கச்சத்தீவு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் யாராவது இதைத் தொடுவார்கள். கச்சத் தீவை மீட்போம் என்பார்கள். அதோடு விட்டுவிடுவார்கள். நம் மக்களுக்கு அரசியல்வாதிகளின் இயல்பு பழகிவிட்டபடியால் இதையும் எதையும் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நடந்தால் மகிழ்ச்சி; நடக்கும்போது...
இதழ் தொகுப்பு 6 months ago
காதலிக்காகப் பெரிதாக என்ன பரிசு தந்துவிடுவார்கள் நம் ஊரில்? ஒரு டெய்ரி மில்க், ஒரு டெடி பியர், அலங்காரப் பொருட்கள், சில போட்டோ ஃப்ரேம்கள் -இதுதான் நம்ம ஊர் லிஸ்ட். அமெரிக்கத் தொழிலதிபர் பேட்ரிக் தனது விஞ்ஞானி மனைவிக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடையாகத் தந்துள்ளார். இனி யாரிடமும்...
இந்தியப் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக இருப்பது உத்திரப் பிரதேச மாநிலம். அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்றத் தொகுதிகள் உடைய இந்திய மாநிலம். மத அரசியல் மையம் கொண்டிருக்கும் மாநிலமும் இதுவே. இதைப் பாரதிய ஜனதா கட்சியின் தனிப்பட்ட சாதனையாகக் குறுக்கிவிட முடியாது. காங்கிரஸ் கட்சிக்கும்...
‘நான் தோற்கின்ற சூது ஆடுவதில்லை. தேர்தல் வைப்பதே வெல்வதற்குத்தான்’ என்பது மகிந்த ராஜபக்சேவின் பொன்மொழிகளில் ஒன்று. தேர்தல் காலண்டரை அவரளவுக்கு மிகச் சாதுரியமாய்ப் பயன்படுத்தியவர்கள் யாருமில்லை. அவரது கிட்டத்தட்டப் பத்து வருட கால ஆட்சியில் வட மாகாண சபைத் தேர்தலைத் தவிர மற்ற அத்தனைத்...
ரமலான் மாதம் ஆரம்பித்தவுடன், இரவுச் சிறப்புத் தொழுகைக்குப் பள்ளிவாசல் நோக்கி சாரை சாரையாக இஸ்லாமியர்கள் செல்கிறார்கள். ஐந்து வேளைத் தொழுகையோடு இந்தச் சிறப்புத் தொழுகையான ‘தராவீஹ்’ ரமலான் மாதம் முழுக்க இரவுகளில் அனைத்து மசூதிகளிலும் நடக்கும். ஆனால் பாலஸ்தீனத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில்...
இருபத்திரண்டு இந்தியப் பணியாளர்கள், இரண்டு அமெரிக்கப் பைலட்டுகளுடன் அந்தக் கப்பல் புறப்பட்டபோது, அதுவொரு பெரும் விபத்தைச் சந்திக்கப் போகிறது என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. கப்பலில் பைலட்டா..? ஆம். சரிதான். பொதுவாக ஒரு சரக்கு கப்பல் துறைமுகத்தை நோக்கி வரும்பொழுதும், துறைமுகத்தை விட்டு...
சிறையில் இருந்துகொண்டே அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்வார் என ஆம் ஆத்மிக் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க, அப்படியெல்லாம் சிறையிலிருந்து ஆட்சி செய்ய முடியாதென டெல்லியின் துணை நிலை ஆளுநர் சொல்ல டெல்லி அரசியல் களம் இன்னும் சூடு குறையாமல் இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை மக்களால்...
2022 செப்டம்பரில் நடந்த தி.மு.க. பொதுக்குழுவில், அதன் தலைவர் ஸ்டாலின், `தி.மு.க.வின் முதல் எதிரி பா.ஜ.க.தான், அதை எதிர்க்கக் கட்சியினர் முழு மூச்சுடன் தயாராக வேண்டும்` என்று சொன்னார். கிட்டத்தட்ட அந்தத் தருணம்தான், தமிழகத்தில் கடந்த 45 வருடங்களாக தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மட்டுமே இருந்த...
“என்னைக் குதிரை லாயத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கு ஒரு தொழுவத்தில் குதிரை இருந்தது. இன்னொரு தொழுவத்தில் குதிரை போலவே நீண்ட முடியும், தாடியும் கொண்ட ஒரு மனிதர் இருந்தார். கூடிய விரைவில் எனக்கும் அதே கதிதான் என்பது புரிந்து விட்டது.” சிரியாவில் வாழ வழியில்லாமல், லிபியா வழியாக...
பலகோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறோமே, படாத பாடுபட்டு தேர்தலில் நிற்பதற்கு சீட் வாங்கப்போகிறோமே, ஏப்ரல் மாதத்து வெயிலைப் பொருட்படுத்தாமல் வீதி வீதியாய் அலைந்து, பார்ப்பவர்களின் காலில் எல்லாம் விழுந்து கும்பிட்டு ஓட்டுக்கேட்டு, ஒரு முப்பதுநாட்கள் இராத்திரி, பகல் வித்தியாசம் இல்லாமல், பேய் போல வேலை...