43. காணாத காட்சி ‘கானகத்தைத் தாண்டினால் ஒரு குன்று, குன்றின் மறுபுறமாக ஆறு காதம் கடந்தால் அந்த பிராமணனின் இருப்பிடம் வந்துவிடும் என்று நீ எப்போது என்னிடம் சொன்னாய்?’ என்று அந்த சூத்திர முனியிடம் கேட்டேன். அவன் என்னை வினோதமாகப் பார்த்தான். ‘நான் எப்போது சொன்னேன்?’ என்று என்னையே மீண்டும் கேட்டான்...
இதழ் தொகுப்பு 4 weeks ago
பகுதி 3: காலாண்டுத் தேர்வு 43. கடவுளுக்குமட்டும் அஞ்சுங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியபின் ஓராண்டுக்கு இந்திய அரசியலைப்பற்றிப் பேசுவதில்லை என்று கோகலேவுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியைக் காந்தி மிகவும் அக்கறையுடன் பின்பற்றினார். ஆனால், அவரே விரும்பி அதிலிருந்து விலகிச்சென்ற சில...
ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டுக் கடந்து விடுவதோடு நமது கடமை முடிந்து விடுகிறது. என்றைக்காவது அந்தப் பட்டியலில் இடம்பெற்றுவிட மாட்டோமா என்ற கனவில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது இன்றைக்கும் கடினமாக உழைத்துக்...
கந்தையில் இருந்து கனவு வாழ்க்கைக்கு அமன்சியோ ஒர்டேகா (Amancio Ortega) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர். ஃபேஷன் உலகிலிருந்து உதித்த இன்னுமொரு பணக்கார நட்சத்திரம். 130 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்போடு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார். 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்...
மெக்சிகோவின் வாரன் பஃபெட் ஓய்வெடுக்கும் முடிவை ஒத்தி வைத்ததால் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தவர் கார்லஸ் ஸ்லிம். 1997ஆம் ஆண்டு. கார்லஸ் ஸ்லிம்மின் உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதய வால்வுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்குப் புகழ்பெற்ற...
ஆசியச் சந்தையில் பண அறுவடை தொழில்நுட்ப உலகில் கணினித் துறையில் தவிர்க்க முடியாத ஒரு பெயராக டெல் நிறுவனம் இன்றைக்குச் சந்தையில் இருக்கிறது. அமெரிக்காவில் உருவான இன்னொரு தொழில்நுட்பச் சகாப்தம். தனிப்பட்ட கணினிகளின் சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும் இந்த நிறுவனத்தை மைக்கேல் டெல்...
குறையொன்றும் இல்லை 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாள். சனிக்கிழமை இரவு. “இனிமேல் உனக்கு இங்கு வேலை இல்லை. பத்து மில்லியன் டாலர்கள் உன்னுடைய பங்காகக் கிடைக்கும்”. சாலமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் கட்ஃப்ரெண்ட் மைக்கேல் புளூம்பர்க்கிடம் அவருடைய அலுவலக அறையில் வைத்து இப்படிச்...
கூட்டாளியின் பங்கு உலகப் புகழ்பெற்ற ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைப்பது இன்றைக்கும் பல மாணவர்களுக்குக் கனவாக இருக்கிறது. 1980ஆம் ஆண்டு அந்தப் பல்கலைக்கழகத்தில் முதுகலை நிர்வாகவியல் படித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் படிப்பைப் பாதியில் கைவிட்டார். இருபத்தொன்பது ஊழியர்கள்...
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், நாட்டின் கல்வித் துறையை இனி ஒன்றிய அரசு நிர்வகிக்காது; மாநிலங்களே அந்தப் பொறுப்பை முற்று முழுதாக ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இனி அமெரிக்காவெங்கும் படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டம் முதல் தேர்வுகள் வரை அனைத்தையும்...
தனியே தன்னந்தனியே லேரி எலிசன் மருத்துவம் படிக்க வேண்டுமென்பது அவருடைய குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தது. முழு நேரமாக புரோகிராமராக வேலை செய்து சம்பாதிக்க வேண்டுமென்பது லேரியுடைய மனைவியின் விருப்பம். ஆனால் அவர்களுடைய கனவு வேறாகவும் லேரியின் கனவு வேறாகவும் இருந்தது. அவரால் இன்னொருவருடைய கனவுலகில்...