Home » செயற்கைக் கருப்பை
இன்குபேட்டர்

செயற்கைக் கருப்பை

ஒரு மனிதக் குழந்தை முழுமையாக உருவாகுவதற்கான கர்ப்ப காலம் நாற்பது வாரங்களாகும். இந்த நாற்பது வாரங்களில் ஒவ்வொரு வாரமும் கருவின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். முப்பத்தேழு வாரங்களுக்கு முன்னர் பிறக்கும் குழந்தைகளை ஆங்கிலத்தில் Premature Babies என்று சொல்வார்கள். அதாவது கர்ப்பத்தில் முழுமையாக வளர்ச்சி அடையாமல் முன்கூட்டியே பிறந்த குழந்தைகள். இவை பொதுவாகப் பிறந்த பின்னர் இன்குபேட்டர்களில் மேலதிக பராமரிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளாகும். எத்தனை வாரங்கள் முன்கூட்டிப் பிறக்கின்றன என்பதற்கேற்பக் குழந்தைகளின் உடல் உறுப்புகளின் வளர்ச்சியின் அளவும் இருக்கும். முக்கியமாக நுரையீரல் போன்ற உறுப்புகள் தேவையானளவு முதிர்ச்சி பெற்றிருக்காது. அதனால் வெளியே இருக்கும் காற்றினைச் சுவாசிக்கும் திறன் குறைந்தவர்களாகவே இக்குழந்தைகள் இருப்பார்கள்.

இன்றைய நவீன மருத்துவ வசதிகளின் மூலம் முன்கூட்டியே பிறந்த குழந்தைகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனாலும் தற்போதைய தரவுகளின் படி இருபத்திரண்டு, இருபத்து மூன்று வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறு அண்ணளவாக முப்பது சதவீதம் என்பதே யதார்த்தம். இக்குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான தொழில்நுட்பமே செயற்கைக் கருப்பைத் தொழில் நுட்பம். செயற்கைக் கருப்பைத் தொழில் நுட்பத்தில் பல நாடுகளிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது ஆய்வுகள் இன்னும் விலங்குகளின் கரு வளர்ச்சிப் பரிசோதனைகள் மட்டத்திலேயே நிற்கின்றன. ஆனாலும் இன்னும் சில ஆண்டுகளில் மனிதக் குழந்தைகளில் பரிசோதனை செய்யக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்