Home » AIM IT – 19
aim தொடரும்

AIM IT – 19

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

துறைசார்ந்த முடிவுகளை வல்லுநர்கள் எடுப்பதே வழக்கம். ஆனால் இப்போது இம்முடிவுகளை ஏ.ஐ எடுக்கத் தொடங்கியுள்ளது. வங்கிச் சூழலில் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். ஒருவருக்குக் கடன் வழங்கலாமா வேண்டாமா என்பது வங்கிகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் ஒன்று.

இதைத் தீர்மானிப்பது ஒரு சிக்கலான செயல்பாடு. பல்வேறு காரணிகள் இம்முடிவைப் பாதிக்கின்றன. “வயது பதினெட்டு அல்லது அதற்கு மேல் என்றால் ஓட்டுரிமை” என்பது போன்ற எளிய முடிவல்ல. ஒரு நேர்கோடு கிழித்து எல்லை பிரிக்க முடியாதது கடன் வழங்கும் முடிவு.

மனிதர்கள் இது போன்ற முடிவுகளில் சார்பு (Bias) நிலை எடுக்கச் சாத்தியங்கள் அதிகம். இச்சார்பு நிலை பாலினம், மொழி, மதம், இனம் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.

சிக்கலான முடிவுகளை எடுக்க இப்போது ஏ.ஐயை நாடுகின்றன வங்கிகள். ஏ.ஐ மூலம் முடிவெடுத்தால் சார்பு நிலை எதுவும் இருக்காது என்றே தொடக்கத்தில் நம்பினர். ஆனால் போகப்போக ஏ.ஐ எடுக்கும் முடிவுகளிலும் சார்பு நிலை இருப்பது தெரிய வந்தது.

வங்கி தான் என்றில்லை. மருத்துவத் துறையில், நீதித் துறையில் என்று எங்கெங்கும் ஏ.ஐ சார்ந்த முடிவுகள் பரவலாகிவருகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்