இம்முறை எப்படியாவது உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்பட்டுவிடும் என்று உலகம் எதிர்பார்த்தது. நடக்கவில்லை. அமைதியும் இனிமையுமான சூழல் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மனிதர்கள் உடல், மனநலத்துடன் இருப்பதைப்போல உலக அளவில் அமைதியான சூழலில் இருக்கும் நாடுகளில் வாழும் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே...
Author - பத்மா அர்விந்த்
வெள்ளை மாளிகைக்குள் வெள்ளைப்பொடியா? யார் புகைத்திருப்பார்கள் என்பதை விட அது எப்படி உளவுத்துறை மீறி அங்கே வந்திருக்க முடியும் என்பதே மிகப்பெரிய கேள்வியாகச் சென்ற வாரம் இருந்திருக்கிறது. மனிதனுக்குப் போதை தேவையாக இருக்கிறது. தன்னுடைய சோகம், தீர்க்க முடியாத பிரச்னைகளிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க...
மக்களாட்சி நடக்கின்ற நாட்டில், தேர்தலில போட்டியிடும் தலைவர்களின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன பின்விளைவுகள் வரக்கூடும் என்பது அறிந்து, வாக்களிக்க வேண்டும். கட்சி சார்பில் அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் சேர்ந்து வாக்களிக்கும் போது அபாயகரமான கொள்கைப்பிடிப்பு உடைய ஒருவர்...
இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனின் சந்திப்பு பல எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே ஒருவாறாக நடந்து முடிந்தது. அமெரிக்காவிற்கு, அமெரிக்க அதிபர்களுடைய அழைப்பை ஏற்றுப் பல பாரதப் பிரதமர்கள் இதற்குமுன் வந்து காங்கிரசில் பேசிவிட்டு, வெள்ளை மாளிகையில் விருந்துண்டு சென்றிருக்கிறார்கள். அதிபர்...
காலையில் அமைதியாய்ப் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் திலிப்போன்சா. திடீரென அம்மாவின் ‘திலிப்போன்சா திலிப்போன்சா’ என்ற பதற்றமான குரலும் அவளை நிலத்தில் தள்ளிய கையும் புரியாமல் பாம்பு போல ஊர்ந்து அடுத்த அறைக்குள் அவளும் அம்மாவும் சென்று, அவளின் தம்பியைத் தூக்கிக்கொண்டு, புத்தகப்பையில் சில...
எடை ஏன் ஏறுகிறது? ஏறியதை எப்படி இறக்குவது? நான் குறைந்த அளவு உணவையே உண்ணுகிறேன். தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளுகிறேன். என் fitbit ஐக் கவனியுங்கள். 10000 அடிகளைத் தாண்டும். ஆனால் என் எடை என்னவோ திடீரென அதிகரித்துவிட்டது. இப்போது ஓர் அரைக்கிலோகூடக் குறைய மாட்டேன் என்கிறது என உடல்நல மருத்துவரிடம்...
தேன்கூட்டைக் கலைத்தாற்போல முன்னாள் அதிபர் டிரம்ப்பின் மீது பல வழக்குகள் பதிவாகும் என்பது தெரிந்தாலும், அவர் சட்டப்படி ஆதாரப்பூர்வமாகக் குற்றம் (indicted) சாட்டப்படுவார் என்பதை அவ்வளவு நிச்சயமாக யாரும் அறிந்திருக்கவில்லை. அதிபர் ஒபாமா பதவிக்காலத்தில் இருந்த நெறிமுறைகள் துறைக்கு ஓய்வு கொடுத்து...
இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் கல்வி கற்று அமெரிக்காவில் குடியேறிய அஜய் பங்கா, வெள்ளிக்கிழமை, ஜூன் 2, 2023 உலக வங்கியின் 14வது தலைவரானார். எந்த நாடு, என்ன மதம், ஆள் யார், எப்படி என்றெல்லாம் பார்க்காமல், தகுதியும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அமெரிக்காவில் எவ்வளவு வேண்டுமானாலும் உயர...
கலவரமூட்டும் சப்வே களேபரங்கள் மே 22 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு தன் பணியாளரின் செல்போனில் இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் பேசினார், மேத்தொ எக்ஸ்ப்ரஸ் கஃபே உரிமையாளர். பேசியது யாரோ ஒரு பெண், இங்கே சப்வேயில் ஒரு விபத்து, உங்கள் பணியாளர் ஆக்ஸோஸ் காயமடைந்துவிட்டார் என்றதும், பின்னால் என் அதிகாரி எலி நெய்மை...
‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச் சில நகைச்சுவைத் துணுக்குகளை நீங்கள் படித்திருக்கக் கூடும். கடந்தசில வாரங்களாக அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்தப் பேச்சு வார்த்தை நடத்திக்...