மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளைப் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார். பேச்சு வேகத்தில் தெரியாமல் வந்த சொற்கள் அல்ல. ஒருமுறை சொன்னதோடு நிறுத்தாமல் மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னார். எதிர்ப்பு...
இதழ் தொகுப்பு March 12, 2025
மாவோரி. மிகப் புராதனமான இந்தப் பழங்குடி இனம் நியூசிலாந்தில் உள்ளதை நாம் அறிவோம். அதுவும் சென்ற வருடம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச் சேர்ந்த இளம் பெண் எம்பி ஒருவர் ருத்ர தாண்டவம் ஆடிய (ஹக்கா நடனம்) விடியோ க்ளிப்பிங்கின் தொடர்ச்சியாக மட்டும். மீண்டும் நாம் மாவோரிகளைச் சிந்திப்பதற்காக...
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான கருத்துகள் இந்தியாவை வடக்கு, தெற்கு எனப் பிரித்துப் பொதுவெளியில் மிகப்பெரிய விவாதங்கள் நடப்பதற்கான காரணமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென இந்திய...
147. உடைந்தது காங்கிரஸ் மந்திரிசபையைக் கூட்டி, அவர்கள் ஆதரவை உறுதி செய்துகொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மத்தியில் பலப்பரீட்சை நடத்தி, தன் வலிமையைக் காட்ட முடிவு செய்தார் இந்திரா காந்தி. அதன்படி, காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்தைக் கூட்டினார். லோக் சபாவில் மொத்தம் இருந்த 297...
நெருப்பின் நாக்குகள் தகவல் அறிந்து தீயணைப்புத்துறை வந்து பார்த்தபோது வீடு முற்றிலும் எரிந்து நாசமாகியிருந்தது. மெர்க்கேப்டேனின் மெலிதான வாடையைக் காற்றில் அப்போதும் உணரமுடிந்தது. சமையல் எரிவாயுவாக நாம் பயன்படுத்தும் பியூட்டேன் வாயுவுக்கு மணம் கிடையாது. எனவே, கசிவைக் கண்டறியும் பொருட்டு அதனுடன்...
தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 52 மாணவ, மாணவிகள் கடந்த பெப்ரவரி மாதம் மலேசியாவுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இது அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் எட்டாவது கல்விப் பயணமாகும். இது மாணவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் கல்வி முறைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக...
எழுபது சதவீத இந்தியத் தம்பதிகள் தனித்து உறங்குவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளது சமீபத்திய ஆய்வொன்று. குறட்டை, மன இறுக்கம், வெவ்வேறு வேலைநேரங்கள் போன்றவை இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. உறக்கத்துக்கு நேரும் நெருக்கடி உலகளவில் உடல்நலத்திலும் உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது இதனால்...
48. பங்காளி ஆகலாம் உங்கள் தெரு முனையில் ஒரு சிறிய இட்லிக் கடை இருக்கிறது. நீங்கள் அவ்வப்போது அங்கு சாப்பிடுவதுண்டு. இட்லி, மூன்று வகைச் சட்னி, சாம்பார் என்று அனைத்தையும் சுவையாகவும் தரமாகவும் மலிவாகவும் தருகிற அந்தக் கடைக்காரரைப் பாராட்டுவதும் உண்டு. ஒருநாள், இட்லியைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி...
2026 அம்பாசிடர் காருக்கு ஒரு ‘கம் பேக்’ வருடமாக இருக்கப் போகிறது. இந்திய கார் சந்தையில் கிட்டத்தட்ட 55 வருடங்கள் தன்னிகரில்லா மன்னனாக இருந்த அம்பாசிடர், 2015இல் தனது தயாரிப்பை நிறுத்தியது. இப்போது மீண்டும் அடுத்த வருடம் இந்தியாவில் புதுப் பொலிவுடன் களமிறங்கப் போவதாக வெளியாகியுள்ள...
தாய்மொழி, ஆங்கிலத்துடன் மூன்றாவதாக ஓர் இந்திய மொழியையும் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதுதான் மும்மொழிக் கொள்கை. அது எப்போதும் போலத் தற்போதும் விவாதத்துக்குரிய விஷயமாகியிருக்கிறது. ‘ஏன் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறீர்கள்? குழந்தைகள் மொழிகளை எளிதாகக் கற்றுக் கொள்வர். மூன்று...