Home » G இன்றி அமையாது உலகு – 19
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 19

19. செயற்கை நுண்ணறிவுச் செயல்திட்டம்

ஜெமினியின் அறிமுகத்திற்குப் பிறகு, எப்படி கூகுள் செயற்கை நுண்ணறிவில் சாட்ஜிபிடியை (Chat GPT) விஞ்ச முயற்சி செய்கிறது என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இதைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு விரைவுச் செயல்திட்டம் ஒன்றையும் கூகுள் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. 2024ன் முதல் காலாண்டில் வெளியிடப்பட்டுள்ள இச்செயல்திட்டம் அடுத்த இரண்டு வருடங்களில் கூகுளின் செயற்கை நுண்ணறிவு எதை நோக்கிப் பயணப்படவேண்டும் என்று விரிவாக விளக்குகிறது.

கீழ்க்கண்ட ஐந்து புள்ளிகளை நோக்கியே தங்களது செயற்கை நுண்ணறிவுப் பயணம் இருக்கும் என்று சுந்தர் பிச்சை விளக்கியிருக்கிறார்.

1. மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த, தேடல் (Google Search), வரைபடம் (Maps), மொழியாக்கம் (Translate) மற்றும் Workspace போன்ற கூகுளின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் முழுவதிலும் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்தல்.

2. நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிரலாளர்கள் (softrware deveolopers) செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளை மிக எளிதாக உருவாக்க, பொதுவில் பயன்படுத்த ஏதுவாக மாற்றுதல். அவற்றைத் தொடர்ந்து நவீனப்படுத்த உதவும் கூகுள் க்ளவுட் எனப்படும் மெய்நிகர் சேமிப்புச் செயலியின் செய்யறிவுத் திறன்களை விரிவுபடுத்துதல்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்