Home » Archives for May 15, 2024

இதழ் தொகுப்பு May 15, 2024

நம் குரல்

மக்கு ஃபேக்டரி

கடந்த வாரம் முழுதும் சமூக ஊடகங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை வெளியிட்டுக்கொண்டே இருந்தார்கள். அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் இல்லாத பெற்றோர், தமது பள்ளிக்கால மதிப்பெண் தாளைத் தேடியெடுத்துப் பிரசுரித்து மகிழ்ந்தார்கள். இதில்...

Read More
உரு தொடரும்

உரு – 5

வேலையில்லாப் பட்டதாரி கல்லூரிப் படிப்பு முடிந்ததும், பத்தாண்டுகள் அரசாங்கத்துக்கு வேலை செய்ய வேண்டும். மாநில அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற்றுப் படிப்பவர்களுடன் அரசு இப்படியொரு ஒப்பந்தம் போட்டிருந்தது. முத்துவின் முதல் வருடக் கல்லூரிக் கட்டணத்துக்கு மலேசிய இந்தியன் காங்கிரஸ் உதவியது. அடுத்தடுத்த...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 5

5. புரியாதவற்றின் அதிதேவதை அந்த அச்சத்தை மட்டும் சரியாக விவரிக்க முடிந்துவிட்டால் என்னைக் காட்டிலும் சிறந்த எழுத்தாளன் இன்னொருவன் இருக்கவே முடியாது. ஆனால் அது சொற்களைத் தோற்கடிக்கவென்றே தோற்றுவிக்கப்பட்ட அச்சமாக இருந்தது. எப்போது அது கருவுற்று வளர ஆரம்பித்தது என்று சரியாகத் தெரியவில்லை. கவனிக்காத...

Read More
உலகம்

சதமடித்தாலும் பிழைக்க முடியாது

விறகுக் கட்டைத் தலையில் சுமக்கும் பெண்களும், சுள்ளி பொறுக்கும் சிறுமிகளும் இல்லாத ஊர்கள் உருவாகப் போகின்றன. சுயசார்பு என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, மின்சாரத்திலும் நனவாகப் போகிறது. சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், உலகின் முப்பது சதவீத மின்சாரத் தேவையைப் பூர்த்தி...

Read More
பெண்கள்

பெண் ஆடு பலி ஆடு

உங்களுடைய நீண்ட நாள் நண்பர், உங்கள் வெற்றியை, தொழில் திறமையை அறிந்தவர், இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற உன்னால்தான் முடியும் இந்த வேலையை ஒப்புக்கொள், எனக்காகச் செய்வாயா என்று மனம்விட்டுக் கேட்கும் போது என்ன செய்வீர்கள்..? மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு, நல்ல நிறுவனம், ஆனால் இப்போது...

Read More
தமிழ்நாடு

ஒரு தியேட்டரும் சில அக்கப்போர்களும்

‘லண்டனில் அமைந்துள்ள குளோபல் தியேட்டரின் வடிவமைப்பை ஒத்ததாக, இத்தாலிய கட்டிடக் கலையின் வழியில் கட்டப்பட்ட அரங்கம் சென்னையில் எங்கு அமைந்துள்ளது?’ என்று கேட்டால், பதில் சொல்வீர்களா? சொல்லலாம். மியூசியம் தியேட்டர். சென்னை எக்மோரில் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள மியூசியத்தினுள் இந்த நாடக அரங்கம்...

Read More
உலகம்

பேசினால் தாக்குவோம்!

மார்ச் மாதத்தில் இருந்தே ராஃபாவில் தாக்குதல் தொடங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தது இஸ்ரேல். தினமும் நடக்கும் தாக்குதல் போலல்லாது முழுவேகத்தில் உள்ளே நுழைந்து தாக்கும் திட்டம் அது. காஸா பாலஸ்தீனியர்கள், வடக்கு முனையில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து தென்கோடியில் உள்ள ராஃபாவில்...

Read More
உலகம்

ராஜபக்சேக்களின் ராகுகாலம்

இந்த வாரத்துடன் ஜனாதிபதி ரணிலுக்கும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சேவுக்குமிடையில் தேர்தல் உடன்பாடு தொடர்பாய் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டன. இப்படியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதனால் ரணிலின் வயிறுதான் ஒரு சுற்றுப் பருத்துப் போகிறதே தவிர கண்ட பலன் எதுவுமில்லை. மறு...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 5

5. ஓய்வுக்கால நிதி சிறுவயதில் ‘எறும்பும் வெட்டுக்கிளியும்’ என்று ஒரு கதை படித்திருப்பீர்கள், அல்லது, கேட்டிருப்பீர்கள். அந்தக் கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? காட்டில் ஓர் எறும்பு சுறுசுறுப்பாக உழைத்துத் தானியங்களைச் சேர்த்துவைக்கும். வெட்டுக்கிளியோ, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 100

100 பாவாடை நிழலுக்குள் ‘நம்ப எஸ். வைத்தீஸ்வரனோட டாட்டர் சத்யாவோட கிளாஸ்மேட்டாம்பா’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுக் குழந்தைபோலச் சிரித்தான், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மாதிரியே, புருவக்கூடலுக்குக் கீழே எல்லோரையும்போல பள்ளம் ஆகாமல், நேராகக் கோடிழுத்தாற்போல இறங்கும் தீர்க்கமான நாசி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!