என்னதான் அமெரிக்கா என்றாலும் நான் இருப்பது ஒரு மிகச்சிறிய நகரத்தில்தான். எந்தவொரு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையை நாடவேண்டுமென்றாலும் கண்டிப்பாக இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இல்லையெனில் வான்வழி மருத்துவ ஊர்திதான். உடனே கிடைக்கும். ஆனால் சொத்தை எழுதி வைத்துவிட வேண்டும். வருடத் தொடக்கத்தில்...
Author - எஸ். தியாகராஜன்
சமீபத்தில், ஓர் ஆராய்ச்சி மாநாட்டுக்கு மாணவர்களுடன் போர்ட்டோ ரிக்கோ தீவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. இது எனக்கு ஒரு அரிய வாய்ப்பு. ஏனெனில் பெரும்பாலான ஆராய்ச்சி மாநாடுகள் எல்லாம் அமெரிக்கக் கண்டத்தின் ஐம்பது மாநிலங்களுக்கு உள்ளேயே ஏற்பாடு செய்யப்பட்டு விடும். அரிதாகவே வெளியே செல்லும்...
மனித குலமே எதாவது ஒரு சொகுசை எதிர்பார்த்துத் தான் ஏங்கிக் கிடக்கிறது. இதில் மாணவர்களைப் பற்றித் தனியே சொல்ல வேண்டுமா? என்றால், கண்டிப்பாக வேண்டும். தற்கால மாணவர்கள் எதிலும் எளிதாக வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது தப்பில்லை. அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்...
சமீப காலமாக மிக அதிகம் பேசப்படுகிற சங்கதிகளுள் ஒன்று, ‘க்ரிப்டோ கரன்ஸி’. அது ஒரு அச்சிடப்படாத, கண்ணுக்குத் தெரியாத பணம். தற்போது எப்படி கிரெடிட் கார்டு, ஜீபே என்று காகிதப் பணத்திற்கு மாற்றாக, கார்டுகள், செயலிகள் உள்ளனவோ அது போலவே காகித பணத்திற்கு மாற்றாக ஒரு பண்டமாற்று முறை வேண்டும் என்று தனிப்பட்ட...
திரையரங்குகளே தமிழ் நாட்டின் தலை சிறந்த பொழுதுபோக்குக் கூடங்களாக இருந்த காலம் இன்று இல்லை. புதுப் படக் கொண்டாட்டம், முதல் நாள் தடபுடல்கள், ப்ளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்க்கிற வெறி, திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டுப் பெருமையாகப் பேசி மாய்வது – இதெல்லாம் காலாவதி ஆகிவிடவில்லையே தவிர...
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாகச் சாப்பிடும். உண்ணும் ரகங்கள் மட்டுமல்ல; உணவு நேரம்கூட மாறத்தான் செய்யும். பொதுவாக நாம் இரவு உணவை எட்டு மணி முதல் ஒன்பது ஒன்பதரைக்குள் எடுத்துக்கொள்வோம் அல்லவா? அமெரிக்கர்களுக்கு இரவு உணவு என்பது மாலை ஐந்து மணி முதல் ஏழரைக்குள் முடிய வேண்டியது. இது காலகாலமாக இருந்து...
செவ்விந்தியர்கள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட ஆதி அமெரிக்கர்கள் இன்று இருக்கிறார்களா? அதே ஆதி வாசிகளாகத்தான் உள்ளார்களா அல்லது நாகரிக உலகுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்களா? அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில் வசிக்கும் நவஹோ பழங்குடி இன மக்களைச் சந்திக்க முடிவு செய்தோம்...