலைமுறை. எல்லாம் கலைதானே என்பீர்களானால் இன்றைய உலகில் வாழ்பவர்.
இது புரிய வேண்டுமானால் பள்ளி மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். இந்தத் தலைமுறை மாணவர்களைக் கையாள்வது எப்படி என்று ரும்மான் எழுதியிருப்பதைப் படியுங்கள். மாணவர்களைக் காட்டிலும் ஆசிரியர்களும் பெற்றோரும் அதிகம் பயில வேண்டியிருப்பதாகத் தோன்றிவிடும். அச்சப்பட அவசியமில்லை என்றாலும் கால மாற்றத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு நாளைத் திட்டமிடுவது எப்படி என்று தொடங்கி, ஆயிரம் பேருக்குச் சமைப்பது எப்படி என்பது வரை இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் ‘எப்படி’க் கட்டுரைகளை தினம் ஒன்றாக நீங்கள் வாசித்து, யோசிக்கலாம். இவை மிக நிச்சயமாக ஒரு புதிய விஷயத்தையாவது உங்களுக்கு அறிமுகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படுகிற திருத்தங்கள் குறித்து ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை இந்த இதழில் மிக முக்கியமானதொன்று. சில ஆப்பிரிக்க, தென்னமெரிக்க தேசங்களில் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அரசியல் குளறுபடிகளெல்லாம் இன்று நம்மருகே, நம் சொந்தச் சகோதரர்கள் வசிக்கும் தேசத்தில் நிகழ்வதைக் காணும்படிச் செய்திருக்கிறது காலம். புத்தர் கைவிட்டுவிட்ட தேசத்தை எந்தப் புனிதர் வந்து மீட்பார் என்றுதான் தெரியவில்லை.
மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மேலும் பல புதிய சுவாரசியங்களுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
விருந்தினர் பக்கம்: சிஎஸ்கே, ஷான்
சிறப்புப் பகுதி: எப்படிச் சொல்வேனடி?
திசையெலாம்
பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே...
மெக்ஸிகோ என்பது ஒரு புதையல் பூமி. புதையல் என்றால் தங்கப் புதையல், பணக்கட்டுப் புதையல் அல்ல. தோண்டத்தோண் மனித உடல்கள் கிடைக்கும் பயங்கரப் பிராந்தியம்...
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் அழகிய ‘நாகு’ நகரத்திற்கு இது போதாத காலம். பருத்த குவிமாடத்துடனும் (Dome) , நான்கு மினாராக்களுடனும் (Minaret)...
கலவரமூட்டும் சப்வே களேபரங்கள் மே 22 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு தன் பணியாளரின் செல்போனில் இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் பேசினார், மேத்தொ எக்ஸ்ப்ரஸ் கஃபே...
37 வயது பாவெல் – கட்டுப்போட்ட ஒரு கை கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு கை இயந்திர துப்பாக்கியைப் பிடித்து ரஷ்ய வீரர்களைச்...
இரண்டு தசாப்தங்களின் பின் தனது தாய் நாட்டுக்குத் திரும்புகிறது ‘முது’ என்கிற முது ராஜா. பயணச் செலவு ஏழு இலட்சம் யு.எஸ். டாலர்ஸ்...
தொடரும்
தெய்வத்துக்கே வரும் சோதனை நமக்கெல்லாம் ஒரு சோதனை வந்தால் தெய்வத்திடம் போய் முறையிடலாம். அந்தத் தெய்வத்துக்கே சோதனை வந்தால்….? நமது உடலில் மரபணுப் பிழைகளைச் சரி செய்வதற்கென்றே சில மரபணுக்கள் உள்ளன என்று பார்த்தோம் அல்லவா? இவற்றினைப் பொதுவாகப் பழுதுபார்க்கும் மரபணுக்கள் எனலாம். சாதாரண மரபணுக்களில்...
28 சுவாமி விபுலானந்தர் (27.03.1892 – 19.07.1947) தமிழ் இசைக்கு உழைத்த தமிழ்ப் பெரியார் பலர் உண்டு. அவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் தமிழிசைப் பாடல்கள் எழுதியதன் மூலம் தமிழிசையின் உள்ளடக்கத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். ஆபிரகாம் பண்டிதர் போன்ற வெகுசிலர் தமிழிசையின்...
54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...
53 மிதப்பு டிரைவ்-இன் செல்ஃப் சர்வீசில் காபி வாங்கிக்கொண்டு வந்து, நடைவழியை ஒட்டி இருந்த மூன்று மேஜைகளில் காலியாக இருந்த நடு மேஜையில் உட்கார்ந்தான். மனம் பொங்கி வழிந்துகொண்டு இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியமனுஷ தோரணையுடன் அமைதியாக இருக்க முயன்றான். அது அவன் இயல்பே இல்லை. மனத்தின்...