Home » Archives for May 2024

இதழ் தொகுப்பு May 2024

நம் குரல்

இதுவா? அதுவா?

இந்தியாவில் குறை சொல்லப் பல்லாயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் சிலவற்றில் நம் மக்களின் உயரமே தனி. இந்த ஆண்டு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பொதுத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன, நடக்கவிருக்கின்றன. ஆனால் இந்தியப் பொதுத் தேர்தல் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருப்பதைக் கவனியுங்கள். கடந்த ஏப்ரல்...

Read More
உலகம்

பெரியண்ணன் என் நண்பன்: கென்ய அதிபரின் கதனகுதூகலம்

ரத கஜ துரக பதாதிகள் சூழ அக்கால மன்னர்கள் போருக்குச் செல்வது போன்று கென்யாவின் அதிபர் வில்லியம் ரூடோ சமீபத்தில் அமெரிக்க அதிபரைச் சந்திக்க முப்பது பேர் கொண்ட குழுவுடன் – அவரது மனைவி, மகள் மற்றும் ஒரு நகைச்சுவை நடிகரும் அடக்கம் – ஒன்றரை பில்லியன் மதிப்புள்ள போயிங் 737 ஆடம்பர ஜெட் விமானம்...

Read More
aim தொடரும்

AIM IT -7

நெஞ்சம் மறப்பதில்லை ‘கோபைலட்’ இதுதான் இந்த வாரம் ஏ.ஐ. வட்டாரங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல். காரணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘பில்ட்’ (Build) என்னும் நிகழ்வு. கூகுளின் ஐ.ஓ போலவே இதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த ஆண்டிற்கான பில்ட் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ஏ.ஐ...

Read More
இசை

ராஜ வாத்தியார்!

‘இசை எங்கிருந்து வருகிறது?’ என்ற ஆதாரக் கேள்வி, இந்தத் தலைமுறையில் நகைப்புக்குரிய இன்னொரு பழங்கேள்வியாக ஆக்கப்பட்டு அடித்துத் துவைக்கப்பட்ட ஒன்று. உலகின் எல்லா வகையான இசையும் இன்று நம் கையளவு உலகத்தில் ஒலிபரப்பப்பட்டு கேட்டு ரசிக்கக்கூடிய காலம் வந்துவிட்ட பிறகும், முன்பிருந்த அதே இசை ரசனையும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 106

106. நேரு – ராஜாஜி கருத்து வேறுபாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணி. இந்தியாவின் இரும்பு மனிதர் இதயத் தாக்குதலுக்கு உள்ளானார். நினைவு தப்பியது. சுமார் நான்கு மணி நேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பியது. “தாகம்! கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்!” என்று கேட்டார். மகள் கொடுத்த...

Read More
உலகம்

ஒரு விபத்து, ஒரு மரணம் – ஒரு கொலை?

தாடியும் தலைப்பாகையுமாகக் கருப்புநிற பி.எம்.டபிள்யு. காரில் வந்திறங்கியது அந்த மூவர் குழு. ஒரு மத நீதிபதி, ஒரு அரசு வழக்கறிஞர் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவர். ஊருக்கு வெளியே அமைந்திருந்த அந்தச் சிறைச்சாலையின் கைதிகள், இவர்களை மட்டுமே சந்தித்தனர்- கடைசியாக. ஒவ்வொருவராக வரிசையில் வந்தனர்...

Read More
உலகம்

சுவரின் மறுபக்கம்: ஒரு நாவல், ஒரு பரிசு, ஒரு சரித்திரம்

ஜென்னி எர்பன்பெக் ஜெர்மன் மொழியில் எழுதி, மைக்கல் ஹாப்மன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள ‘கைரோஸ்’ நாவல் புக்கர் பரிசினை வென்றுள்ளது. 53 வயது நாயகன். 19 வயது நாயகி. காப்பி குடிக்கப் போய் காவியக் காதலில் விழுகிறார்கள். பின் தெளிகிறார்கள். இன்னுமொரு முறையற்ற காதல் கதையாக இல்லை இந்நாவல். விருதுக்...

Read More
இன்குபேட்டர்

நாம் ஒருவர் நமக்கு இருவர்

மெய்நிகர் உலகில் விளையாடும் போது நமக்கென ஒரு அவதார் உருவாக்குகிறோம். அங்கு அந்த அவதார் நம்மைக் குறிக்கிறது. இந்த அவதார் நமது பொழுதுபோக்குக்கானதே தவிர நமக்கு வேறு எந்த விதத்திலும் உபயோகமற்றவை. டிஜிட்டல் ட்வின் என்பது இவ்வுலகில் இருக்கும் ஒரு பொருளை அப்படியே டிஜிட்டல் வடிவில் உருவமைப்பது...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 7

7. அவனும் அதுவும் ஆதியில் எங்கும் எதுவும் இல்லை. அல்லது எங்கிருப்பதும் தெரியாத அளவுக்கு கும்மிருட்டு சூழ்ந்திருந்தது. சூரியன் தோன்றியிருக்கவில்லை. பெருவெடிப்பு நிகழவில்லை. கிரகங்கள் உருவாகவில்லை. ஒன்றுமே கிடையாது. அமைதி என்கிற சொல் உருவாகாத காலத்து அமைதியைக் கற்பனை செய்துகொள்ள முடியுமானால்...

Read More
இந்தியா

இன்னும் எம்மை என்ன செய்யப் போகிறாய் அன்பே, அன்பே!

97 கோடி வாக்காளர்கள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மிக நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இந்தியாவை ஆளப்போகும் அடுத்த தலைவர் யார் என்பது அடுத்த வாரம் இதே நாளில் தெரிந்திருக்கும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!