Home » Archives for December 2024

இதழ் தொகுப்பு 2 weeks ago

சலம் நாள்தோறும்

சலம் – 91

91. தரிசனம் அவன் உண்மையானவன். நேர்மையானவன். தூய மனம் கொண்டவன். தவறியும் பிழைபட்ட செயலொன்றைச் செய்ய மாட்டான். அனைத்தினும் முக்கியம், என்னை அவன் வசீகரித்து ஏமாற்ற விரும்ப வாய்ப்பே இல்லை. இவற்றிலெல்லாம் எனக்குச் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் அவன் தாள் பணிந்து சீடனாக அமர்ந்தால்தான் என் வினாவுக்கு...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 91

91. அவமதிப்புகளை மறந்துவிடுங்கள் நவம்பர் 4 அன்று, சாரதாபஹன் மேத்தா என்பவர் சத்தியாக்கிரக ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார். இரண்டு நாட்களுக்குப்பிறகு (நவம்பர் 6) இந்துலால் கன்ஹையாலால் யாக்னிக் என்பவரும் அங்கு வந்து தங்கினார். இவர்கள் இருவரும் குஜராத்தின் கல்வி முன்னேற்றத்துக்குப் பெரிய அளவில்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 90

90. ஒரே ஒரு பிழை நான் குத்சன். என்னைப் போன்றதொரு பாக்கியசாலியை இந்தப் பிருத்வி என்றென்றும் காணப் போவதில்லை. நான் தோல்விகளின் ஸ்தூலம். என்னைவிட இன்னொரு அபாக்கியசாலி பிரளயத்துக்குப் பிறகு உதிக்கவிருக்கும் இன்னொரு யுகத்திலும் இருக்க வாய்ப்பில்லை. நான் அடைந்தவை அநேகம். இழந்தவை அநேகம். கண்டவை அநேகம்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 90

90. ஒரே ஆசிரியர் செப்டம்பர் 20 அன்று காந்தி அகமதாபாதிலிருந்து மும்பைக்கு வந்தார். அவருடைய வருகையின் நோக்கம், சாந்திநிகேதனத்திலிருந்து வந்திருந்த C. F. ஆன்ட்ரூஸ், W. W. பியர்சன் என்ற இரு நண்பர்களைச் சந்தித்துத் தன்னுடைய ஆசிரமத்துக்கு அழைத்துவருவதுதான். அதே நாளில் அவர்கள் மூவரும் மும்பையில் ஒரு...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 89

89. காந்தியின் மகள் கொள்கை உறுதியில் காந்தி எப்படிப்பட்டவர் என்பதைத் தூதாபாயை ஆசிரமத்தில் சேர்த்துக்கொண்ட நிகழ்வு உலகுக்குக் காண்பித்தது. அத்துடன், எப்பேர்ப்பட்ட உறுதியான எதிர்ப்பையும் பொறுமையாலும் அன்பாலும் மாற்றிவிடலாம் என்பதற்கான வலுவான எடுத்துக்காட்டாகவும் அது அமைந்தது. ‘இந்த...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 89

89. மூடன் ருத்ர மேருவின் சிகரத்திலிருந்து அப்போதுதான் இறங்கி வந்திருந்தேன். பாறைகள் நிறைந்த சர்சுதியின் கரைக்கு வந்து சேர்ந்தவுடனேயே பசிக்கத் தொடங்கியது. எத்தனை தினங்கள் உண்ணாதிருந்திருக்கிறேன் என்ற நினைவே இல்லை. அது ஒரு பொருட்டாகத் தோன்றவுமில்லை என்பது மிகுந்த நிறைவை அளித்தது. அதே சமயம் தாயைக்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 88

88. ஞாலத்தின் மாணப் பெரிது சத்தியாக்கிரக ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிந்ததும், அதுவரை காந்திக்கு நன்கொடை வழங்கிக்கொண்டிருந்த அகமதாபாத் பெரிய மனிதர்கள் அனைவரும் மொத்தமாகக் கையைத் தூக்கிவிட்டார்கள், ‘இனிமேல் நாங்கள் உங்களுக்கு உதவுவதற்கில்லை...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 88

88. சிக்‌ஷாவல்லி வெளி இருண்டிருந்தது. குளிர் சற்று அதிகமாக உள்ளதாக சாரன் சொன்னான். அப்படியா என்று கேட்டேன். அவன் புன்னகையுடன் என்னையே சில கணப் பொழுதுகள் பார்த்துக்கொண்டிருந்தான். ‘என்ன?’ ‘உணர்ச்சிகள் இல்லாத நீ ஒரு பிணத்துக்குச் சமம் என்று பல சமயம் நினைப்பேன். ஆனால் சகிக்க முடியாத இந்தக்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 87

87. மனமாற்றம் செப்டம்பர் 26 அன்று, தூதாபாயும் அவருடைய மனைவி தானிபஹனும் மகள் லட்சுமியும் சத்தியாக்கிரக ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இதனால், அவர்களுடைய வருகையைப்பற்றி அதுவரை நடந்துகொண்டிருந்த பேச்சுச் சண்டைகளெல்லாம் இப்போது உருவம் பெற்றன. குறிப்பாக, தானிபஹன் மீது கஸ்தூரிபா-வும் ஆசிரமத்திலிருந்த...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 87

87. வெண் சங்கு நான் அவனைக் கொலை செய்யத்தான் வித்ருவுக்கு வந்தேன். அறிமுகமான உடனே அதனை அவனிடம் சொல்லவும் செய்தேன். என் கையால்தான் தன் மரணம் நிகழுமென்பதை அவன் அறிந்திருந்தான். அதைக் குறிப்பிட்டே அவன் என்னை வரவேற்றான். எங்கள் இருவரிடத்திலும் பொய் இல்லை. பாசாங்கில்லை. ஒளித்து மறைத்து ஒன்றைச் செய்யும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!